Friday, 27 April 2012

காதல் கொலைகாரி ...

காதலால் கூட
கொலைசெய்ய முடியுமென்று
உன் காதலில் தான்
கண்டுகொண்டென்

காதலின் நினைவுகளை ...

என் கடிதங்களை
நீ பத்திரப்
படுத்தி
வைத்திருக்கிறாய்....காதலின்
நினைவுகளை
வாசித்து மீட்டிப்
பார்க்கத்தான் என
நினைத்தது தவறு.....நீ
அவற்றை
சட்டத்தின் முன் சாட்சிக்காக
வைத்திருக்கிறாய்....
என அறிந்து....கொண்டதனால்
இப்போது உன்னிடம்
உள்ள கடிதங்கள்
காதல் போன.... வெறும்
கை எழுத்துகளாக மாறிவிட்டது....!!!!

காதலை தண்டித்தேன்...

ஒரு தலை காதலால்
தண்டிக்கப்பட்டேன்!

காதலை தண்டித்தேன்

தற்கொலையால்!

தொலைபேசியின் மௌனம் ...

நீ கூறாத வார்த்தையின்
அர்த்தத்தை, ஆழத்தை,
உன் தொலைபேசியின்
மௌனம் கூறிவிட்டது.

Tuesday, 24 April 2012

என்னவளின் பாதங்களை முத்தமிட..????

மண்ணுக்கு
மட்டும் தான்
உரிமை
இருக்கிறதா...?  என்ன???
என்னவளின்
பாதங்களை
முத்தமிட..????
இந்த மனிதத்துக்கு
உரிமை இல்லையா...???
காற்றும்,
கடல் அலைகளும்.,
மண்ணும்,
மாசுவும்,
இவை
தேவதையின் பாதங்கள்
என்று தெரியாமலே
முத்தமிட
துடிக்கும் போது..???
தெரிந்த
என் மனதுடிப்பிற்கு...
பதில் தெரியவில்லையே.!!!
அந்த தேவதைக்கு...???

விடை கிடைக்காமல் நான்..................

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...

சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..

விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..................

அவள் துரோகத்தால்...

என்
எழுத்துக்கள்,
காகிதத்தில்
கவிதையாய்
பதிய காரணம்,
உன் விழிகள்
என் இதயத்தில்
இட்ட காதல்??
என்ற கிறுக்கல் தானே!!!      
இன்றோ
இறுக்கமாய்
இமைகளை மூடிக்கொண்டு,
 இதயம்தொட்ட
வார்த்தைகளுக்கும்
வலிக்கும்
வண்ணம்
வார்த்தைகளை கொட்டி..
கண்ணீரில் கரைத்து
பார்க்கிறாள்
என் காதலை...
மனம்
சோகத்தால்
வாடாவிட்டாலும்????
வாடும்
அவள் துரோகத்தால்...

உன் விழிகளை பார்க்கையில்....!

உருகி
உருகி
காதலித்தேன் ...!
உதடு
வலிக்காமல்
சொல்லிவிட்டால் --
வேண்டாம்
என்று ...
 உள்ளம்
வலிக்குதடி
உண்மையான
காதலோடு
உன்
விழிகளை
பார்க்கையில்....!

எதற்காக சிரிக்கிறாய்....

" என் மனதை காயப்படுதியவளே
எதற்காக சிரிக்கிறாய்.

" அன்பை உனக்கு வழங்கினேன் காதல் கடிதமாய்,
பாசங்களை உனக்கு பகிர்ந்தளிதேன் புத்தகங்களாக,
ஆசையை உன்னிடம் அனுப்பி வைத்தேன் கைகுட்டயாக,
என் உயிரையே உருமாற்றி அனுப்பினேன் உனக்காக,

" இன்று உன் வாழ்வில் நான் யாரோ என்றாகிவிட்டேனோ,

" அன்று தேவைப்பட்ட இன்று தேவைப்படாத
அன்பு, ஆசை, பாசங்களை நேரடியாக திருப்பி கொடுத்துவிடாதே.

" என் இதயத்தில் அவ்வளவு திறன் இல்லை
இறந்தபின் வைத்துவிடு என் சமாதியில்......
என்னவளே வைத்துவிடு

முத்தம்...

என் கன்னங்களுக்கு
அவள் இதழ்கள் சொல்லிய
மௌன கீதம்...!

முத்தம்

நானும் ஒருவன்.....

பைத்தியங்கள் எழுதுவதுதான் காதல் கவிதை என்று நினைத்து  இருந்தேன்.ஆனால்'அவளை பார்த்த பின்தான் எனக்கு தெரிந்தது
 அந்த பைத்தியத்தில் நானும் ஒருவன்.

என் கண் இமையை தவிர!!!...

எனக்கு யாரும் எதிரிகள் இல்லை
உன்னை பார்க்கும் போதும் மறைக்கும்
என் கண் இமையை தவிர!!!...

இன்னும் பத்து மாதங்களில்....

உன் கை பிடித்து
இன்னும் பத்து மாதங்களில்
உன்னை விட அழகானவனை
சந்திக்க போகிறாய் என்றேன்..
அதற்கு நீயோ
கைரேகை ஜோசியமா என்றாய்??
ஆம்!!உன்னை வெல்ல பிறப்பான்
நம் மகன் என்றேன்!!

உன் முத்தம்....

உன் முத்தம்
பெற்றெ
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி....
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படியடி சொல்வேன்-என்
காதல் மரித்ததையும்....!!-நீ
காதல் மறந்ததையும்....!!

Friday, 20 April 2012

“ முகவரியும் நீதான்..... “ முகாரியும் நீதான்.....!

“ உனக்காக இன்பக்கவிதை .....

“ எழுதிய என்னை- எனக்காக.....

“ இரங்கல் கவிதை....

" எழுத வைத்துவிட்டாயே....!

“ என கவிதைகளுக்கு.....

“ முகவரியும் நீதான்.....

“ முகாரியும் நீதான்.....!

மலரே மன்னித்து விடு...

மலரே!!
உன்னைப் பறித்து
என்னவளுக்குப் பரிசளித்தேன்...
சூடப்பட்டாய் நீயும்...
என்னவள் கூந்தலில் அல்ல;
குப்பைத்தொட்டியில்...


தோற்றுப் போகிறேன்...

பெண்ணே.....

இதயத்தில் முட்களாய்
குத்திக் கொண்டிருக்கும்...

உன் நினைவுகள் மறக்க
நினைத்தும்...

தோற்றுப் போகிறேன்...

இறக்கும் வரை உன் ஞாபகம்.....

தவிக்கும் என்னை வாழவும் வைப்பாயா...!

நடிக்கும் ஆசை
எனக்கு இல்லை
நான் நடிகனும் இல்லை
ஆனாலும்,
ஒவ்வொரு கணமும்
நடிக்க தொடங்கிவிட்டேன்...
உள்ளத்தில் உன்னையும்...
உன் நினைவின் சுகங்களையும்
பிரிவின் வேதனைகளையும்
சுவாசமாய் கொண்டு
உயிர் வாழ்கிறேன்...
இதயத்தில் இதம் செய்யும்
உன் நினைவுகள்
வலிக்கும் போதெல்லாம்
வழி தெரியாமல்...
பிரிவின் விடை தெரியாமல்
விழிகள் வியர்க்கின்றன...!
உள்ளத்தில் வலிகளை
வைத்துக்கொண்டு
உதடுகளில் புன்னகைக்கிறேன்
நடிக்க தெரியாத என்னை
நடிக்க வைத்தவளே
வாழத்தெரியாமல்
தவிக்கும் என்னை
வாழவும் வைப்பாயா...!

பிரிவென்பது நிரந்தரமல்ல. ..

உன் நீள் நெற்றியில்
நான் இட்ட குங்குமம்
அழகாய் தானிருந்தது!

அந்த நொடி - முன்
முதலே உனை
என் மனைவியாய் - மனதில்
மரியாதை செய்து வைத்தேன்.

மனைவி என்றே நினைத்திருந்தேன்!
மனைவி என்றே அழைத்திருந்தேன்!
மனைவி என்று அணைத்தும் இருந்தேன்!

ஆயிரமுறை இதை நீ மறுத்தாலும்
அத்தனை முறையும் உனக்கெதிராய்
சாட்சி சொல்ல உன் மனம்
தயாராய் தானிருக்கும்.

சூழ்சியாலும்
சூல்நிலையாலும் - என் மேல்
நீ கொண்ட காதலை மறுக்கலாம்,
மறக்கவும் நினைக்கலாம்.
ஆனால்
நாம் வளர்த்த காதலை
மாற்றிவிட முடியாது.

என் மனம் உனக்கு தெரியாதா?
நம் காதலும் உனக்கு புரியாதா?
என் விரல்
உன் உடல் தொட
எத்தனை முறை
ஏங்கியிருந்தாய்?

அத்தனை முறையும்
நம் காதலை
நீ உணரவில்லையா?

உனக்கு புரிந்திருக்கும்,
உனக்கு மட்டுமே புரிந்துதானிருக்கும்.
இருந்தும் மறைக்கிறாய்.

உன்னை முழுதாய்
புரிந்தவன் நான் - இன்று நீ
பிரிந்துவிட்டால்
உன்னை மறந்துவிடுவேன்
என்று எப்படி எண்ணியிருந்தாய்?
காலம் கடத்தினால்
நம் காதலும் மாறலாம்
என்று கற்பனை செய்யாதே!

காலம் மாறலாம் - நம்
காதலும் மாறலாம் - ஆனால்
நாம் காதலர்களாய் வாழ்ந்த
காலம் என்றும் மாறாது.

காலம் நம் காதலை
மட்டுமல்ல
உன்னையும்
பத்திரமாய்
என்னுள் வைத்திருக்கும்.

இன்னொருத்தியை
என் வாழ்வில் ஏற்க முடியாது
என்று நான் கூறவில்லை!

ஆனால்
என் மனைவியாய்,
என் அன்பின்
முழு முதற் உருவமாய்,
உனக்களித்த நிலைய
என்னால் எப்படி மறக்க
முடியும்.

யார் கூற்றிலும்
என் காதல் மாறியிருந்தால்
அது காதலாகி விட
முடியாது.

என் காதல்
உன்னால் ஏற்பட்டது.
உன்னால் மட்டுமே - அதை
அழிக்கவும் மீண்டும்
உயிர்பிக்கவும் முடியும்.

காதலர்களாய்
பிறக்கவில்லை நாம்,
காதலிக்கவும் பிறக்கவில்லை,
இருந்தும் காதலித்தோம்!

இந்த
பிரிவென்பது
நிரந்தரமல்ல.


மீண்டும்
இவ்வுலகில் பிறப்போம்.
காதலர்களாய்
மட்டுமல்ல,
காதலிக்கவும்
மட்டுமே!

நீதான்!நீதான்!நீதான்!

என் வாழ்க்கைக்கு ஒளி தந்த
சூரியனும் நீதான்!

நான் உறங்காமல் தவிப்பதற்க்கு
காரணமும் நீதான்!

யார் பார்த்தும் மயங்காத
பெண்ணவளும் நீதான்!

நான் பார்த்தும் பார்க்காத
சித்திரமும் நீதான்!

என் கண்ணிரண்டில் தெரிகின்ற
முழு நிலவும் நீதான்!

என் கண்களையே திருடிவிட்ட
கள்வியும் நீதான்!

மின்னல்களை சிறைபிடிக்கும்
ஆடவன் என்னை
ஒரு நொடியில் சிறைபிடித்த
மின்மினியும் நீதான்!

என் உயிருக்கு உயிர் கொடுக்கும்
வண்ணங்களும் நீதான்!

என் உயிரையே பரித்துவிட்ட
எண்ணங்களும் நீதான்!

நான் என்ன செய்ய...

பெண்ணே.....

உடல் உறுப்புகளை தானம்
செய்ய வேண்டுமாம்...

என் தோழிகள் என்னிடம்
சொன்னார்கள்...

