இவர்களும்
போராளிகள்தான்...!
ஆழ்ந்துறங்கும் சூரியன்
எழுந்திருக்கும் முன்
ஆயுதங்களோடு....
கொளுந்துக்
களத்திற்குச் செல்லும்
இவர்களும்
போராளிகள்தான்...!
ஒழிந்திருந்து
குளிர்க் குண்டு வீசி
உடல் துளைக்க முயலும்
பனி மூட்டங்களை
துப்பட்டாவால்
துரத்தியடிக்கும் இவர்களும்
போராளிகள்தான்...!
மலைச் சரிவுகளில்
தேயிலைத் தளிர்களில்
தன் சோற்றுப் பருக்கைகளைத்
தேடியலையும்
இவர்களும்
போராளிகள்தான்...!
Published with Blogger-droid v2.0.10
No comments:
Post a Comment