Sunday, 29 December 2013

karu maariyavargalin kanneer...

கட்டாயம் வாசியுங்கள்
கருமாறி பிறந்தவர்கள்
கவலையிது
*
வருடத்திற்கோர் தாலி
எம் கழுத்தில்
ஒருவனே சொந்தம் எமக்கு
இன்நாளில் !!!!!!
இருந்தும் இராத்திரிகளுக்கு
சொந்தமில்லை நம்முடல்!!!!
ஏனோ தாலிகள் மட்டும்
தவறுவதில்லை
வருடத்தில் ஓர்முறை....
காய்கின்ற இழைகள்
கணநேரம் இருக்கவில்லை
எம் கழுத்தில்!!!!!
கட்டியவன் கைகளே
வெட்டிவிடுகின்றன
அவைகளை.....
இருந்தும் விதவைகள்
ஆகவில்லை நாம்...
எமக்கோர் அற்புதவாழ்வு
இருந்தும் அவசரத்திற்க்கு
ஒதுங்க அவனியில்
இடமுமில்லை
அரசாங்கம் ஒதுக்கவுமில்லை...
எம்முடல்கள் சிவன்பாதி
உமைபாதி......
பிரம்மன் ஏனோ
பித்தனாகிவிட்டானோ!!!!!!!
பிதா செய்ததவறால்
பிழையாய் பிறந்தோமோ!!!!
விடைகாணா விசித்திரம்
நாங்கள்.....
நாமென்ன பிழைசெய்தோம்!!!
நமக்கு
நாவிருந்தும் பயனில்லை...
கூத்தாண்டவா கூத்துக்கள்
வேண்டாமென்று கூறு
சிவவிஷ்ணுவிற்க்கு...
தாலிகள் நிலைக்கவேண்டாம்
எமக்கு
தரணியில் தன்மானம்
கிடைத்தால் போதும்...
தலைநிமிர்ந்து வாழ்வோம்
அர்ஜீனன் பரம்பரை
நாமென்று

Friday, 27 December 2013

alagi thevai...

எனக்கு ஓர் அழகி தேவை.....
அனால்,
கருவண்டு கண்கள் தேவையில்லை,
குறும்பு பார்வை தேவையில்லை,
வில்லாய் வளைந்த புருவங்கள் தேவையில்லை,...
சிரித்து பேசும் உதடுகள் தேவையில்லை,
அணைக்கும் அழகு கரங்கள் தேவையில்லை,
அழிந்து போகும் வெளிப்புற அழகுகள் தேவையில்லை,
ஆயினும்,
எனக்கு ஓர் அழகி தேவை.....
கருணையான கண்கள் தேவை....
மென்மையான பார்வை தேவை....
மொழி கொண்ட புருவங்கள் தேவை...
அன்பு மொழி பேசும் உதடுகள் தேவை....
அரவணைக்கும் கரங்கள் தேவை....
மாறாத அன்பு மனம் தேவை....
மொத்தத்தில், இதயத்தால் அழகைக்கொண்ட,
அழகியே நீயே, என் வாழ்கை துனைவியாய்..... தேவை

Published with Blogger-droid v2.0.10

alagi thevai...

எனக்கு ஓர் அழகி தேவை.....
அனால்,
கருவண்டு கண்கள் தேவையில்லை,
குறும்பு பார்வை தேவையில்லை,
வில்லாய் வளைந்த புருவங்கள் தேவையில்லை,...
சிரித்து பேசும் உதடுகள் தேவையில்லை,
அணைக்கும் அழகு கரங்கள் தேவையில்லை,
அழிந்து போகும் வெளிப்புற அழகுகள் தேவையில்லை,
ஆயினும்,
எனக்கு ஓர் அழகி தேவை.....
கருணையான கண்கள் தேவை....
மென்மையான பார்வை தேவை....
மொழி கொண்ட புருவங்கள் தேவை...
அன்பு மொழி பேசும் உதடுகள் தேவை....
அரவணைக்கும் கரங்கள் தேவை....
மாறாத அன்பு மனம் தேவை....
மொத்தத்தில், இதயத்தால் அழகைக்கொண்ட,
அழகியே நீயே, என் வாழ்கை துனைவியாய்..... தேவை

Published with Blogger-droid v2.0.10

ivargalum poraligalthaan...

இவர்களும்
போராளிகள்தான்...!
ஆழ்ந்துறங்கும் சூரியன்
எழுந்திருக்கும் முன்
ஆயுதங்களோடு....
கொளுந்துக்
களத்திற்குச் செல்லும்
இவர்களும்
போராளிகள்தான்...!
ஒழிந்திருந்து
குளிர்க் குண்டு வீசி
உடல் துளைக்க முயலும்
பனி மூட்டங்களை
துப்பட்டாவால்
துரத்தியடிக்கும் இவர்களும்
போராளிகள்தான்...!
மலைச் சரிவுகளில்
தேயிலைத் தளிர்களில்
தன் சோற்றுப் பருக்கைகளைத்
தேடியலையும்
இவர்களும்
போராளிகள்தான்...!

Published with Blogger-droid v2.0.10

Sunday, 15 December 2013

kallarai....

என் மரணத்தில்
உன் மலர் வளையம்
வந்தாலும்
மன்னிக்காது என் ,,,,
உயிர் ,,,
நீ பேசிய வார்த்தைகளை,,,
மறந்திடாதே ,,,

Published with Blogger-droid v2.0.10

ithalgal...

என் விட்டு பூக்களும் இலைகளும்
அவ்வப்போது உன் இதழ்களாக
மாறிகொள்கின்றன நான்
கொஞ்சிக்கொள்ள...

Published with Blogger-droid v2.0.10

Saturday, 14 December 2013

penmaiyin vasanai suvai....

அன்றொருநாள்
என் வீட்டிற்கு நீ
வந்தபொழுது…
எனது அறையெங்கும்
நிரப்பிவிட்டுச் சென்றாய்
உன் வாசனையை…
வேறு யாராலும் உணரமுடியாத
அந்த அழுத்தமான ஆழமான
தீர்ந்து போகாத
வாசனையின் சுவையை…
ரசித்து ரசித்து
நாள்தோறும்
பருகிக்கொண்டே இருக்கிறேன்
என் மூச்சுக்கூட்டுக்குள்…
உன்னைப் பற்றிய நினைவுகளோடு
அந்த அறைக்குள்
நுழைகையில் எல்லாம்
என்னை தழுவிக்கொள்ளும்
அது மிருதுவாய்…
உன் பெண்மை கலந்த
அந்த சுக வாசனை
எங்கிருந்து புறப்படுகின்றது
என்பது மட்டும்
என்றும் ரகசியமாகவே
இருந்தது எனக்கு…
மற்றொருநாள்
மீண்டும் என் வீட்டிற்கு நீ
வந்த பொழுது…
உன்னிடம் மெல்ல கேட்டேன்
இந்த வாசனை புறப்படும்
ரகசிய இடம் எதுவென்று…
அந்த நொடிப்பொழுதில்
பிரகாசமாகி
பின் அமைதியாய் அருகில் வந்து…
என் இதயத்தில் கை வைத்து கூறினாய்
இதோ இங்கிருந்துதான் என்று…

Published with Blogger-droid v2.0.10

alagu...+919566520975

கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்…
பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…
சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…
புதிதாய் பொம்மை கிடைத்த
மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய்
வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என
நான்
அறிய முற்படுகையில்…
முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்…
உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்…
வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா…
நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…

Published with Blogger-droid v2.0.10

Friday, 6 December 2013

nee vendum...9566520975

அழுவதற்கு உன் மடி வேண்டும்.
அணைப்பதற்கு உன் கைகள் வேண்டும்.
அள்ள அள்ளக் குறையாத உன்
அன்பு வேண்டும்.
எல்லா வற்றையும் விட நீ
எனக்கு வேண்டும்.
உன் அன்புக்காய் ஏங்கும் எனக்கு
அனாதையில்லை என்று சொல்ல
நீ எனக்கு வேண்டும்.

Published with Blogger-droid v2.0.10

Thursday, 5 December 2013

அன்பு நண்பர்களே... Typed with Panini Keypad

விதைகள் மட்டும்.பதியபட்ட எ�ன்  .வலைப்பதிவில் இனி நல்ல கதைகளையும் கண்டு. மகிழலாம்.....

Published with Blogger-droid v2.0.10

Monday, 2 December 2013

kaakkum silakaigal...

"குத்தாது"
என்று நம்பும் சில கைகளே....
நம் கண்ணை குத்தி, காயப்படுத்தி
சந்தோசம் கொள்கிறது.....
உறவுகளாய்.... நட்புகளாய்....

Published with Blogger-droid v2.0.10