Sunday, 6 November 2011

சாவை அடையாமலே,,,,,!

காற்றை எதிர்க்கும்
வலிமை உண்மைக்கே...
ஏனென்றால்
காற்றோடு பறப்பது
பொய்யல்லவா!
கேட்போர் காதருகே
போய்ச் சேரும்
பொய்கள் பெறுமதி இழக்க...
உலகத்தையே
தன் பக்கம் இழுப்பது
உண்மையே!
பொய்கள்
கேட்போரை நாடும்
கேட்போரையே நாட வைப்பது
உண்மையே!
ஈழ மக்கள்
கேட்ட, பரப்பிய பொய்கள்
உலகின் காதுக்கெட்டாமலே
ஈழ மக்களின்
சாவுகள், துயரங்கள் மட்டுமே
உலகின் கண்ணுக்கு
புலப்பட வைத்தது எதுவென்றால்
உண்மையே!
உரக்கச் சொல்லி, உறைக்க எழுதி
பரப்பிய பொய்கள் யாவும்
சாவடைந்து மறைந்து போக
ஊமையாய் உறங்கிக் கிடக்கும்
உண்மை மட்டும்
சாவை அடையாமலே
வாழ்ந்து காட்டும்!

கருணையில் உதிரும் தர்மங்கள் ...


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய் 
கட்டில் படுக்கையில் தந்தை 

அன்னம் உண்ணா தாய் 
பால் வற்றிய மார்பு 
பசியில் அழும் தம்பி 

அம்மா பிச்சை போடுங்கள் 
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி 
பசியில்  துவளும் சிறுவன் 

உயிர்போர்த்திய நான்கு  ஜீவன்கள் 
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு 

இது வறுமைக் காகிதத்தில் 
இறைவனின் கைவண்ணத்தில்  
எழுதப்பட்ட  துக்கக் கவிதை 

விழிகளால் வாசித்த மனிதர்கள் 
 அகம்   இளகி  விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை 

ஆலயம் கோவில் மசூதி 
காணாத தெய்வ சன்னதிகளில் 
நிரம்பி வழிகிறது காணிக்கைகள் 

சிறு கருணையை எதிர்நோக்கி 
வறுமைக் கோட்டின் கீழ் 
எத்தனை எத்தனை மனிதர்கள் 

உண்டியல் நிறைய காணிக்கைகள் 
உண்ண உணவின்றி பக்தகோடிகள் 
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள் 

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை 
கருணையில் உதிரும் தர்மங்கள் 
எளியவர்களின் உயிர் காக்குகிறது 

நாளை சமூகம்


ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது
அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்
வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்
ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்
நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்
குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்
புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்
வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்
ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்
இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்
குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்
உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது
நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ
பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு
காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

இது போதும் படத்தின் வெற்றிக்கு...


தமிழ்த் திரைப்படம் என்றில்லை
எல்லா மொழிப் படமும்தான்
பாடல் காட்சியில்
நடிகை துகிலுரிக்கப்படுகிறாள்
ஆண்களின் கண்கள்
விரிகின்றன
சண்டைக் காட்சிகளில்
தேவைப்படாதபோதும்
நடிகன் சட்டையை
கழட்டியெறிகிறான்
பெண்களின் கண்கள்
விரிகின்றன
இது போதும்
படத்தின் வெற்றிக்கு
- இயக்குநர்
கருத்து ஒன்றும்
தேவையில்லை
எல்லா கருத்துகளும்
எங்களுக்குத் தெரியும்
- ரசிகர்கள்

புரியவேண்டும்..!


தனிமை வேண்டும் - அதில் 
இனிமை வேண்டும் 

ஆற்றல் வேண்டும் - யாருமதை 
போற்றல் வேண்டும் 

நேர்மை வேண்டும் - எப்போதும் 
உண்மை பேசவேண்டும் 

கனிவு வேண்டும் - என்றும் 
பரிவு யாரிடத்திலும் வேண்டும் 

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை 
எப்போதும் காத்தல் வேண்டும் 

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும் 
பொய்க்காது நடவவேண்டும் 

மனையாளொருத்தி வேண்டும் - என்றும் 
அவளிடமே காமம்வேண்டும் 

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல் 
நம்பிக்கை எப்போதும் வேண்டும் 

பகைவன் வேண்டும் - அவன் 
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும் 

இறைவனை புரிய வேண்டும் - அவன் 
ஒருவனே என்றுலகறிய வேண்டும் 

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம் 
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும் 

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில் 
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும் 

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால் 
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும் 

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும் 
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!


