Friday, 20 April 2012

நீதான்!நீதான்!நீதான்!

என் வாழ்க்கைக்கு ஒளி தந்த
சூரியனும் நீதான்!

நான் உறங்காமல் தவிப்பதற்க்கு
காரணமும் நீதான்!

யார் பார்த்தும் மயங்காத
பெண்ணவளும் நீதான்!

நான் பார்த்தும் பார்க்காத
சித்திரமும் நீதான்!

என் கண்ணிரண்டில் தெரிகின்ற
முழு நிலவும் நீதான்!

என் கண்களையே திருடிவிட்ட
கள்வியும் நீதான்!

மின்னல்களை சிறைபிடிக்கும்
ஆடவன் என்னை
ஒரு நொடியில் சிறைபிடித்த
மின்மினியும் நீதான்!

என் உயிருக்கு உயிர் கொடுக்கும்
வண்ணங்களும் நீதான்!

என் உயிரையே பரித்துவிட்ட
எண்ணங்களும் நீதான்!

No comments: