Sunday, 8 January 2012

கவலை கொள்ளாதே!

மனசே!
மனசை தொட்டு
மனதார சொல்கிறேன்
மனம் வருந்தாதே!
உனக்கு அழைப்பு எடுக்கும்
ஒவ்வொரு கணங்களும்
என் மனதில் ஏதோ
சிறிதாக நெருடல்!

உனக்கு அது தொலைபேசி
எனக்கு அது தொல்லைபேசி
உன்னோடு பேசும்
ஒவ்வொரு நிமிடமும்
அலைவரிசை குழப்பத்தால்
உண்டாகும் கோவத்தில்
உன்னை நான்
காயப்படுத்திடுவேனா என்று!

கவலை கொள்ளாதே!
தடங்கலின் போது
நான் கோவிப்பது
உன்னை அல்ல
உன் தொலைபேசியை மட்டும் தான்
அன்பாக பேச எடுத்தால்
அதற்கும் ஒரு விக்கல்
அவசரமாய் பேச எடுத்தால்
அடிக்கடி கட்

பொறுமைக்கும் எல்லை உண்டு
போதும் இந்த நச்சரிப்பு
சீக்கிரமாய் செயல்படு
மாற்றி விடு உன் சிம் காட்டை.

நீ தான் என் வாழ்க்கை என்று

உன்னை பார்க்க மறுக்கும்
கண்களுக்கும்
உன்னோடு பேச மறுக்கும்
உதடுகளுக்கும்
உன்னை தேட மறுக்கும்
இதயத்துக்கும்
உன்னை தீண்ட மறுக்கும்
ஸ்பரிசங்களுக்கும்
எப்படி புரிய வைப்பேன்
நீ தான் என் வாழ்க்கை என்று

இதயத்திற்கு புரியவைக்க முடியவில்லை!


நீ தொலைவில் இருப்பதை
புரிந்துகொள்ளும் எனக்கு
உன் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் என்
இதயத்திற்கு புரியவைக்க
முடியவில்லை!
உன் நினைவுகள்
இதயத்தில் கூட இருப்பதால்
அருகிருப்பதாய் நினைக்கிறது
எப்படி சொல்வது
நம் மனங்கள் தான் அருகில்
நிஜத்தில் தொலைவில் என!

கண்ணீராய் நுழைந்து விட்டாய்..!!!

இமைகளை காற்று கூட 
நுழைய முடியாதவாறு தான் 
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!? 
சாமர்த்யக்காரியடி-நீ ..!! 
எப்படியோ கண்ணீராய்
நுழைந்து விட்டாய்..!!! 

இதயத்தில் சுமந்தபடி!

உன்னுடனான நட்பின்
இனிமையான நாட்களில்
உன்னை உயிருக்கு உயிராக
நேசித்ததை தவிர
தவறென்று நானிங்கு
ஆற்றியது தான் என்ன!
நம் நட்பின் அன்பிற்கு
தண்டனை தான் இந்த
நட்புக்கு இடையான
பிரிவின் இடைவெளி?
இடம் மாறி நாம்
தொலைவாகி போனாலும்
இதயங்கள் அருகிருந்து
இடைவிடாது துடிக்கிறது
இனிய நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி!

உன்னை இழக்க நான் தயாரில்லை


கருவறையிலிருந்து இறங்கி
கல்லறை வரை
நடந்து போகும் தூரம் தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
எதற்காகவும் உன்னை
இழக்க நான் தயாரில்லை

ஆண்டவன் கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!!

சொல்லி வராதது காதல்.......
சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில் முன்னுக்கு
முறநாய் ஆண்டவன்
கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!! 

காதல் வாழ்க்கையும் தான்


இதயமென்ற கோவிலிலே
காதல் என்ற விளக்கேற்றி
கனவுகள் எனும் எண்ணை ஊற்றி
கன்னியிவள் காத்திருந்தாள்!

சில்லென்ற காற்றிற்கு
கைகளையே அணையாக்கி
காற்றிற்கு வேலி போட்டு
காத்து வந்தாள் விளக்குதனை!

