Sunday, 1 January 2012

சிந்திப்பதில்லை ஏனோ?


சிரிக்கின்றார் சிலர்
சிந்திப்பதில்லை ஏனோ?

சிந்திப்பவர்கள் சிலர்
சிரிப்பதில்லை ஏனோ?

துக்கத்துடன் சிலர்
இன்பத்தைத் தேடுகின்றார்!

இன்பமென நினைத்து சிலர்
சொர்க்கத்தைத் தேடியலைகின்றார்!

எங்கோ எதையோ என்னவென்றறியாமல்
தேடுகின்றார் தேடுகின்றார் எதற்கோ?!

எல்லாமது நம்கையிலுள்ளது என்றறியாமல்
நாளும் தேடி துன்புற்றே அலைகின்றார்!

எதைப் பெறுவதற்கும் ஒன்றை இழந்தவர்களாவார்
இழக்காமல் பெறுவது இல்லையென உறுதி உலகில்!

அலைகின்றார் அலைகின்றார் பெறுவதற்கே
அவர் விட்டு செல்வதென்ன என்றறியாத அறிவீலி!

தான் பெற்ற அல்லல் நமக்கு பின்னும் வேண்டாம்
தலைமுறை சிறக்க நல்லதொரு வரலாறு காண்!

ஒற்றுமை கொள் ஒன்றுசேர் உலகம் வசப்படுத்து
வேற்றுமை கொண்டால் வேரற்ற மரமாய் ஆகுமே!

No comments: