Sunday, 6 November 2011

புரியவேண்டும்..!


தனிமை வேண்டும் - அதில் 
இனிமை வேண்டும் 

ஆற்றல் வேண்டும் - யாருமதை 
போற்றல் வேண்டும் 

நேர்மை வேண்டும் - எப்போதும் 
உண்மை பேசவேண்டும் 

கனிவு வேண்டும் - என்றும் 
பரிவு யாரிடத்திலும் வேண்டும் 

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை 
எப்போதும் காத்தல் வேண்டும் 

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும் 
பொய்க்காது நடவவேண்டும் 

மனையாளொருத்தி வேண்டும் - என்றும் 
அவளிடமே காமம்வேண்டும் 

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல் 
நம்பிக்கை எப்போதும் வேண்டும் 

பகைவன் வேண்டும் - அவன் 
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும் 

இறைவனை புரிய வேண்டும் - அவன் 
ஒருவனே என்றுலகறிய வேண்டும் 

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம் 
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும் 

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில் 
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும் 

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால் 
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும் 

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும் 
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!


No comments: