விலகிப் போய்விடு
உன்னைப் பற்றி எழுத மாட்டேன்
கண்டிப்பாய் சொல்லுகிரேன் போய் விடு! வார்த்தைகள் தேடும் போது
புத்தகமாய் வந்து முன்னால் அமர்கிறாய்
தொட மாட்டேன் போய் விடு! கோர்வைகள் எழுதுகிறேன்
குறுக்கே நுழைகிறாய் நீ
தொந்தரவு செய்யாதே இதில் நீயில்லை! இயற்கையை ரசித்தேன்
இயல்பாய் சிரிக்கிறாய் நீ
சத்தியமாய் உன்னை எழுதப் போவதில்லை! போர் என்றேன்
வாளேந்தி வருகிறாய் நீ
நீயில்லாமல் தான் எழுதுவேன் போ! குழந்தைப் பா முயன்றேன்
கண் விழித்துப் பார்க்கிறாய்
இது உனக்கில்லை! எல்லாம் எழுதி விட்டு
கசக்கிப் போடுகிறேன்
எதுவும் என்னால் முடிய வில்லை! காதல் நீயின்றி
என் எழுத்து அழகாவதில்லை
ஏனெனில் நான் காதலிக்கிறேன்!
No comments:
Post a Comment