முதல் முறை
எனக்காக நீ காத்திருக்கும் பொழுது..
இனம் புரியா இன்ப அவஸ்தை
எனக்குள் நிகழ்த்தி விட்டாய்…
முதல் முறை
நீ என்னைப் பார்த்த பொழுது..
நெஞ்சுக்குள் இடி மின்னல்
மழை கொட்டிச் சென்று விட்டாய்…
முதல் முறை புன்னகையை
நீ வீசிச் சென்ற பொழுது..
மனதிற்குள் நிலநடுக்கம்
நீ நடத்தி வைத்து விட்டாய்…
முதல் முறை ஒரு வார்த்தை
நீ பேசிச் சென்ற பொழுது..
ஒட்டு மொத்த மௌனம் வந்து
எனைத் தாக்கச் செய்து விட்டாய்…
முதல் முறை சம்மதத்தை
என்னிடம் நீ சொன்ன பொழுது..
உயிர்த்து எழும் மெய் சிலிர்ப்பில்
மூழ்கடித்து நகர்ந்து விட்டாய்…
முதல் முறை என்னை
நீ திட்டி விட்ட பொழுது..
இதயத்தின் மத்தியில்
விரிசல்கள் விழ வைத்தாய்..
முதல் முறை உந்தன்
கைக்கோர்த்து நடக்கும் பொழுது
ஊர் பார்க்கும் பெரும் பயத்தை
உள்ளுக்குள் விதைத்து விட்டாய்…
சலிக்காது இத்தனையும்
தாங்கி உனை காதலனாய்
நானின்று கொண்ட பின்னும்..
ஒரே ஒரு முத்தமதை
என்னிடம் நீ கேட்கும் பொழுது..
வெட்கமுண்டு பெண்மைக்கு
என்பதை மட்டும் மறந்து
தொடர்ந்து நச்சரிக்கிறாயே..
இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரன் நீ…
No comments:
Post a Comment