Monday, 3 October 2011

விரவிக் கிடத்துறது போதை!



பிரித்தாளும் இனவாதங்களில்
அதிகாரத்தி்ன் ஆட்சிகளில்
சில மதுக்கோப்பைகளில்
வெறிகொண்ட தாபங்களில்
பணமாடு்ம் நடனங்களில்
மானமாற்ற மதங்களில்
சொந்தங்களின் பாசங்களில்
சொத்துக்களின் மோகங்களில்
அன்பின் தேவைகளில்
அமைதியின் தனிமைகளில்
இலட்சியத்தின் விளிம்பில்
நின்று கொண்டு
எங்கெங்கும்
விரவிக் கிடத்துறது
போதை!

No comments: