Friday, 29 July 2011

நீ...

நீ...
என்ற எழுத்தைக்கூட‌
நிறுத்தமுடியாமல் நீட்டுகிறேன்.
உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர்க் கொடுக்கும் நோக்கத்தில்...!!!

எண்ணிக்கை தெரியவில்லை......

மரணத்திற்கு மருளும்
மனிதர்களே...........!
நான் காதலியை தேடினேன்
உண்மையான காதலியை தேடினேன்
கடசியில் கண்டெடுத்தேன்
உண்மையாகவே
அவள் மட்டும் தான்
என்னை உண்மையாக காதலிப்பவள்
பெயர் கேட்டால் பலர்
பேயறைந்தற்போல் நிற்பீர்கள்
இடைவிடா தூக்கத்தின்
இருப்பிடமான கல்லறைதான்
ஆம் இவள்தான்
என் காதலி
எத்தனைபேர் வந்தாலும்
கள்ளமில்லா உள்ளத்துடன்
வாய் திறந்து சிரிக்கிறாள்
சிறு குழந்தையை போலே
ஆனாலும் எனக்கு ஒரு
அல்ப சந்தேகம்
ஒருவேளை அவள்
காம கிழத்தியாய் இருப்பாளோ...?
உயிரை நேசிக்காமல்
உடலை மட்டும் அணைக்கிறாளே.......!
இன்னொறு சந்தேகம்
இவள் அசைவத்தை உண்டு
சைவத்தை தன்மேல் போர்த்தி
சத்தமில்லாமல் தூங்குகிறாளே.......?!
இவளின்
மதமென்னவோ.........?
இனமென்னவோ................?
இறுதி வரை சலிக்காமல்
இதழ் எடுக்காமல்
சத்தம் கொடுக்காமல்
எனக்கு வலிக்காமல்
முத்தமிடும் இவளை தான்
எந்த பிரச்சனையும் இன்றி
துணிவுடன் காதலிக்கலாம்;
அவள் வேசிதான்
அவளின் அணைப்பில்
யாருக்கும் பேதமில்லை என்பதால்
வெட்கமில்லாமல் சொல்கிறேன்
நான் வேசியின் காதலன்
அவளை முத்தமிட
ஆவலுடன் காத்திருந்து
அவள் விரும்பாத உயிரை
மரணதூதனுக்கு மாலையாக்கிவிட்டு
மல்லார்ந்து அவள்
மார்பில் சாய்ந்து
அவளின் சத்தமில்லா
முத்தத்தில் சமாதியாவேன்
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பு
வரும் நாளை நேக்கி......
இப்படிக்கு
எத்தனையாவது என‌
எண்ணிக்கை தெரியவில்லை
என்றாலும் உன்
அன்புகாதலன்.... heart

என்னைதவிர.

நீ வரைந்தனுப்பிய‌
ஓவியத்தை
யாரோ பறிமுதல்
செய்துவிட்டனர்
ஆனால்
உன்
விழிவரையும்
ஓவியத்தை யார்
பறிமுதல் செய்ய இயலும்
என்னைதவிர.

வேண்டுமென்று வேண்டுகிறேன்...........

காதலை எண்ணி
கசந்த நாட்களை வாழ்ந்து பார்கிறேன்,
நீ இல்லாத இந்த பொழுதில்.
கசக்கின்ற இனிய நினைவை
பத்திரமாக பதிய வைக்கிறேன்,
எழுத்தால் இதிலும்,
வலியால் மனதிலும்.
வாழ முயன்றும் வாழ பிடிக்காததால்
நான் துடிக்கும் இந்த இனிய
பொழுதே போதுமடி நான் இறக்க.
உந்தன் பேச்சின் ஓசை
மட்டும் என் மனதில் இனிமையாய் எழ
என் நெஞ்சம் வேகமாய் துடிக்கிறது
உன்னை காண,
நானும் நினைத்தேன் நீ என்னையே
நினைப்பாய் என்று, ஆனால்
உன் மனம் என்னை மறுக்க
நான் எண்ணும் எண்ணெமெல்லாம்
உன்னை வெறுக்க முடியாமல்
துடிப்பதை நினைத்து
வருந்துகிறேன் நீ என்னை விட்டு
பிரிந்து செல்ல வேண்டுமென்று வேண்டுகிறேன்...........

காதலில் ஒரு தாய் தான்...

கல்லறை மீது
கண்ணீர் துளிகள்
எழுதும் வரிகளின்
பொருள் என்னவோ...?
வரிகளில் சொரிந்திருப்பது
காதலின் வலிகள் அல்லவோ...........?!
கண்ணீர் துளிகளின்
நிலையென்னவோ....?
அவை
உள்ளிருக்கும் உயிரை
உசுப்பி எழுப்ப
உதிரும் உளிகளோ........?!
நெடுநாள் தூங்காத தூக்கத்தை
இந்த இறுதி தூக்கத்தில்தான்
ஈடுகட்ட இங்கு வந்தாயோ......?
விடையில்லா கேள்வியின்
இருதியில் இட்ட
வினாக்குறியின் பக்கத்திலேயே
முற்று புள்ளியாய் முடிந்துவிட்டது
அவளின் இன்பங்களும்
வலியின் மடியிலே
வருத்தத்தின் பிடியிலே
படுத்திருக்கும் அவளின்
தூக்கங்கள் விலைபோகாமல்
விற்பனைக்கு வருகின்றன;
இலவசமாய் எடுத்துக்கொள்ள‌
எவரும் இல்லாமல்
இனி அவள் ஒருதாய்‍_ ஆம்
அவள் அப்படித்தான்
உயிர்ப் புணர்ந்து உருவான‌
காதலென்ற‌
பிறக்காத கருவின்
பிஞ்சுகால் நகம் கடிக்கும்
இவளும் காதலில்
ஒரு தாய் தான்
அடடே...தூங்காமல்
ஏன் அவள் அழுகிறாள்....?!
ஓ.........
அவனின் தூக்கத்திற்கு
இவள் சின்ன சின்ன
விசும்பலில்
தாலாட்டு பாடுகிறாளா.....?

மறக்கிறேன்.....

வெறுக்கிறேன்
வெறுப்பதை மறைக்கிறேன்
மறைக்கிறேன்
மறைப்பதை மறுக்கிறேன்
மறுக்கிறேன்
மறுத்ததை மறக்கிறேன்
மறக்கிறேன்
வெருத்ததையே மறக்கிறேன்

நீண்டு இருக்கின்றன......

உன்னை
நினைப்பதில் பாதி
உன்னை
மறப்பதில் பாதி
இப்படியே கழிகிறது
என் ஆயுள்
•மலர்த் தொடுக்கிறாய்
உன் சுவடுகளைத்
தொடர்ந்து வரும்
என்னைப் போலவே
அந்த வாழை நார்
•கூண்டை கட்டி முடிக்க
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை
கூடு திரும்பாததுபோல
நீ
•உன் அழகை
கண்ணாடியில்
ரசித்துக்கொள்கிறாய்
உன் தோட்டத்திலும்
ஒரு கண்ணாடி வை
பூக்களும்
தங்கள் அழகை
ரசித்துக்கொள்ளட்டும்
•வரம் தந்த சாமிக்கு
அப்போது
கண் இல்லை
இப்போது
வாய் இல்லை
•நான்
பழைய நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
தெளிந்த பைத்தியமாய்
•எனக்குத் தெரியும்
என் உயிர்
எந்தத் திசையை நோக்கிப்
போகும் என்று
•நீ
தலைவிதி என்கிறாய்
சோதிடன்
கை ரேகை என்கிறான்
குடுகுடுப்பைக்காரனோ
போன ஜென்மம்
குறித்துப் பேசுகிறான்
•நினைவுகள்
திரும்பி பார்க்கின்றன
நீண்டு இருக்கின்றன
மாலை நேரத்து
நிழல்போல

உன் நினைவுகள்.

அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.

வாழ்த்துவீர் காதலர்களை!

காதல் காதல் காதல்
விளக்கில்லை விதிமுறையில்லை
அதன் தொடர் நீளும்
அனைத்து ஜீவனுக்கும்
உற்றது உகந்தது!
ஒருகிளையில் ஒரு ஜதை
நிம்மதியாய் நிதானமாய்
ஜாகை மாறாமலமர்ந்து
அன்பாய் காதலிக்கும் பறவைகள்!
பொறாமையில் எம்மினம்
எப்போது எம் காதலர்கள்
அஞ்சாமல் காதலிப்பது
இப்பறவைகள் போல்!
இயற்கை இவைகளுக்கு மட்டும் தான்
சுதந்திரம் கொடுத்துள்ளதா?
மனிதனுக்கு மட்டும் விதிவிலக்கா
காதலிப்பவருக்கு எப்போது
விடிவுகாலம் சொல்லுங்கள்!
இப்பறவைகள் காதலுக்கு
மரியாதை கொடுப்பது போல்
எம் மனித குல காதலுக்கும்
மரியாதை கொடுங்கள்!
மனித காதல் வாழ்க!
போற்றுங்கள் மனிதர்களே காதலை
உயிரினங்களின் ஒப்பற்றவர்களே
எப்போது வாழ்த்துவீர் காதலர்களை!

உயிர் வாழுவேன்...

செந்தமிழ் பூமானே,
பூக்களின் செந்தேனே,
கம்பனும் சொல்லாத,
கவிதை உன் னிதழானதே...

நித்திரைக் கொள்ளாது,
நேரமும் செல்லாது,
நித்தமும் தடுமாறி,
காதலில் கரைகின்றனே...
உயிரினில் உனை வைப்பதா,
உருகியே நிதம் காய்வதா,
மடியோடு தலைசாய்த்து கொண்டாலென்ன,
உணர்வோடு உயிராக கலந்தாலென்ன...
நிலாக் கூட்டம் பக்கம் வந்து,
எனை நோக்கி சிரிக்கக் கண்டு,
நிதம் உனை ரசிப்பேனே பூங்கொடியே...
உனக்காக ஏங்கும் நெஞ்சம்,
உயிராக எண்னும் என்றும்,
மறக்காமல் போகாதே ஆருயிரே...
கண் பார்க்க காதல் வந்து அணைக்கின்றதே,
இடம் மாறி இதயம் நூறு துடிக்கின்றதே...
எனக்காக வாழ்க்கைத் தந்தால்,
உயிர் வாழுவேன்...

உன் உறவுக்காய் ஏங்குகிறேன் ......

வேண்டி கொள்ளும் தெய்வம்
வேண்டிய வரங்களை எல்லாம்
கொடுப்பது இல்லை.....
என் உயிர் உன்னில் கலப்பதும்
உன் உயிர் என்னில் கலப்பதும்
காதலாம்...
நாம் கலக்கப்பட கூடாது
காதல் கடலில் கவிழ்க்கப்பட வேண்டும்...
உன் ஒற்றை சொல்லில்
என் உலகம் உயிர் பெரும்...
ஆம் உன்னிடம் வேண்டுகிறேன்
அந்த ஒற்றை சொல்லுக்காய்...
தள்ளி நிற்கிறேன் உன் தாவணி
தடம் பதித்த சுவாசம் சுகம்காண
உன் ஒவ்வொரு சுவாசத்திற்கும்
உயிர் கொடுக்க காற்றும்,
உன் கால் தட பதிவுகளுக்காய்
பாதையும் சண்டையிட்டு கொல்லும்
சத்தம் கேட்கிறேன்.....
நீ தீண்டிவிட்டு செல்லும் சிறு செடி கூட
சிலிர்க்கிறது சிறு பனித்துளியாய்
நான் மதிக்கும் நினைவுக்குள்
நீ மட்டும் சுவாசப்படுகிறாய்
நீ மட்டும் ஏன் வேண்டாத
வரங்களை எல்லாம் தருகிறாய்
உறவுகளுக்கு ஏங்கும் முதியவனை போல்
உன் உறவுக்காய் ஏங்குகிறேன் வேண்டிகிறேன்
காதல்(லி) தெய்வமே ....

தூரத்தில் ஒன்று துக்கத்தில் ஒன்று........

காதலில் தோற்றவர்
கண்ணீர்தான் கடலோ !!
காதலில் வென்றவர்
தொட்டதுதான் வானமோ !!
தூரத்தில் ஒன்று
துக்கத்தில் ஒன்று
தோல்வியும் வெற்றியும்
தொடருது இன்னும் !!

"விருந்தே உண்டு"

அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!
அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!
அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!
அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!
அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!

உன் இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"

நீ
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
"பதில்....?!"
எனக்கோ
"நீதான் வேண்டும்"
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ
திட்டி அனுப்பிய
குறும்செய்திகளை கைபேசியில்
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?"
என்றாய்.
"தயவு செய்து அழித்துவிடாதே
என்மீது
நீ எடுத்துகொள்ளும்
அதீத உரிமையின் அடையாளம்தான்
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய்
புன்னகைத்தபடி..!!
****************************************
பார்க்க வருவதற்குள்...
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என
நூறு முறை குறும்செய்தி
அனுப்பி விடுவாய்...
நானோ
பதிலே அனுப்பாமல்
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன்
"எப்போதும்
உன்
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"
என கண்ணடித்து.

திரும்பியே பார்க்கவில்லை.........

அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு.
மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
குழம்பி போன மனநிலையோடு அவன்.
எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.
அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.
அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
பார்க்க கூடாது என நினைக்கிறான்.
இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
நீரினுள் படகு போல நடந்தாள்.
ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.
போனில் மனைவியாய் பேசுபவள்
இன்று
தூரத்தில் சென்று மறையும் வரை
திரும்பியே பார்க்கவில்லை.

உன்னை மட்டுமே நினைக்கிறேன் .........

எழுதப்படாத காகிதமாய்
என் உள்ளம் இருந்தபோது
நீ வந்தாய்................
ஒற்றைக் கவிதையாய்..
என் கிறுக்கலான கையெழுத்தும்
கூட கவிதையாகின்றது
உன் பெயரை மட்டும் எழுதுகையில்.
வேலை நிமித்தமாக
வேறொன்றை எழுத நினைத்தாலும்
விரல் உன் பெயரை மட்டுமே எழுதுகின்றது.
அப்பொழுதுதான் அறிந்தேன்
நான் எப்பொழுதுமே
உன்னை மட்டுமே
நினைக்கிறேன் என்று.
நீ உச்சரித்த போதுதான்
என் பெயர் கூட
அழகோ????? தோன்றியது .

என்ன சந்தோசம்.....

காகிதத்தில் இருக்கும்
கவிதையின் மகத்துவம்
கழுதை அறிவதில்லை
அதுபோலதான் நானும்
உன் காதல் தீண்டும்வரை
இப்போதெல்லாம் ........................
காகிதங்கள் போதவில்லை கவிதை எழுத
கட்டுடைத்து பாயும்
காட்டாறாய் கவிதைகள்
மொட்டுடைத்து பூக்கும்
பூவிலே மோகம்
அதை தேடி ஓடிவரும்
வண்டிடம் கோபம்
காரணம் .............
என்னவள் அருகில் இல்லை
பின் வண்டுக்கு மட்டும் என்ன சந்தோசம்

இது...... காதலோ?????????

உன்னை பார்த்த நொடிமுதல்..........
பசியில்லை உறக்கமில்லை பொழுதுகளும் நகரவில்லை
நினைத்த கவிதைகளை எழுத
வார்த்தையும் கிடைப்பதில்லை.
காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
காரணம் கேட்டேன் என்னிடமே நான்
காரணம் புரிந்தது நீதான் என்று.
அட..... இது...... காதலோ?????????

மாண்டுதான் போனது மண்ணில்....

என்னவளே..
உன்னை
தொட்டுப் பார்க்க
ஆசைப்பட்டு
கனமழை கூட
மௌனமாய்
வந்தபோதும்...,
நீ
குடை பிடித்ததால்
உன்னை
தொட முடியவில்லையே
என்ற வருத்தத்தில்
மாண்டுதான் போனது
மண்ணில்....

Thursday, 28 July 2011

"அன்றைய காதலர்கள்"

பெண்ணே...!
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்"

உன்னைப் பற்றி எழுதியதற்காக...

உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...

வாழ்க்கையின் பொருளும் நீதான்...

அன்பே................
நம் இருவருக்கமான நெருக்கம்??????
உடலும் உயிரும் போல்.
உயிரின்றி உடலில்லை
உயிரே.....
நீயின்றி நானில்லை.
அன்பே.....................
நம் இருவருக்கமான தூரம்??????
காற்றும் கடலலையும் போல்.
கடலின்றி காற்றில்லை
காற்றின்றி அலை உயிர் பெறுவதில்லை.
அன்பே குழம்பாதே....
இடைவெளி என்பது நமக்கில்லை.
நம் இருவருக்குமிடையே
என்றாவதொரு நாள் இடைவெளி
சிறுகடுகாய் முளைத்தாலும்
என்னுடல் உயிர்திருக்கவில்லை
என்றே பொருள். heart
ஆம்.............
என் வார்த்தையின் பொருளும் நீதான்...
வாழ்க்கையின் பொருளும் நீதான்...

காதல் குழந்தையாய்....!!

விழுந்து விட்ட பின்பும்
எழுந்திருக்க
ஆசை இல்லை காதலில் ...
தாங்கி
பிடிக்க தாய் போல் அவள்
இருப்பதால்
நிரந்தரமாய் விழுந்து
கிடக்கிறேன்
அவள் மடியில் காதல்
குழந்தையாய்....!!

புயலாக மாறி என்னை வீழ்த்தியது .....

நீ பேசும் ஓசை கேட்க பூக்களிடம் கதைகள் பேசினேன்
பூக்கள் கூட என்னை வெறுத்தன...
நீ சிரிக்கும் ஓசை கேட்க கடல் அலைகளிடம் சிரித்தேன்
அலைகள் கூட மௌனம் ஆகின
நீ சிணுங்கும் ஓசை கேட்க சாரல் மழையில் நனைந்தேன் ...
வானம் கூட வெறிச்சிட்டு என்னை வெறுத்தது
நீ சொல்லும் சொல்லை கேட்க தென்றல் சொல் கேட்டேன்
புயலாக மாறி என்னை வீழ்த்தியது ........

மௌனம் கொள்கிறதே .....?


காலை வேலையில்...
உன்  கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
என் இதய  துடிப்பு சிலிர்க்க உன்  இதயம் நினைத்து சிலிர்கவில்லையா? 
உன் மனம் உணர என் மனம் விதும்புகிறதே  ?
என் மன அலைகள் உன்னை சேர தவள உன் மன அலைகள் தவழவில்லையா ?
உன் அன்புக்காக என் அன்பு உனதன்பை வரவேற்க பூரிகிறதே ?
என் நினைவுகள் உன் நினைவுகளை எண்ணி எண்ணி நிகழ்கிறதே ?
உன் குரல் ஓசை கேட்க என் குரல் மௌனம் கொள்கிறதே ?

என் தனிமையைக் கொன்று விடு..!

மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!

காதலை கூறிவிட வேண்டும்.....

உன் மூச்சுக்காற்று
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.

Monday, 11 July 2011

காதல் செய்வீர்.....!!!"

மணிக்கொரு முறை
கடிகார முட்களில்
முத்தசத்தம்
சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை
இங்கு இன்னும் யாராவது
காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் த‌யார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
முன்சென்ற பேருந்தின் பின்
மூன்று வார்த்தையில் ஹைக்கு
"ஆதலினால்
காதல்
செய்வீர்.....!!!"
அரசாங்கத்தின் இலவச பிரசாரம்