Sunday, 26 February 2012

என்னை நானாக இருக்க விடு.


நான் நீயல்ல - ஆனால்
நான் நானாக இருப்பதற்கு - நீ
ஒரு சந்தர்ப்பம் தருகிறாய் இல்லை
நீ
என் விசயங்களில் தலையிடுகிறாய்
ஏதோ அவை
உன் விசயங்கள் போலவும்
நீ நான் போலவும்

“நான் நீயாக இருந்தால்........”
உனக்கு தெரியும்
நான் நீயல்ல என்றாலும்
நீ - என்னை நானாக இருக்க
விடுகிறாய் இல்லை

நான் நீயாகலாம்
உன்னை போல் பேசலாம்
நடக்கலாம், சிரிக்கலாம்
என எண்ணும்
உனக்கு புத்தியில்லை
உன் பக்கம் நியாயமில்லை

கடவுள் என்னை நானாகவும்
உன்னை நீயாகவும் படைத்தார்
கடவுள் பேரால் கேட்கிறேன்
என்னை நானாக இருக்க விடு.

No comments: