Tuesday, 6 December 2011

காதலும் கவிதையும் ....


என்னுள்
எனக்கு தெரியாமல்
பிரதிபலித்தவை
இரண்டும்.

வார்த்தைகள்
இருந்தும்... நான்
முதன் முதலில்
தடுமாறியது
இதற்காகத்தான்!

உள்ளிருந்து
எனை,
கொன்றது
காதல்.

வெளி சென்று
எனை,
உயிர்பித்தது
கவிதை.

"ஆயிரம் காதல் கடிதம்"

அன்பே நான் உன் கையில் கொடுத்தது 
ஒற்றை காதல் கடிதம் 
என்றாலும் 
என் குப்பை தொட்டிகளை கேட்டுபார் 
அது கூறும் நான் உனக்கு எழுதியது 
"ஆயிரம் காதல் கடிதம்"

என்னை பிரிந்து..!!

வெகு தூரத்தில்... 
நினைவோடும்.! 

வெகு அருகில்... 
நிழலோடும்.! 

என்னுள் இணையமலேயே... 
எங்கிருக்கிறாய் என்னவனே.! 

என்னை பிரிந்து..!!

சில "நிமிடங்களுக்காக"...!


வார்த்தைகளுக்கு
வறுமையில்லை.
இருப்பினும்,
காத்திருக்கின்றேன்...
கவிதையெழுத.
நீ... எனை
கடந்து செல்லும்
அந்த சில
"நிமிடங்களுக்காக"...! 

பதில் சொல் என் அன்பே!


என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

ஒரு முறையாவது திரும்பி பார்


நீ என் கவிதைகளை
வாசிக்கவில்லை என்றால்
கூட பரவாயில்லை
கொஞ்சம் திரும்பி கண்
சிமிட்டி விட்டு போ..
என் கவிதைக்கான திறவுகோல்
உன் கண்களில் தான் உள்ளது
நான் விட்ட இடத்தில இருந்து
தொடர.....
காலமும் பூமியும் கூட
புரையோடலாம் நம்
காதல் புரையோடது
இந்த பூக்கோளம்
அழியும் வரை ...
முயற்சி செய்து வெற்றி
பெற காதல் பரிட்சை இல்லை
முடிந்த வரை அவளை
முற்றிலும் படித்து முடி
அது தான் வெற்றி
இலக்கணம் ....
கவிதை பேசி உன்னை
கவிழ்க்க முடியவில்லை
அதனால் தான் மௌனம்
பேசுகிறேன் சில நாட்களாய் .....
ஒரு முறையாவது
திரும்பி பார் நான் சிலை
என்று காக்க எச்சம் இட்டு
செல்லும் முன்...
உரைநடையில் பேசினாலும்
உன் பற்களில் எழுதுகோல்
கொண்டு உன் நாவில்
கவிதை எழுதுவதாய்
உணர்கிறேன் ..

முத்தம்.....


தத்தமது
செவிகளுக்கும்
கேளாது
உதடுகள் நான்கும்
பேசும்
இரகசியம் தான்
முத்தமோ?

தாய்மை.....


எங்கள் தாய்மையை தாலாட்ட
மன ஏழ்மையே வேண்டாம்
நேசத்தின் நாட்காட்டி
நினைவுகளில் தாலாட்டி
சோகத்தை சுவை மாற்றி
ஊக்கத்தை உணவாக்கி
நோக்கத்தில் நெறிகூட்டி
பாசத்தால் முடிசூடி
பரிவுக்கே வழிகாட்டி
நிகரில்லா சீமாட்டி
ஈரைந்து மாதம்
என்னுடன் பேசி
இறைந்து அல்ல
கரைந்து
உறைந்து போன
வலியில் வந்தேன்
வாரி அணைத்தாள்
உச்சி முகர்ந்தாள்
கொஞ்சி மகிழ்ந்தாள்
வலியை மறந்தாள்
தனிமை துறந்தாள்
இனிமை நிறைந்தாள்
தாயைத் தந்தான் இறைவன்...
தன்னால் எல்லோர்க்கும் இயலாதென்று
தாரம் தந்தான்... இறுதிவரை என்று
தாயே தாரம் என்றான்
அதுவும் போதாதென்று
அன்பைத்தந்தான்
அன்பே...! தாய் என்பதால்
அன்பே...! தான் என்பதால்

மூன்றெழுத்துக் கவிதை

மூன்றெழுத்துக் கவிதை அன்பு!
என்னை செதுக்கியவரிடமிருந்து எதிர்பார்ப்பது..
வாழ்க்கை எனும் பக்கங்களை நிரப்ப
எனக்கு வேண்டுமிந்தக் கவிதை!
தவறுகள் அனைத்தும் சரியாய்ப் போகும் இந்த
யுகத்தில் நான் சரி என எண்ணும்
சிந்தை மட்டும் தவறாய்ப் போகிறதே!
வண்ணங்கள் யாவும் என் வசம் மாறத்
துடிக்கும் இதயம் சொந்தத்துக்காக
கனவை எல்லாம் தொலைத்துவிட்டதே..
வெளியில் உங்கள் சிரிப்பு
எனக்கு இன்மை பயக்காது.
உள்ளே ஏற்பட்ட காயத்தையும் கண்ணீரையும்
என் கண்ணின் கரு துருவாய் அதைத் தாங்கும்
என் உள்த்தில் புதிய வாழ்வின் கோலம்
நீங்கள் ஏற்படுத்திய கண்ணீரின்
ஈரத்தால் அழிந்து போயிற்று!
பூவாய்ப் பூத்தது தவறா?
நான் மலர்ந்த செடியிடம் இருந்து
என்னைப் பரித்து தினம் தினம் வாட வைக்கிறீர்கள்!

என் தாயின் மடி!


அன்னை மடி...
துன்பம் போக்கி இன்பம் தந்த
இனிய மடி
சோர்வை போக்கி தெம்பை தந்த
தெளிந்த மடி
மடமை போக்கி அறிவை தந்த
அன்பு மடி
பயம் போக்கி துணிவை தந்த
தூய மடி
சோகம் போக்கி மகிழ்வை தந்த
மலர்ந்த மடி
தோல்வி போக்கி வெற்றி தந்த
வெள்ளை மடி
அதுதான் - என் தாயின் மடி!

வேண்டும்உன் அன்பு மட்டும்.


உன் கை குட்டையின்,
கால்பகுதி வேண்டாம்,
என் கண்ணீர் துடைக்க.
உன் முந்தானை,
முழுவதும் வேண்டாம்,
என் தூக்கம் முடிக்க.
முழுவதுமாகத்தான் வேண்டும்,
உன் அன்பு மட்டும்.

ஒரு பொய்யால்...........!

மனம் கவர்ந்து பேசிய நாட்கள்!........
இமைக்க மறந்து பார்த்த உருவம்!.......
விரல் சேர்ந்து இசைத்த கான்ங்கள்!....
அனைத்தும் கனவாய் போனது.....!
நீ கூறிய ஒரு பொய்யால்...........! 

Friday, 2 December 2011

அணு அணுவாய் சாகிறேன்.....


கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்
நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?
நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.

நம் காதல் நினைவுகலோடு.......!


மறக்க நினைக்கிறேன்.......!
உன் நினைவுகலை அல்ல.....!
உன் பிரிவால் நான் அனுபவித்த வேதனைகலை......!
நீ உன் புதிய வாழ்கை துனையோடு இன்பமாக இருந்தாலும் ,
நான் என் இறூதி வரை வாழந்திடுவேன் .........!
நம் காதல் நினைவுகலோடு.......!

என் தோல்விக்கான வடு....


• சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன

• என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி

• உனக்குத் துணையாக
கூந்தல் பூக்கள் இருக்கின்றன
எனக்கு
ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான்
இறைவன்

நெருங்கி பழகிய நாட்கள்........!


கோழையாய் பிறந்தவனுக்கு
காதல் எதற்கு......!
அவளை விரும்பும்போது
வந்த ஆசைகள்....!
அவ்ளிடம் சொல்லும் போது
வந்த வீரம்........!
அவளுடன் கைக்கோர்த்து
சென்ற் தருணங்கள்....!
அவளுடன் நெருங்கி
பழகிய நாட்கள்........!
அனைத்தும் புதைந்தே போனது.....!
அவன் பெற்றோர் அவனுக்கு
வேரொரு பெண் பார்க்கும்
போது.....!

