ஒரேவரியில் சொல்ல முடியாத விளக்கம் காதல் .
காதல்
ஒற்றை வரியில்
சொல்ல முடியாத விளக்கம்.
காதல்
விளக்கம் சொல்ல முடியாத
விடயம்
காதல்
ஒரு பெயருக்குள்
இரண்டு உயிர்கள்.
காதல்ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்தல்.
காதல்
பூமிக்கு கிடைத்த வரம்.
காதல்
பூக்கள் தருகின்ற சுகம்.
காதல்
இருக்கிற உயிரிலேயே
இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல்
இன்னொருவரால் உணரவும்
நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல்
கேள்விகளுக்காய்
காத்திருக்கும் பதில்.
காதல்
இன்னும் இன்னும் என்கிற
இரண்டு உயிர்களின்
ஒரு புள்ளியிலான தேடல்.
காதல்
எவ்வளவு சொன்னாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வு…