நீ வந்த பாதை
நீயும் நானும் நடந்து சென்ற
பாதை எங்கும்...
பூத்து குலுங்குகிறது நந்தவனமாய்...
என்னுள் நீ வந்த பாதையும்
பூத்து குலுங்குகிறது...
உன் மீது காதல்...
இன்று நான் நடந்து செல்லும்
பாதைகள்...
முட்களாய் என்னை குத்துகிறது...
நான் செல்லும் பாதை எங்கும்
குருதி படிந்த என் பாத சுவடுகள்...
நாம் சென்ற பாதை எங்கும்
குருதி படிந்த பாத சுவடுகளை
பதிய வைக்கிறேன்...
குருதி சுவடுகள் நந்தவனத்தில்.....
No comments:
Post a Comment