Pages

Thursday, 8 March 2012

அன்பின் பிரிவுகள்!

நம் ஏக்கங்களின் காத்திருப்பில்
புதிய உதயங்கள் வந்தாலும்
நம் முகங்களின் சந்திப்பு
மகிழ்ச்சியை தந்தாலும்
நம் தொலை தூர பிரிவுகள்
உள்ளுக்குள் வாட்டுது
ஊமையாய் அழுகின்ற
மனங்களை பார்த்தபடி!

பிரிவின் ரணங்களை
பார்வையின் பரிமாற்றங்கள்
பக்குவப் படுத்தினும்
அருகிலில்லா ஏக்கங்கள்
அணுவணுவாய் கொன்றிடும்
ஆருயிர் நட்புக்குள்
ஆயுளுக்கும் வேண்டாமே
அன்பின் பிரிவுகள்!

No comments:

Post a Comment