நானும் தானம் செய்தேன்...

என் உறுப்புகள் அனைத்தையும்
ஒன்றை தவிர...

உன் இதயத்தையும் செய் என்றார்கள்...

இதயத்திற்கு சொந்தக்காரி
உன்னிடம் கேட்காமல்...

என்னிடம் கேட்கிறார்கள்...

நான் என்ன செய்ய...

இதயமில்லாத உன்னிடம் இதயத்தை.....

நீ வந்த பாதை


நீயும் நானும் நடந்து சென்ற
பாதை எங்கும்...

பூத்து குலுங்குகிறது நந்தவனமாய்...

என்னுள் நீ வந்த பாதையும்
பூத்து குலுங்குகிறது...

உன் மீது காதல்...


இன்று நான் நடந்து செல்லும்
பாதைகள்...

முட்களாய் என்னை குத்துகிறது...

நான் செல்லும் பாதை எங்கும்
குருதி படிந்த என் பாத சுவடுகள்...

நாம் சென்ற பாதை எங்கும்
குருதி படிந்த பாத சுவடுகளை
பதிய வைக்கிறேன்...

குருதி சுவடுகள் நந்தவனத்தில்.....

உன் அழகை,,, பொறுமையாக ரசிப்பதற்கு....

என்னவளே..
நீ போகும்
பேருந்தை குறி வைத்தே
அனைத்து
சாலை விதி
சிகப்பு விளக்குகளும்
எரிகின்றது..
உன் அழகை,,,
பொறுமையாக ரசிப்பதற்கு....

ஒரு தலை காதலாகவே ...

தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல்
இன்று,நாளை,நாளை மறுநாள் என்று
காலம் கடத்துகிறேன் என் காதலை சொல்ல

சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று
தமிழ் மீது பழி போடுகிறேன்
சொல்ல தைரியமற்ற கோழை ஆனதால்

நாட்கள் வாரங்கள் வருடங்கள் என
என் காதல் செடி தன் கனவு
வேர்களில் கால் ஊன்றி மரமாகி விட்டது

காரணங்கள் பல சொல்லி என்
மனம் என்னை தேற்றுகிறது

இன்றளவும் என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறேன்

தயங்கி தயங்கி ஏனோ என் காதல்
ஒரு தலை காதலாகவே நெஞ்சின்
ஓரத்தில் உறைந்தே போய் விட்டது

உறைந்து போனது என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....

இருந்தென்ன பயன்?

இதழை தொடாத முத்தமும்
மண்ணை தொடாத மழையும்
இருந்தென்ன பயன்?

உன் ஒற்றைப் பார்வை.....

தயவு செய்து
மறந்தும் கூட
திரும்பி விடாதே
பெண்ணே.. ,

உன்
ஒற்றைப் பார்வையே
போதும் - என்
உயிரைப் பறித்துச் செல்ல ♥

பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...


நீ நேருக்கு நேர் வரும் போது
என்னை பார்க்காமல் குனித்தே வருகிறாய்
என்னை உன் ஓரகண்ணால் பார்க்கும்
அந்த பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...

உன் மௌனம் ....

உன்னை மறப்பதற்கு
நான் செய்யாதது எதுவும் இல்லை
ஆனால்
உன்னை நான் நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌனம் மட்டுமே..!!

உன் நினைவுகள் ....

தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள் ....

Monday, 2 April 2012

காதலித்துக் கொண்டே யிருப்பேன் என்றென்றும் ....

காதலித்துக் கொண்டே யிருப்பேன்......
என் இனியவளே,
நானு ன்னைக்
காதலிக் கின்றேன்

நீ என் காதலி
என்று ஊர் சுற்ற அல்ல!

உன்னுடன்
பார்க் சினிமா
என்றுப் போகவும் அல்ல!!

காதலனென்பதை பிறரிய‌
கவிதையென்ற பெயரில்
காகிதங்களை வீணாக்க அல்ல‌

உன்னுடன்
வெளியூர் சென்று
உன்னுடலை தழுவவும் அல்ல!!!

காதலர்கள் என்ற பெயரில்
பொது இடங்களில்
உன்னுடலை உரசிடவும் அல்ல!!!!

நானு ன்னைக்
காதலிக் கின்றேன்
நம் திருமணம் வரை
மட்டுமல்ல‌

என்னிதயம் ஒய்வெடுக்கும் வரை
காதல் புவியில் வாழும் வரை
அழியாக் காதல் வாழ வளர‌

நானுன்னை நேற்றும்
காதலித்தேன்
நானுன்னை இன்றும்
காதலிப்பேன்
நானுன்னை என்றும்
காதலித்துக் கொண்டே யிருப்பேன்
என்றென்றும் 

உண்னை பின் தொடரு் நிழல்…

காதலின் முடிவு கண்ணீர் 
அதை எனக்கு கொடுத்து விட்டு 
சென்றவளே 
நம் காதலை 
காண்பித்து தந்த குற்றத்திற்காகவா? 
என் கண்ணுக்கு இந்த நிலை! 

உன் நினைவுச்சின்னமாய் 
என் கண்ணீரை கண் இமைக்குள் சேமிக்க 
நினைக்கிறேன். 

அதுவும் என் கண்ணை விட்டு 
வெளியே செல்வேன் 
என அடம்பிடிக்கின்றது 
என் நினைவுகளை நீ 
உன் காதல் பாதணிகளாக 
நினைத்து களட்டி விட்டு 
செல்லலாம் ஆனால் 
அது உண்னை பின் தொடரு் 
நிழல்…..

உன் அழகின் வெளிச்சம்....

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்… 
பூமியாய் எப்பொழுதும் 
உன்னையே சுற்றிச் சுற்றி வருவதே 
எனக்கு போதுமானதாக இருக்கிறது ! 



உன்னை நெருங்கவும் முடியாமல் 
விலகவும் இயலாமல் 
ஒரு எண்ணக்கோட்டுக்குள் 
அந்த எல்லைக்கோட்டுக்குள் 
உனையே சுற்றி வருகிறேன் ! 



சில பாதி பகல் சில பாதி இரவு 
மாறி மாறி நடக்கிறது என்னுள் ! 



உனக்கான நினைவுகளை எல்லாம் 
சந்திரக் கூட்டினுள் சேமித்து வைக்கிறேன் பத்திரமாய் ! 



உன் அழகின் வெளிச்சம் பட்டுப் பட்டு 
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் 
ஒளிவெள்ளம் வழிய 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் 
நான் உன்னால் ! 

நானுன் ரசிகை

காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு 
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்… 

என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்… 
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும் 
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும் 
அழகை மட்டுமல்லாது அன்பையும் 
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் ! 



ஆனால் நீயோ 
என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் 
நானுன் ரசிகை என்கிறாய் ! 



தீராத பசிகொண்ட 
என் ரசனைகளுக்கு 
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள் 
நீதான் என்னும் உண்மை 
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

பொய்யும் மெய்யும்…

என் தோள்களில் கன்னம் வைத்து 
ஏதேதோ பேசியபடியே 
நீ தூங்கிப்போகையில்… 



உன் உச்சந்தலையில் 
மெதுவாய் வைக்கிறேன் 
ஒரு பாசமான முத்தம்… 



ஆழமான அந்த 
முத்தத்தின் கதகதப்பில்… 

உன் தூக்கத்தின் இடையிலும் 
உனக்கே தெரியாமல் 
சிரிக்கிறாய் நீ அழகாய்…

நீ என்னை ஏமாற்றிய போது...

பெண்ணே..
கிறுக்கல்களும்
கவிதையாயின
நீ என்னை காதலித்த பொழுது ...
கவிதைகளும்
கிருக்கல்கலாயின
நீ என்னை ஏமாற்றிய போது...

காதல் கடிதங்கள்....

காதல் கடிதங்கள்....
தூங்காமல்
நான் எழுதிய
காதல் கடிதங்கள்
யாவும்...
சுகமாய் தூங்குகின்றன
என் தலையணை அடியில்…