Monday, 2 April 2012

காதலித்துக் கொண்டே யிருப்பேன் என்றென்றும் ....

காதலித்துக் கொண்டே யிருப்பேன்......
என் இனியவளே,
நானு ன்னைக்
காதலிக் கின்றேன்

நீ என் காதலி
என்று ஊர் சுற்ற அல்ல!

உன்னுடன்
பார்க் சினிமா
என்றுப் போகவும் அல்ல!!

காதலனென்பதை பிறரிய‌
கவிதையென்ற பெயரில்
காகிதங்களை வீணாக்க அல்ல‌

உன்னுடன்
வெளியூர் சென்று
உன்னுடலை தழுவவும் அல்ல!!!

காதலர்கள் என்ற பெயரில்
பொது இடங்களில்
உன்னுடலை உரசிடவும் அல்ல!!!!

நானு ன்னைக்
காதலிக் கின்றேன்
நம் திருமணம் வரை
மட்டுமல்ல‌

என்னிதயம் ஒய்வெடுக்கும் வரை
காதல் புவியில் வாழும் வரை
அழியாக் காதல் வாழ வளர‌

நானுன்னை நேற்றும்
காதலித்தேன்
நானுன்னை இன்றும்
காதலிப்பேன்
நானுன்னை என்றும்
காதலித்துக் கொண்டே யிருப்பேன்
என்றென்றும் 

No comments: