தொட்டால் சிணுங்கும் பெண்செடி
அதை தொட்டுவிளையாடும்
உன் சிறுகுழந்தை நான்
ஊடல் நீரலையில் தாமரையாட
இலையிதழ் மடியினில் தத்தளிக்கும்
நீர்த்துளி குழந்தை நான்
உன் மௌனக் குழந்தைகள்
என்னுடன் வீண் சண்டையிட
முகமூடியிட்டு திகிறது புன்னகை
நீ ஆக்கிய உணவு
உண்ண முடியாமல் நான்
பாத்திரம் நிறைய கோபம்
எத்தனை அழகான காட்சி
உன் முகத்தில் ஒளிரும்
கோபம் என்னும் வானவில்
உன் புன்னகையை புறம்தள்ளி
என்னை ஈர்க்கும் காந்தம்
சிறு சிறு சிணுங்கல்கள்
புன்னகை கோபம் மௌனம்
என் ஆண்மையை ஆளும்
கூர்மையான உன் ஆயுதங்கள்
No comments:
Post a Comment