Monday, 20 February 2012

என் கண்ணீர் துடைக்க..


கவ்விய இருளில்
என் வாகன விளக்கொளி..
உன்னை நோக்கி வந்து
கொண்டு இருக்கிறேன்..

அழைப்புக்கு நன்றி
உன் மண நாள் கொண்டாட
நானும் வருகிறேன் -மறக்க
இயலாத நினைவுகளோடு .

காதலின் ஈரம்
வாடாமல் உன் திருமண
அழைப்பில் வழிகிறது -
என் கண்களில் இருந்து

மாலை கடற்கரையில்
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..

பார்வைகளையே பரிசாக்கும்
உன் கண்கள்.
என்னை தழுவி சலித்த
உன் கைகள் .
நடனமாய் நடக்கும்
உன் கால்கள் .
என்னை பூட்டி வைத்ததாய்
சொன்ன இதயம்..
சாவி தொலைத்தாயா?
இதயம் தொலைத்தாயா ?

சந்திப்போம் மணமேடையில்
அன்பே..
உன்கைகளை கட்டிவிடு..
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
நீண்டுவிடும்
என் கண்ணீர் துடைக்க..

No comments: