Sunday, 21 September 2014

நீயாக ...

யாரோ வருவது போல்
ஒரு அரவம்...............
யாரோ பேசுவது போல்
ஒரு சத்தம்...............
யாரோ சிரிப்பது போல்
ஒரு ஒலி.....................
திரும்பி பார்க்கிறேன் - நான்
மீண்டும் மீண்டும்.............
அது நீயாக
இருக்க வேண்டும் என்று
கடவுளிடம் வேண்டியவாறு.

Friday, 15 August 2014

அம்மா ....

எனக்கொரு ஆசை..,
மீண்டும்
என் முதல் உலகிற்கு செல்ல...
நீர் சூழ்ந்த உலகம் அது..,
காற்று என்பதே கிடையாது , இருள்
நிறைந்த உலகம் அது ,
பயம் என்பதே கிடையாது..
அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்கை வெளிச்சமாய்
இருந்தது..
கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம்..
ஆனாலும் தனியாக இல்லை..
உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..
வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம்..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு..
மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை,
காதல் இல்லை ,
காமம் இல்லை..
இரவின் நிலவு போல,
அங்கு துணையாக யாரும் இல்லை ,
தனிமையை தவிர..
ஆனாலும் அங்கேயும் ,
நிலவை தாங்கும் வானம் போல
எனையும் தாங்க,
எனக்காக சுவாசிக்க , எனக்காக
உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன்..
என் தாய் ..
ஆம்..!
எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல்
உலகிற்கு செல்ல.....

Tuesday, 29 July 2014

பசி...

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்,
"கவலைப்படவில்லை" என
அப்பாவிடமும்,
"அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்,
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல
முடிந்தது..
"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு" என
# நண்பனிடம்
மட்டும் தான் கேட்க
முடிந்தது.....

Sunday, 13 July 2014

கனவில் மட்டும் ...

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டு
ம்
என்ற பேராசையினால்.....!

Sunday, 6 July 2014

ராஜி...

கவிதையை கூட வெறுக்கிறேன்...என் கவிதைக்கு கரு நீ என்பதால் ...என் இறுதி கவிதை ...பிரியமுடன் பிரியன்...காதலும் வேண்டாம்காதலியும்வேண்டாம்

Sunday, 4 May 2014

Varumaiyin niram...

மனசு வலிக்குது....
பெத்தவ பார்த்திருந்தா,
பத்தி எரிஞ்சிருப்பா!
அண்ணந் தம்பி பார்த்திருந்தா,
அப்பவே செத்திருப்பான்!
அக்கா தங்கை பார்த்திருந்தா,
அழுதே போய் சேர்ந்திருப்பா!
சொந்தக்காரன் பார்த்திருந்தா,
செத்தே போயிருப்பான்!
ஊருக்காரன் பார்த்தாக்கூட
உயிரையும் விட்டிருப்பான்!
யாரு பெத்த புள்ளைய்யா நீ....
என் மனசு வலிக்குது!
மனுஷ சாதிக்கு மட்டும்தாய்யா
சமபந்தி விருந்து அங்கே!
புத்தி கொஞ்சம் கொறஞ்சு போனா
சகல ஜீவனும் சமம் இங்கே!
இலவசத்த அள்ளி தந்து
ஏமாத்தி ஓட்டு வாங்கி
அரியணையில் அமர்ந்திருக்கும்
அரியவகை மனிதர்களே....
இலவசத்த கொறைச்சிக்கிட்டு
இவர் மாதிரி ஜீவனுக்கு
ஏதாச்சும் செய்யுங்கய்யா....
என்னமாச்சும் பண்ணுங்கய்யா!

Tuesday, 18 March 2014

பேரூந்து நிறுத்தத்தில் தவம் கிடக்கிறேன்

தோழியை செல்லமாய்
அழைத்தபடி பவ்வியமாக
என்னை கடந்துசெல்கையில்
தலை தாழ்த்திய
ஓரப் பார்வையாலும்
சிவந்த இதழ்களின்
சிறு புன்னகையாலும்
மலர் முகத்தின்
வெட்கத்தாலும் என்
ஆயுளின் நாழிகைகள்
நித்தமும்
புத்துயிர்பெற
நீ
கல்லூரி சென்றுவரும்
பேரூந்து நிறுத்தத்தில்

தவம் கிடக்கிறேன்

மௌனங்கள் மட்டுமே உன் பதிலாக இருக்கும்

காதலிப்பாய்
அந்த காதல் ஒருநாள் ஆழமான
காதலாய் மாறும் முன்பு
பிடிதவர்கள் எல்லோரும் இன்று
பிடிக்காமல் போவார்கள் இப்ப வந்த
இந்த
தேவதையை மட்டுமே உனக்கு பிடிக்கு
நாட்கள் போக போக இன்னும் பாசம்
கொள்வாய்
பகல் இரவு பார்க்காமல்
பேசிக்கொண்டே
இருப்பாய் பேச வார்தைகள் இல்லாத
போது
சண்டைகள் ஆரம்பமாகும்
சண்டைக்கு பின்
சேரும்போது இன்னும் உன் பாசம்
கூடும்
திருமணம்
ஆகமலே பாதி மனைவியாய்
நினைத்து பாசம் கொள்வாய் ஒண்ணு
சேராமலே ஓரிரு குழந்தையையும்
பெற்று கொள்வாய் அதற்க்கு உன்
பெயரினில் பாதியும் உன்னவளின்
பெயரினில் பாதியும் எடுத்து
ஒரு அழகான பெயரை பிறக்காத
குழந்தைக்கு
பெயர் சூட்டுவாய் ..காலையிலும்
மாலையுலும் நீ பேசும் நேரங்களில்
அந்த குழந்தையின் பெயரை சொல்லி
உன்னவளிடம் நலம் விசாரிபாய்
காலமும் காதலும்
ஓடிக்கொண்டே இருக்கும்
காதலியிடம் பேச வேண்டும்
என்பதற்காக
பாலமணி நேரம் செய்யவேண்டிய
வேலையை
சில மணி நேரங்களில்
செய்து முடிப்பாய்
கண்ணாடியை பார்த்து பார்த்தே உன்
பிம்பம்
கண்ணாடியிலே பதிந்துவிடும்
இணையத்தில்
வந்தால் காதல்
பாடல்களையே தேடி தேடி பார்ப்பாய்
என்நேரங்களிலும் உன்
தொலைபேசியில்
இருப்புதொகை இருந்துகொண்டே இர
அவளில் அழைப்பிற்க்க்காக
காத்துக்கொண்டிருபாய்
அழைப்பு வந்ததும் உன் காது சுடும்
வரை
விடாமல் பேசிக்கொண்டே இருப்பாய்
பேட்டரி லோ என்று வந்ததும்
எரிச்சலடைவாய் சில
வருடங்களுக்கு பின் இவள்லின்றி நீ
இல்லை என்ற காலம் ஒரு நாள் வரும்
அப்போது
இன்னும் அதிகமான பாசம் வைப்பாய்
உன்னவள் யார்கூட பேசினாலும்
கோபமடைவாய்
உன்னவள் உன்கூட
மட்டுமே பேசவேண்டும்
என்று உத்தரவிடுவாய்
(இது உனக்கே தெரியும்
தப்பென்று )இருந்தாலும்
அவள் மீது உள்ள அளவுக்கு அதிகமான
பாசம்
உன் கண்ணையே மறைத்து விடும்
இன்று
தொடங்கும் உன்னவளுக்கு உன்மீதான
வெறுப்பு
நீ வைத்த பாசம் எல்லாமே அவளின்
கண்களை
மறைத்துவிடும் பேசக்கூடாத கடும்
சொற்களால்
பேசுவாள் உன் மனதை வலிக்க
செய்யும்
உன்னைபோல் ஒரு சந்தேகம்
பிடிச்சவனை
இதுவரை பார்ததில்லை என்பாள் பல
வருடம் சிறுக சிறுக
சேகரித்து கட்டின
காதல் தாஜ்மஹாளை ஒரு சில
நிமிடங்க்ளில்
உடைத்தெறிவாள் ,மனசுக்கு பிடித்தவ
திட்ட மனம்வராமல்
மௌனங்கள்
மட்டுமே
உன் பதிலாக இருக்கும் இனி என்
மூஞ்சிலே
முழிக்காதே என்பாள் உன் எதிரிகளை

தேடி தேடி போய் பேசு

வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

வலிகளே வாழ்கையானதோ ?
அன்பே ! நிரந்தரம் உன் பிரிவு என்றால்
இன்றே மரிப்பேன் என் உயிரை !
விழிகளோரம் உன் நினைவுகள் கண்ணீராக !
விதி மட்டும் ஏங்குதடி உன்னையும்
என்னையும் சேர்க்க !

கண்ணில்லாத இந்த காதல்
என் கண்ணீர்க்கு மட்டும் சொந்தமானதேனோ !
உண்மையோடு பிறந்த இந்த காதல்
இன்று நடு வழியில் ஊனமாக !
என் வலியின் ஆழத்தை நான் அவளுக்கு
இதுவரை உணர்த்தவில்லை !
தாங்க மாட்டாள் அந்த பிஞ்சு இதயத்துக்கு
சொந்தக்காரி !

காதலித்து திருமணம் செய்து கொண்ட
அவளது பெற்றோர்களே ! உங்களுக்கு தெரியாதா ?
அளவிட முடியாத அந்த வலியின் ஆழம் !
மனம் முழுவதும் மணம் வீசிய என் ரோஜா
இன்று தனி அறையில் தனி மரமாக !
காரணம் இல்லாமல் பிரிக்க துடிக்கும்
உன் பெற்றோர் !

கண்ணீர் மட்டும் போதாதடி !
உன் நினைவுகளை அழிக்க !
என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு
நான் வலிகளை எழுதுவதில்
வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

Monday, 20 January 2014

kaathal vidumurai...

காலத்தின் விதியால்
காதல் விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு யுகமாக கரைகிறது
நிலவே உன்னை பார்க்காததால்
நிமிடங்கள் சென்று விடகூடாதா
காலங்கள் கரைந்து விடகூடாதா
நாம் மீண்டும் சந்தித்து விடகூடாதா
அக்கணம் உறைந்து விடகூடாதா
இப்படி என் மனம் குழம்பி தவிக்கிறது
நிமிடங்கள் செல்ல
கடிகார முள்ளை திருப்பினேன்
நிமிடமும் செல்லவில்லை
நாட்களை கழிக்க
நாளிகையை கிழித்தேன்
நாட்களும் நகரவில்லை
குளிர்காலமும் கோடை ஆனதே
கணமும் ரணமாய் மாறுதே
மெழுகாய் மனமும் உருகுதே
மெல்ல உயிரும் சாகுதே
பெண்ணே.....!
உன்னை பார்த்திடும் நாட்கள் காலம்
நதியாய் போல்
ஓடுவது ஏன்..............!
உன்னை பார்க்காத நிமிடம் காலம்
நத்தை போல் நகர்வதேன்....

posted from Bloggeroid

Monday, 6 January 2014

விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக
மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

posted from Bloggeroid

maathaviyin kannneer...

விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக
மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

posted from Bloggeroid

antha oru nimidam...

ஆயிரம் ஆயிரம் அலைபேசி
குறும் குறுஞ்செய்திகள்
அனுப்பியும் உன்னிடத்திலிருந்து
பதில் இல்லவே இல்லை...
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள் மணிகளானது...
மணிகளும் நேரங்களாகி
முப்பொழுதுகளை தின்றது...
உன்னிடத்தில் இருந்து
பதில் வராமல் போனதால்
பதட்டம் அதிகமாகி பின்
கலக்கம் குடிகொண்டது...
எப்படியும் தகவல் வரும்
என காத்துக் கிடந்த
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி
கோபங்கள் ஆத்திரமாயின...
அச்சம் விடை பெற்றப் பின்
உச்சம் அடைந்த ஏமாற்றம்
மிச்சம் சொச்சம் இருந்த உயிரை
துச்சமாய் மிதித்து துடித்தது...
அந்நேரம் அலைபேசியின் ஓசை
குறுஞ்செய்தியின் இசையாய்
ஒலித்து ஒளிர்ந்து எந்தன்
கவணத்தை திசைதிருப்பியது...
” போடா லூசு“ என்ற உன் ஒருவரி
கவிதை வந்து அத்தனையையும்
கல்நெய் காற்றில் கரைந்ததுபோல்
மறையச் செய்த மாயம்தான் என்ன?
என்னமோ போடி....
Z
(கல்நெய் - பெட்ரோல்)

Friday, 3 January 2014

எம் தாய் திரு நாட்டில் ....

வெக்கை
வெயிலில்,
ஆழமாய் அடிவயிறு
பசியில் தாளமாய்.,
பிஞ்சு குழந்தை
உண்ணும் உணவிற்க்கு,
மொட்டை வெயிலில்
சலங்கை கட்டி ஆடிய
கோலமாய் .,
ஒருவேளை கூட பசியாறாத,
பிச்சைக்கார குழந்தை
வயிறு பாலமாய் .,
இருப்பிடம் இன்றி
உழைப்பிடம் தேடி,
ஓடி சென்ற பாமரக்குழந்தை தண்ணீர்
இன்றி
தாகமாய் .,
பேருந்து சன்னல் ஓரம்
பெயர் இல்லா
கடவுள் குழந்தையின்
வாழ்க்கை சோகமாய்
போனதே..,
யாம் பிறந்த
பாரதத்தில் ... !

Published with Blogger-droid v2.0.10

Wednesday, 1 January 2014

முதியோர் இல்லம்

நேற்றைய உலகின்
குதிரைகள்,
காலச்சுழற்சியில்
முதுமை ஒட்டுக்குள்
பதுங்கும்
நத்தைகளாய்ப் போயின...!
உறவுகள் உதற
வெளியே விழுந்த இவர்கள்
பெற்றோர்கள்...!
உள்ளத்தில் ஊனமுடைய
குழந்தைகளைப் பெற்றவர்கள்...!
கவி வரிகளுக்குள்
கட்டுப்படாத
மனவலிகளை
சுமந்து நிற்கும் இவர்கள்
இனிஷியல் கொடுத்தவர்கள்
இதயமில்லா இளசுகளுக்கு...!
அடைகாத்த குஞ்சுகளே...
கொத்தி விரட்டியதால்
அடைக்கலம் தேடும்
இவர்கள்,
புறக்கணிக்கப்பட்ட ஏணிகள்...!
துடுப்புத் தொலைந்த
தோணிகள்...!
==========