கைகளையும் மீறி இங்கே
காற்றெல்லாம் புயலாகி
சுடரோடு சேர்த்து இங்கு
விளக்கையும் அழிக்கிறது

விதி விட்ட பாதையிலே
விளக்கோடு சேர்ந்திங்கு
விட்டில் பூச்சியாய் எரிவது
இவள் ஆசைகள் மட்டுமல்ல
காதல் வாழ்க்கையும் தான்

இதயமும் தான்!


உன்னை பார்க்க துடிக்கும்
உன்னை பிரிந்த என்
ஊமை விழிகளுக்கு
உன் முகம் காட்ட
ஏன் தயங்குகிறாய்?

தினம் தினம் இங்கு
உன்னை எண்ணி
ஏமாற்றம் கொள்வது
நான் மட்டுமல்ல
என் விழிகளும் தான்!

ஒவ்வொரு நொடியும்
உன் ஏக்கங்களால் இங்கு
உடைந்து போவது
நான் மட்டுமல்ல என்
இதயமும் தான்!

நீ ஏன் புரிய மறுக்கிறாய்.........!


நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன்
உன் காயங்களுக்கு மருந்தாகிறேன்
அது உனக்கும் புரிகிறது - ஆனால்
நீ நினைப்பது தான் தவறு
நான் உன்னோடு மட்டும்
உறவாக இருக்க வேண்டும் என்று!
உனக்கு நான் மட்டும் தான்
உறவாக இருக்கலாம்
ஆனால் எனக்கு அப்படி இல்லை
உன்னை விட பிடித்தவர்கள்
உயிரான உறவாக உள்ளார்கள்
இதை நீ ஏன் புரிய மறுக்கிறாய்.........!

இதயத்தில் சுமந்தபடி!

உன்னுடனான நட்பின்
இனிமையான நாட்களில்
உன்னை உயிருக்கு உயிராக
நேசித்ததை தவிர
தவறென்று நானிங்கு
ஆற்றியது தான் என்ன!
நம் நட்பின் அன்பிற்கு
தண்டனை தான் இந்த
நட்புக்கு இடையான
பிரிவின் இடைவெளி?
இடம் மாறி நாம்
தொலைவாகி போனாலும்
இதயங்கள் அருகிருந்து
இடைவிடாது துடிக்கிறது
இனிய நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி!

சரி செய்ய முடியவில்லை!!



அன்றைய நாள் ஏன் உதயமானது
என்று சலித்துக் கொள்ள மட்டுமே
என்னால் முடிகிறது...
ஏனெனில் அன்று நடந்து முடிந்த
எதையுமே என்னால் சரி
செய்ய முடியவில்லை!! 

என் உண்மைக் காதலை!


அன்பே!
நாம் காதல் மொழி பேசி
கனிவாக திரிந்த போது
நமக்கு நட்பாக இருந்த
இந்த நாய்க்குட்டிக்கு
இருக்கும் பாசம் கூட
என் காதலி உனக்கு
இல்லாது போனது ஏனோ....?
என் மணவாழ்க்கையில் தான்
உன்னை பகிர விரும்பாத நீ
என் கல்லறையிலாவது
காணிக்கை செலுத்தி இருக்கலாமே
என் உண்மைக் காதலை!

எழுத்துச்சுமை...

                                                                                                      உன்னை 
பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல் 

உன் அனுமதியில்லாமலே.!

நீ சென்ற நாள் முதல்
நான் நானாக இல்லையடா!
பசி மறந்தேன்!
தூக்கம் தொலைத்தேன்!
என் இதயம் (உன்னில்)
துடிக்க வில்லையா!
நீ (என்னில்) படும் வேதனையை கண்டு !
காலை முதல் இரவு வரை உன்
நிழல் படத்தை கண்டு -
உன் கைக்குட்டையின் வாசத்தை
சுவாசித்து உயிர் வாழ்கிறேன்!
உன் கைக்குட்டை சொல்லும்
என் கண்ணீரின் கதையை!
இதே வேதனையில் அங்கு
நீயும் இருப்பதை உணர்கிறேன் நான்!
உன் குரல் கேட்க தவிக்கும் என்
மனம் படும் வேதனையை
அறிவாயா என் உயிரே!

Monday, 2 January 2012

புதுக்கவிதை ஆயிரம்

தினமும் புதுக்கவிதை ஆயிரம்
எழுத உனக்கு மட்டுமே
முடிகிறது மேகமே

கண் தானம்

இருவருக்கு ஜனனம்
ஒருவரின் மரணத்தில்..
கண் தானம்.

இலையுதிர்ந்த மரம்.

காற்றுக்கூட
கண்டுகொள்ளவில்லை
இலையுதிர்ந்த மரம்.

நம் காதல்!

இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!

காதல் நெருப்பு

விலகினால் சுடுகிறது
நெருங்கினால் குளிர்கிறது
காதல் நெருப்பு

அன்பு

அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் கேட்டு
அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்

வற்றிய குளம்...

முகம் பார்க்க முடியாமல்
வாடியது நிலா
வற்றிய குளம்

தேனீக்கள்!

கொள்ளை போனாலும்
தளர்வதில்லை
தேனீக்கள்!

போலிச்சாமியார்....

பெண் தெய்வம்
பயந்து ஓடுகிறது
எதிரே
போலிச்சாமியார்!

கோலங்கள்...

சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்
இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்
பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்
வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்
மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம
எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...

"இலவசம்"

சமூக அவலத்தின்
வலிகளுக்கெல்லாம்...
அரசு கொடுக்கிறது
தூக்க மாத்திரை...
"இலவசம்"

அவள் மட்டும்தான்...

என்னை
கடந்து போன‌
பெண்கள் பலர்.
ஆனால்,
அவள் மட்டும்தான்
என்னை
கடத்திக்கொண்டு போனவள்.

Sunday, 1 January 2012

உன் நினைவுகள் !


சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடெங்கும்
சிதறிக் கிடக்கும் பொருட்கள் போல
என் மனமெங்கும் சிதறிக் கிடக்கின்றன
உன் நினைவுகள் !
.

சிந்திப்பதில்லை ஏனோ?


சிரிக்கின்றார் சிலர்
சிந்திப்பதில்லை ஏனோ?

சிந்திப்பவர்கள் சிலர்
சிரிப்பதில்லை ஏனோ?

துக்கத்துடன் சிலர்
இன்பத்தைத் தேடுகின்றார்!

இன்பமென நினைத்து சிலர்
சொர்க்கத்தைத் தேடியலைகின்றார்!

எங்கோ எதையோ என்னவென்றறியாமல்
தேடுகின்றார் தேடுகின்றார் எதற்கோ?!

எல்லாமது நம்கையிலுள்ளது என்றறியாமல்
நாளும் தேடி துன்புற்றே அலைகின்றார்!

எதைப் பெறுவதற்கும் ஒன்றை இழந்தவர்களாவார்
இழக்காமல் பெறுவது இல்லையென உறுதி உலகில்!

அலைகின்றார் அலைகின்றார் பெறுவதற்கே
அவர் விட்டு செல்வதென்ன என்றறியாத அறிவீலி!

தான் பெற்ற அல்லல் நமக்கு பின்னும் வேண்டாம்
தலைமுறை சிறக்க நல்லதொரு வரலாறு காண்!

ஒற்றுமை கொள் ஒன்றுசேர் உலகம் வசப்படுத்து
வேற்றுமை கொண்டால் வேரற்ற மரமாய் ஆகுமே!

புத்தாண்டுக்கான பரிசாய்...


பூக்கள்.. இனிப்புகள்..
விலை உயர்ந்த பல பரிசுகள்..
இவைகளுக்கு இடையில்…



இந்த புத்தாண்டுக்கான பரிசாய்
நீங்கள் விரும்பினால்
பிரியத்தோடு கொடுங்கள்
உங்கள் செல்லப் புன்னகைகளில் ஒன்றையும் சேர்த்து…
பிரியமுடன்…
பிரியன்…

நுண்ணிய இடைவெளி…



உனக்கும் எனக்குமான
பழகுதல் நாட்களில்..
நமக்கே தெரியாமல் நமக்கிடையில் விழுந்து
நம்முடனே பயணிக்கும்
நுண்ணிய இடைவெளி..
மிக மிக அபாயகரமானது !

சட்டென்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு..
உள்ளார்ந்த உறவுகளுக்கு இடையில்
விரிசலை உண்டாக்குவதில்
அது கை தேர்ந்தது…

ஒரு இதயம் காயப்பட்டிருக்கும் நேரத்தில்..
அதற்கு மருந்திட மனமில்லை என்றாலும்..
மேலும் காயமாக்கிவிட்ட இன்னொரு இதயத்தின்
சூழ்நிலை செயல் வழி..
விரிசலை உண்டாக்குவது
அதற்கு எப்பொழுதும் ரொம்ப பிடிக்கும்…

 இதை சரி செய்ய..
நமக்கிடையிலான ஆழப்புரிதல்கள் அன்றி
வேறு வழியே இல்லை…

என் முத்தங்களையும் கொஞ்சல்களையும்
எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால்..
என் கோபங்களையும் திட்டுக்களையும்
கடந்து செல்ல முடியாமல் போகையில் எல்லாம்..
எங்கிருந்தோ வந்து
நமக்கிடையில் அமர்ந்து விடுகிறது
இந்த இடைவெளி !


உன்னை கொஞ்ச உரிமை கொண்ட
என் உதடுகளுக்கு..
திட்டவும் உரிமை உண்டென நான்
நினைத்துக்கொண்டிருக்கும் வேளைகளிலும்..
யார் யாரோ என் மேல் திணித்த
கனத்த வலிகளின் சுமைகளுக்கான
ஆறுதலாய் நீ இருப்பாயென..
உரிமையோடு உன்மீது நான் கோபப்பட்டு
உன் ஆற்றுதல் கிடைக்குமென
நான் நினைக்கும் வேளைகளில்..
உன் மீது கோபப்பட்டதற்க்காய்
நீ வருந்த நேர்கையில் எல்லாம்..
கொஞ்ச இருக்கும் உரிமை
கோபப்பட இல்லையோ என
மனம் நினைக்கும் மறுநொடியில்..
மத்தியில் வந்து மௌனமாய்
அமர்ந்துவிடுகிறது அதே இடைவெளி..

இந்த நுண்ணிய இடைவெளி
எப்போதும் தனது வலிமையை காட்ட
கிடைக்கும் வாய்ப்புகளுக்காக
காத்துக்கொண்டிருக்கிறது….

நமது புரிதல்களின் ஆத்மார்த்த பிணைப்புகள் அன்றி
அவற்றை யார் என்ன செய்ய முடியும்…

எனவே என் இணையே..
மிக மிகக் கடினமானதுதான் என்றாலும்..
என்னை நீயும் உன்னை நானும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
ஆழப் புரிந்துகொள்வோம்..

இந்த நுண்ணிய இடைவெளியின்
எதிர்பாரா தாக்குதல்களில் இருந்து
எப்படியாவது தப்பிக்க…

இல்லையென்றால்..
நம் காதலை நம்மால் கூட
காப்பாற்ற முடியாமல் போகக் கூடும்……

புரிந்துகொள்ள முயற்சி செய்!


அன்று நண்பர்களாய் அறிமுகம் ஆனோம்!
இன்று காதலராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நீ நண்பனாய் இருந்தவரை என்
துக்கத்திலும், சந்தோசத்திலும்,
வெற்றியிலும், தோல்வியிலும் பங்ெகடுத்தாய்
ஆனால் இப்பொழுதோ என் இதயத்தில்
காதல் என்ற அமிர்தத்தை ஊற்றிவிட்டு.......
சந்தேகம் என்ற விஷத்தை பாய்ச்சுகிறாய்!
என் காதலே! நீ என் உண்மையான அன்பை
புரிந்துகொள்ள முயற்சி செய்!
சந்தேகம் என்ற விஷத்தால்
நம் காதலை கொன்றுவிடாதே!