Friday, 29 July 2011

எண்ணிக்கை தெரியவில்லை......

மரணத்திற்கு மருளும்
மனிதர்களே...........!
நான் காதலியை தேடினேன்
உண்மையான காதலியை தேடினேன்
கடசியில் கண்டெடுத்தேன்
உண்மையாகவே
அவள் மட்டும் தான்
என்னை உண்மையாக காதலிப்பவள்
பெயர் கேட்டால் பலர்
பேயறைந்தற்போல் நிற்பீர்கள்
இடைவிடா தூக்கத்தின்
இருப்பிடமான கல்லறைதான்
ஆம் இவள்தான்
என் காதலி
எத்தனைபேர் வந்தாலும்
கள்ளமில்லா உள்ளத்துடன்
வாய் திறந்து சிரிக்கிறாள்
சிறு குழந்தையை போலே
ஆனாலும் எனக்கு ஒரு
அல்ப சந்தேகம்
ஒருவேளை அவள்
காம கிழத்தியாய் இருப்பாளோ...?
உயிரை நேசிக்காமல்
உடலை மட்டும் அணைக்கிறாளே.......!
இன்னொறு சந்தேகம்
இவள் அசைவத்தை உண்டு
சைவத்தை தன்மேல் போர்த்தி
சத்தமில்லாமல் தூங்குகிறாளே.......?!
இவளின்
மதமென்னவோ.........?
இனமென்னவோ................?
இறுதி வரை சலிக்காமல்
இதழ் எடுக்காமல்
சத்தம் கொடுக்காமல்
எனக்கு வலிக்காமல்
முத்தமிடும் இவளை தான்
எந்த பிரச்சனையும் இன்றி
துணிவுடன் காதலிக்கலாம்;
அவள் வேசிதான்
அவளின் அணைப்பில்
யாருக்கும் பேதமில்லை என்பதால்
வெட்கமில்லாமல் சொல்கிறேன்
நான் வேசியின் காதலன்
அவளை முத்தமிட
ஆவலுடன் காத்திருந்து
அவள் விரும்பாத உயிரை
மரணதூதனுக்கு மாலையாக்கிவிட்டு
மல்லார்ந்து அவள்
மார்பில் சாய்ந்து
அவளின் சத்தமில்லா
முத்தத்தில் சமாதியாவேன்
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பு
வரும் நாளை நேக்கி......
இப்படிக்கு
எத்தனையாவது என‌
எண்ணிக்கை தெரியவில்லை
என்றாலும் உன்
அன்புகாதலன்.... heart

No comments: