Pages

Friday, 30 December 2011

ஆசை-


ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்திருக்க ஆசை
ஓயாது கதை பேசி
உன்னுடன் விழித்திருக்க ஆசை.
செல்லமாக சீண்டி உன்னைச்
சிணுங்க வைக்க ஆசை
நீ சிரிக்கும் அழகினிலே
சித்தம் பறிகொடுக்க ஆசை..
உறங்கும் போது
உன்னைத் தாலாட்ட ஆசை..
ஊரெல்லாம் உன் பேரை
சொல்லி வர ஆசை-
உன் கோபப் பார்வையிலே
குளிர் காய ஆசை.
கொஞ்சும் குரல் இசையில்
தினம் கூத்தாட ஆசை..
உன்னோடு கை கோர்த்து
உலகம் சுற்றி வர ஆசை..
உயிர் பிரியும் போதும்
உன் மடி சாய ஆசை...

No comments:

Post a Comment