புதிய சந்தியாலாவது...


கண்மூடி வாய்பொத்தி காதடைத்து
கணிய‌மாய் வாழ கற்று தந்தாராம்
மகாத்மா காந்தி
காந்தியின் நாட்டில்
அவர் கொள்கைகள் இருப்பது
கல்வியேட்டில்................!?
இந்த இழிநிலையை எண்ணிபார்த்தால்
உள்ளத்தில் உதிரம் சொட்டும்
களவு கற்பழிப்பு கயமைதனமெல்லாம்
காந்தியின் நாட்டில்
வாந்தியெடுப்பது ஏனோ......?!?
ஆனாலும்
காந்தியின் குரங்குகள்
கண்மூடி வாய்பொத்தி
காதடைத்து காக்கின்றன‌
கொள்கைகளை...,
கந்தி மறந்துவிட்டர் போலும்
குரங்குகளின் மனதை கட்டிபோட‌
அக்கரை அதிகமுள்ள
சமுக ஆர்வளர்
யாரேனும் இருந்தால்
அந்த குரங்குகளின்
கண்வாய் காதை திறந்துவிட்டு
மனதை கட்டுங்கள்
அவைகளின் புதிய சந்தியாலாவது
பூரிக்கட்டும் பூமாதிவி.....

என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உன்னை காண்பதற்காக தவிக்கிறேன்
ஆனால் அதனை தவிர்க்கிறேன்
உன் வருகைக்காக பூக்களை விரிக்கிறேன்
விரித்த பூக்களை நானே எரிக்கிறேன்
என் காதலை சொல்ல நினைக்கிறேன்
பின்னர் அதனை சொல்ல மறுக்கிறேன்
எனக்குள் என்றும் சிரிக்கிறேன்
என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உன்னை காண்பதற்காக தவிக்கிறேன்
ஆனால் அதனை தவிர்க்கிறேன்
உன் வருகைக்காக பூக்களை விரிக்கிறேன்
விரித்த பூக்களை நானே எரிக்கிறேன்
என் காதலை சொல்ல நினைக்கிறேன்
பின்னர் அதனை சொல்ல மறுக்கிறேன்
எனக்குள் என்றும் சிரிக்கிறேன்
என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உண்மையான காதல்!

காணும் பெண்களில் எலாம்
அவளை காண்பதல்ல காதல்!
எந்த பெண்ணிலும் அவளை
காணமல் இருப்பதே உண்மையான காதல்!

என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".


"தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்"
"குருடனின் பார்வை
விழும் சில்லரையின் சத்தம்,
மறக்க சொல்லும் உன் பார்வை
என் கல்லறையின் மேல் தான் விழவேண்டும்",
"புறஊதா கதிர்கள் பட்டாலும் புண்ணாகாத என்இதயம்,
உன் விழிகதிர்கள் படாததாலே உண்ணாமல் விரதம் இருக்கிறது",
"சுடுவோம் என்றறியாமல் சூடுபடும் விட்டில்பூச்சி,
உடைந்துபோகுமே என் உள்ளம்
தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்",
"முதலாய் நிலவில் மனிதன் கால் வைத்த சந்தோஷம், நீ என் தெருவில் கால் வைத்த‌ போது",
"காத்திருப்பின் வேதனை கனசந்திப்பில் கரைந்து போகும்,அப்படிதான் உன் அலட்சிய பார்வையில்கூட என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".

மழையோடு உறவாடிக் கொண்டு...


நித்தம் நீரைத் தேடித் துழாவி 
களைத்துப் போய் 
மண்ணை உழும் வேர்கள்... 

மழைத் துளிகள் நனைக்கும் போது 
போதும் போதும் என்ற நிறைவுடன் 
விருந்தை உண்டு மயக்கத்தில்... 

பச்சையில் பலவிதமாய் காணும் 
மரங்கள் வர்ணஜாலமாய் 
மழையோடு உறவாடிக் கொண்டு...