Friday, 9 December 2011

எழுத வேண்டும் எழுதியே தீர வேண்டும்...


எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

.............

கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி

எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்

நீ ரசித்துச்சொன்ன
குழந்தை பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்

மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்

அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துகொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்

............

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை

என்னில் பொழிந்த மழையில்...

வெளிறச் செய்யும் 
டிராபிக் நெரிசலில் .. 
மறவாது எனையழைத்துச் சொன்னாய் 
சற்று முன் பொழிந்த 
ஆலங்கட்டி மழை குறித்து 

அருகிலிருந்தால் 
நீ நனைந்திருக்கலாம் 
மழைக்காகவோ 
உன் அழைப்பிற்காகவோ 
எதற்காகவோ 
என்னில் பொழிந்த மழையில்

நீ நிம்மதியாப் போ..


நமது தொலைபேசி
உரையாடலை
கேட்டுக்கொண்டிருக்கின்றன
நமக்குச் சொந்தமற்ற செவிகள்.
பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்
பதுங்கிக் கொண்டபின்
உலர்ந்து போன வார்த்தைகளில்
நிகழ்கிறது.
நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்
உன் ஒப்புதல் வாக்குமூலம்.

வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
உன்னிடம்
திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளை நீ
எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்
வாய் வரை வந்த
கேள்வியை விழுங்கிக்கொண்டு
மௌனிக்கிறேன்.
தணிக்கையாளர்களாலும்
ஒலிப்பதிவாளர்களாலும்
கண்டுகொள்ளமுடியாத
ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்
உதிர்கிறது..
தொலைபேசிகளை
நிறைக்கிறது
ஒரு நிம்மதிப்பெருமூச்சு..
நீ நிம்மதியாப் போ..

Thursday, 8 December 2011

தந்துவிடு இரவு நேர முத்தங்களை…


தொலைப்பேசியில்தான் என்றாலும்
உன் முத்தங்கள் வாங்காது
நகர்வதில்லை என் இரவுகள்…

சில சமயங்களில்
பக்கத்தல் ஆட்கள் இருப்பதற்காகவும்
பொது இடமென கருதியும்…
நீ முத்தங்கள் தராமல் விட்டு விட்ட
இரவுகளின் சிறகுகள்
சருகுகளாய் உதிர்ந்து போய்விடுகின்றன…

இனியாவது என் இரவுகளும் தூக்கங்களும்
கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க…
மறவாமல் மறுக்காமல் தந்துவிடு
எனக்கு மட்டுமேயான
உன் இரவு நேர முத்தங்களை…

காதல் பயணத்தில்....

திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,

மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!

ஒவ்வொரு முறையும்....

எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்

காதலுக்கு?

முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?

உன் பிறந்த நாளில்.....


பனிரெண்டு மணி தாண்டி
 அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே
 அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம்
 உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை 
என்பதை உன்னிடம் 
எப்படி சொல்வது?

உன் பிறந்த நாளின் நினைவு....


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு

ஒரு மாலையில்.....

ஒரு மாலையில் 
பூங்காவின் நெரிசலில் 
ஒரு ஓரமாய் நின்றிருந்தேன் 
நிஜங்களின் நிதர்சனங்களும் 
நிழலாடும் எண்ணங்களும் 
அலைகளாய் ஆடி சென்றன 
மனதுள்.... 
வார்த்தை பரிமாற்றங்களும் 
வசந்தத்தின் கற்பனைகளும் 
வாயிலின் முன் 
நேர் கோடுகளாய் 
வரிசையாய் சென்ற 
எறும்புகளின் தேடல்களும் 
எண்ணங்களின் இசை பாடல்களும் 
எல்லையில்லா ஆசையாய் .... 
வலை கிழிந்து கீழ் விழுந்த 
சிலந்தியின் வலியும் 
ஆதரவிழந்து தட்டேந்திய 
சிறுவனின் வலியும் 
கணக்கத்தான் செய்தது 
காத்திருத்தலாய்... 
எப்போதும் அந்த மரத்தின் அடியில் 
நிற்கும் கிழவியை காண வில்லை 
இன்று யாரும் இல்லை 
நாளை யாரோ..... 
நாளையும் செல்வேன் 
வலை பின்னிய சிலந்தியையும் 
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும் 
கண் முன்னே காண....

பெண்ணே நீ

பெண்ணே நீ 
கவிதையாய் மிளிர்கிறாய் 
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய் 
கற்பனைகள் அலை மோதும் 
கடலாய் தவழ்கின்றாய் 

காதலின் மெல்லிசையாய் 
கருத்துக்களின் கருவிடமாய் 
கண்மணி நீ உள்ளாய் 
காலத்தின் பெட்டகமாய் 

கவியான வாழ்வு தன்னில் 
கலக்கம் வேண்டாமடி 
கரை தன்னை நீந்திடுவாய் 
கண்ணீர் கூடாதடி 

வலியின் கொடுமை புரிந்து விட்டால் 
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி 
வளர்ந்து விடடி பெண்ணே நீ.. 
வானம் என்றும் அருகிலடி....

கண்ணீராய்....

உன்னுடனான நினைவுகளில் 
என்னுடன் நீ 
எப்பொழுதும் இருக்கிறாய் 
கண்ணீராய்....

தடம் ஒன்றாய்......

இருவராய் நடந்தாலும் 


தடம் ஒன்றாய்...... 


உன் வழிப்பற்றி 


என் பாதங்கள்......

தீப ஒளி தின வாழ்த்துக்கள்…


 
தீபத்தின் வெளிச்சம்
நம் இருளகற்றும் பொழுதுகளில்..
 
புத்தாடை.. பட்டாசு.. இனிப்போடு..  
குட்டிக் குறும்புகள் தித்திப்பு சிரிப்பு சிதறும் நொடிகளில்..
 
தினம் தினம் நில்லாமல் நகரும்  
நாட்களின் வரிசைகதியில்..  
சட்டென புது வசந்தமாய் வந்து  
புன்முறுவல் சிந்தும்..
பண்டிகை தினங்களின் தருணங்களில் எல்லாம்..  
 
நம் வாழ்வும் உறவும்
அழகடைகிறது இன்னும் இன்னும்..
 
பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்
பிரகாச தீப ஒளி  தின வாழ்த்துக்கள்…
 
 

தீப ஒளி தின வாழ்த்துக்கள்…


 
தீபத்தின் வெளிச்சம்
நம் இருளகற்றும் பொழுதுகளில்..
 
புத்தாடை.. பட்டாசு.. இனிப்போடு..  
குட்டிக் குறும்புகள் தித்திப்பு சிரிப்பு சிதறும் நொடிகளில்..
 
தினம் தினம் நில்லாமல் நகரும்  
நாட்களின் வரிசைகதியில்..  
சட்டென புது வசந்தமாய் வந்து  
புன்முறுவல் சிந்தும்..
பண்டிகை தினங்களின் தருணங்களில் எல்லாம்..  
 
நம் வாழ்வும் உறவும்
அழகடைகிறது இன்னும் இன்னும்..
 
பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்
பிரகாச தீப ஒளி  தின வாழ்த்துக்கள்…
 
 

நான் மட்டும் அல்ல.....

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

உன் மடி......

தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

ஒரு புன்னகை....

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!

ந‌ம் காத‌லோடு!!!

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!

சொல்லித்தான் தெரிய வேண்டுமா............?


தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..

கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..


மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..

Tuesday, 6 December 2011

"தேவதையாக"


என்னவளுக்கு... 
புடவை கட்டத்தெரியாது.! 

நான் சொன்னேன் என்று... 
அணிந்து வந்தாள்..!! 

"தேவதையாக" 

புடவையை மட்டும்மல்ல... 
கூடவே "வெட்கத்தையும்" தான்..!!!

உன் கனவில் .. ...


உன் கனவில் ..
வருவதற்கென்றே ...
அலங்காரம் செய்துகொண்டிருக்கிறேன் ...
என்ன அவசரமோ ..
இந்த சூரியனுக்கு ....
அதற்க்குள் வந்துவிட்டதே ......

காதலும் கவிதையும் ....


என்னுள்
எனக்கு தெரியாமல்
பிரதிபலித்தவை
இரண்டும்.

வார்த்தைகள்
இருந்தும்... நான்
முதன் முதலில்
தடுமாறியது
இதற்காகத்தான்!

உள்ளிருந்து
எனை,
கொன்றது
காதல்.

வெளி சென்று
எனை,
உயிர்பித்தது
கவிதை.

"ஆயிரம் காதல் கடிதம்"

அன்பே நான் உன் கையில் கொடுத்தது 
ஒற்றை காதல் கடிதம் 
என்றாலும் 
என் குப்பை தொட்டிகளை கேட்டுபார் 
அது கூறும் நான் உனக்கு எழுதியது 
"ஆயிரம் காதல் கடிதம்"

என்னை பிரிந்து..!!

வெகு தூரத்தில்... 
நினைவோடும்.! 

வெகு அருகில்... 
நிழலோடும்.! 

என்னுள் இணையமலேயே... 
எங்கிருக்கிறாய் என்னவனே.! 

என்னை பிரிந்து..!!

சில "நிமிடங்களுக்காக"...!


வார்த்தைகளுக்கு
வறுமையில்லை.
இருப்பினும்,
காத்திருக்கின்றேன்...
கவிதையெழுத.
நீ... எனை
கடந்து செல்லும்
அந்த சில
"நிமிடங்களுக்காக"...! 

பதில் சொல் என் அன்பே!


என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

ஒரு முறையாவது திரும்பி பார்


நீ என் கவிதைகளை
வாசிக்கவில்லை என்றால்
கூட பரவாயில்லை
கொஞ்சம் திரும்பி கண்
சிமிட்டி விட்டு போ..
என் கவிதைக்கான திறவுகோல்
உன் கண்களில் தான் உள்ளது
நான் விட்ட இடத்தில இருந்து
தொடர.....
காலமும் பூமியும் கூட
புரையோடலாம் நம்
காதல் புரையோடது
இந்த பூக்கோளம்
அழியும் வரை ...
முயற்சி செய்து வெற்றி
பெற காதல் பரிட்சை இல்லை
முடிந்த வரை அவளை
முற்றிலும் படித்து முடி
அது தான் வெற்றி
இலக்கணம் ....
கவிதை பேசி உன்னை
கவிழ்க்க முடியவில்லை
அதனால் தான் மௌனம்
பேசுகிறேன் சில நாட்களாய் .....
ஒரு முறையாவது
திரும்பி பார் நான் சிலை
என்று காக்க எச்சம் இட்டு
செல்லும் முன்...
உரைநடையில் பேசினாலும்
உன் பற்களில் எழுதுகோல்
கொண்டு உன் நாவில்
கவிதை எழுதுவதாய்
உணர்கிறேன் ..

முத்தம்.....


தத்தமது
செவிகளுக்கும்
கேளாது
உதடுகள் நான்கும்
பேசும்
இரகசியம் தான்
முத்தமோ?

தாய்மை.....


எங்கள் தாய்மையை தாலாட்ட
மன ஏழ்மையே வேண்டாம்
நேசத்தின் நாட்காட்டி
நினைவுகளில் தாலாட்டி
சோகத்தை சுவை மாற்றி
ஊக்கத்தை உணவாக்கி
நோக்கத்தில் நெறிகூட்டி
பாசத்தால் முடிசூடி
பரிவுக்கே வழிகாட்டி
நிகரில்லா சீமாட்டி
ஈரைந்து மாதம்
என்னுடன் பேசி
இறைந்து அல்ல
கரைந்து
உறைந்து போன
வலியில் வந்தேன்
வாரி அணைத்தாள்
உச்சி முகர்ந்தாள்
கொஞ்சி மகிழ்ந்தாள்
வலியை மறந்தாள்
தனிமை துறந்தாள்
இனிமை நிறைந்தாள்
தாயைத் தந்தான் இறைவன்...
தன்னால் எல்லோர்க்கும் இயலாதென்று
தாரம் தந்தான்... இறுதிவரை என்று
தாயே தாரம் என்றான்
அதுவும் போதாதென்று
அன்பைத்தந்தான்
அன்பே...! தாய் என்பதால்
அன்பே...! தான் என்பதால்

மூன்றெழுத்துக் கவிதை

மூன்றெழுத்துக் கவிதை அன்பு!
என்னை செதுக்கியவரிடமிருந்து எதிர்பார்ப்பது..
வாழ்க்கை எனும் பக்கங்களை நிரப்ப
எனக்கு வேண்டுமிந்தக் கவிதை!
தவறுகள் அனைத்தும் சரியாய்ப் போகும் இந்த
யுகத்தில் நான் சரி என எண்ணும்
சிந்தை மட்டும் தவறாய்ப் போகிறதே!
வண்ணங்கள் யாவும் என் வசம் மாறத்
துடிக்கும் இதயம் சொந்தத்துக்காக
கனவை எல்லாம் தொலைத்துவிட்டதே..
வெளியில் உங்கள் சிரிப்பு
எனக்கு இன்மை பயக்காது.
உள்ளே ஏற்பட்ட காயத்தையும் கண்ணீரையும்
என் கண்ணின் கரு துருவாய் அதைத் தாங்கும்
என் உள்த்தில் புதிய வாழ்வின் கோலம்
நீங்கள் ஏற்படுத்திய கண்ணீரின்
ஈரத்தால் அழிந்து போயிற்று!
பூவாய்ப் பூத்தது தவறா?
நான் மலர்ந்த செடியிடம் இருந்து
என்னைப் பரித்து தினம் தினம் வாட வைக்கிறீர்கள்!

என் தாயின் மடி!


அன்னை மடி...
துன்பம் போக்கி இன்பம் தந்த
இனிய மடி
சோர்வை போக்கி தெம்பை தந்த
தெளிந்த மடி
மடமை போக்கி அறிவை தந்த
அன்பு மடி
பயம் போக்கி துணிவை தந்த
தூய மடி
சோகம் போக்கி மகிழ்வை தந்த
மலர்ந்த மடி
தோல்வி போக்கி வெற்றி தந்த
வெள்ளை மடி
அதுதான் - என் தாயின் மடி!

வேண்டும்உன் அன்பு மட்டும்.


உன் கை குட்டையின்,
கால்பகுதி வேண்டாம்,
என் கண்ணீர் துடைக்க.
உன் முந்தானை,
முழுவதும் வேண்டாம்,
என் தூக்கம் முடிக்க.
முழுவதுமாகத்தான் வேண்டும்,
உன் அன்பு மட்டும்.

ஒரு பொய்யால்...........!

மனம் கவர்ந்து பேசிய நாட்கள்!........
இமைக்க மறந்து பார்த்த உருவம்!.......
விரல் சேர்ந்து இசைத்த கான்ங்கள்!....
அனைத்தும் கனவாய் போனது.....!
நீ கூறிய ஒரு பொய்யால்...........! 

Friday, 2 December 2011

அணு அணுவாய் சாகிறேன்.....


கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்
நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?
நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.

நம் காதல் நினைவுகலோடு.......!


மறக்க நினைக்கிறேன்.......!
உன் நினைவுகலை அல்ல.....!
உன் பிரிவால் நான் அனுபவித்த வேதனைகலை......!
நீ உன் புதிய வாழ்கை துனையோடு இன்பமாக இருந்தாலும் ,
நான் என் இறூதி வரை வாழந்திடுவேன் .........!
நம் காதல் நினைவுகலோடு.......!

என் தோல்விக்கான வடு....


சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன

என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி

உனக்குத் துணையாக
கூந்தல் பூக்கள் இருக்கின்றன
எனக்கு
ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான்
இறைவன்

நெருங்கி பழகிய நாட்கள்........!


கோழையாய் பிறந்தவனுக்கு
காதல் எதற்கு......!
அவளை விரும்பும்போது
வந்த ஆசைகள்....!
அவ்ளிடம் சொல்லும் போது
வந்த வீரம்........!
அவளுடன் கைக்கோர்த்து
சென்ற் தருணங்கள்....!
அவளுடன் நெருங்கி
பழகிய நாட்கள்........!
அனைத்தும் புதைந்தே போனது.....!
அவன் பெற்றோர் அவனுக்கு
வேரொரு பெண் பார்க்கும்
போது.....!

புது பேனா....9566520975


ஒவ்வொரு புது பேனா
வாங்கும் போதும்
ஒரு நொடி நீ என்னுள் வந்து போகிறாய்
நீ இட்ட பெயரை எழுதி பார்க்கையில் !

ஒரு சுக நரகம்..............!


உனக்காக காத்திருந்தேன்..........!
ஒவ்வொரு நிமிடமும்..........!
என் மேல் அனலாய் சொட்ட சொட்ட.....!
அது ஒரு சுக நரகம்..............!
உனக்காக கொண்டு வந்தேன் ஓர் ஒற்றை ரோஜா.....
நீ ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்க தாமதிக்க
ஒவ்வொரு இதழாய் கிள்ளி எறிந்தேன்.........!
தூரத்தில் வண்ண புள்ளியாய் நீ வருவதை கண்டேண்......!
இல்லையென்றால் என் இருதய ரோஜாவிலும்
வெரும் காம்பு தான் மீந்திருக்கும்...........!

பழைய சட்டை...


அவளின் கண்ணீரை துடைக்கக்
கைக்குட்டை கொடுத்தேன்
கருநிற சாயன்களோ அவள் முகத்தில்
அவள் ஐ விரல் ரேகைகளோ எனது கன்னத்தில்
பின்பு தான் புரிந்தது
கண்ணீரை துடைக்க நான் கொடுத்தது
கை குட்டை அல்ல
வண்டியின் கரை துடைக்க உதவும்
எனது பழைய சட்டைஎன்று

நனைகிறேன் உன் நினைவுகளில்....


நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்.
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து.
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது....
more sugapiriyan kavithaigal pls visit sugapiriyan.blogspot.com

வலிக்கிறது உன் நினைவுகள்....


வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?
அழுவது நான்
வலிக்கிறது என்கிறது
உன் நினைவுகள்
உணவு மறந்த காலங்களில்
உடல் களைப்பு அடைவதைப்போல
உன் நினைவுகள்
இல்லாதக் காலங்களில்
இதயம் களைப்படைந்து விடுகிறது

Thursday, 1 December 2011

“நான் உன்னைக் காதலிக்கிறேன்”


நாம் நம்
இதயத்தையும்
பெயரையும்
பிரிவைப் பற்றிச் சிந்திக்காமல்
மாற்றிக் கொண்டோம்
பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
காதலர்கள் எல்லோருமே
பொய் பேசுபவர்கள்தான்
எத்தனை ஆயிரம்
பொய்கள் பேசி இருப்போம்
அதில்
நீயும் நானும் சொல்லிக்கொண்ட
“நான் உன்னைக் காதலிக்கிறேன்”
என்பது மட்டும்
உண்மையாக இருந்திருக்குமா என்ன?

வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..


உன் உதடுகள்
என் உதட்டை
உட்படுத்திக்கொள்ளும்போதுதான்
எச்சில்கூட சூடாகிப்போகும்
வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..
உறங்கிக் கொண்டிருந்த
உண்ர்ச்சிகள்
விழித்தெழுந்தென்னை
விழுங்க ஆரம்பித்துவிட்டது..
இருவரது
மூச்சுக்காற்றும்
முத்தமிட்டுக் கொள்கிறது..
கண்ணிமைகள் நான்கும்
கைகுலுக்கிக் கொள்கின்றன..
கருவிழியிரண்டும்
தாறுமாறாய்
சுழன்று கொண்டிருக்கின்றன..
வெட்கங்கள்
ஒவ்வொன்றாய்
கழன்று கொண்டிருக்கின்றன....
உடுத்தியிருக்கும் உடைகள்
தானாக களைந்துபோக எத்தனிக்கின்றன..
உற்பத்தியான வியர்வை
மேடு பள்ளங்களைக் கடந்து
உயிர்வரை நனைக்கிறது..
இருவருக்கும் இடையில்
காற்று புக முயன்று
தோற்றுப்போகிறது..
heart heart
முத்தமே
மொத்தத்திற்கும்
முதற்படி..
முத்தங்கள் தீர்ந்து போனபின்
மொத்தத்தையும் தேடி
பயணிக்க வேண்டியிருக்கிறது..