Pages

Wednesday, 9 May 2012

நீ அவற்றிற்கு சொந்தமில்லை!

சிறகிருக்கும் பறவை நான்
சிறகிழந்த பட்சியாய்
வட்டமிட்டு சுற்றிட
வழியிருந்தும் இல்லையாய்!

நீ கொட்டிவிட்ட வார்த்தைகளை
மாலையாய் கோர்க்கையில்
மறுநொடி வாடிடும்
மலராக நான் இங்கு!

வார்த்தைகளின் கடினங்கள்
செவிகளை ரணமாக்க
ஊமையின் மொழியிலே
உள்ளுக்குள் பேசுகிறேன்!

மௌனங்களை கூட இங்கே
மொழிபெயர்க்க உறவிருந்தும்
ஊமையாய் உள்ளமிங்கே
உள்ளுக்குள் கலங்கிறது!

கனவுகள் கலையவில்லை
கற்பனைகள் சிறவில்லை
உறவுகள் பிரியவில்லை
அத்தனைக்கும் காரணம்
நீ அவற்றிற்கு சொந்தமில்லை!

No comments:

Post a Comment