Pages

Saturday, 30 April 2011

அம்மா ....



அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

அம்மா ....
பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,

அம்மா....
அம்மா.....
அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

உன் அன்பின் கதகதப்பும், வலிக்காத தண்டனைகளும் இனி யாராலும் தர முடியாது..அம்மா..

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா" என்று சொல்லி ஆறுதல் அடைந்தேன்..??

நீ இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும் என் காலைநேர கனவில் வந்து அழகாக்குகிறாய் என் நாட்களை...
அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

No comments:

Post a Comment