புது பேனா....9566520975


ஒவ்வொரு புது பேனா
வாங்கும் போதும்
ஒரு நொடி நீ என்னுள் வந்து போகிறாய்
நீ இட்ட பெயரை எழுதி பார்க்கையில் !

ஒரு சுக நரகம்..............!


உனக்காக காத்திருந்தேன்..........!
ஒவ்வொரு நிமிடமும்..........!
என் மேல் அனலாய் சொட்ட சொட்ட.....!
அது ஒரு சுக நரகம்..............!
உனக்காக கொண்டு வந்தேன் ஓர் ஒற்றை ரோஜா.....
நீ ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்க தாமதிக்க
ஒவ்வொரு இதழாய் கிள்ளி எறிந்தேன்.........!
தூரத்தில் வண்ண புள்ளியாய் நீ வருவதை கண்டேண்......!
இல்லையென்றால் என் இருதய ரோஜாவிலும்
வெரும் காம்பு தான் மீந்திருக்கும்...........!

பழைய சட்டை...


அவளின் கண்ணீரை துடைக்கக்
கைக்குட்டை கொடுத்தேன்
கருநிற சாயன்களோ அவள் முகத்தில்
அவள் ஐ விரல் ரேகைகளோ எனது கன்னத்தில்
பின்பு தான் புரிந்தது
கண்ணீரை துடைக்க நான் கொடுத்தது
கை குட்டை அல்ல
வண்டியின் கரை துடைக்க உதவும்
எனது பழைய சட்டைஎன்று

நனைகிறேன் உன் நினைவுகளில்....


நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்.
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து.
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது....
more sugapiriyan kavithaigal pls visit sugapiriyan.blogspot.com

வலிக்கிறது உன் நினைவுகள்....


வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?
அழுவது நான்
வலிக்கிறது என்கிறது
உன் நினைவுகள்
உணவு மறந்த காலங்களில்
உடல் களைப்பு அடைவதைப்போல
உன் நினைவுகள்
இல்லாதக் காலங்களில்
இதயம் களைப்படைந்து விடுகிறது

Thursday, 1 December 2011

“நான் உன்னைக் காதலிக்கிறேன்”


நாம் நம்
இதயத்தையும்
பெயரையும்
பிரிவைப் பற்றிச் சிந்திக்காமல்
மாற்றிக் கொண்டோம்
பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
காதலர்கள் எல்லோருமே
பொய் பேசுபவர்கள்தான்
எத்தனை ஆயிரம்
பொய்கள் பேசி இருப்போம்
அதில்
நீயும் நானும் சொல்லிக்கொண்ட
“நான் உன்னைக் காதலிக்கிறேன்”
என்பது மட்டும்
உண்மையாக இருந்திருக்குமா என்ன?

வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..


உன் உதடுகள்
என் உதட்டை
உட்படுத்திக்கொள்ளும்போதுதான்
எச்சில்கூட சூடாகிப்போகும்
வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..
உறங்கிக் கொண்டிருந்த
உண்ர்ச்சிகள்
விழித்தெழுந்தென்னை
விழுங்க ஆரம்பித்துவிட்டது..
இருவரது
மூச்சுக்காற்றும்
முத்தமிட்டுக் கொள்கிறது..
கண்ணிமைகள் நான்கும்
கைகுலுக்கிக் கொள்கின்றன..
கருவிழியிரண்டும்
தாறுமாறாய்
சுழன்று கொண்டிருக்கின்றன..
வெட்கங்கள்
ஒவ்வொன்றாய்
கழன்று கொண்டிருக்கின்றன....
உடுத்தியிருக்கும் உடைகள்
தானாக களைந்துபோக எத்தனிக்கின்றன..
உற்பத்தியான வியர்வை
மேடு பள்ளங்களைக் கடந்து
உயிர்வரை நனைக்கிறது..
இருவருக்கும் இடையில்
காற்று புக முயன்று
தோற்றுப்போகிறது..
heart heart
முத்தமே
மொத்தத்திற்கும்
முதற்படி..
முத்தங்கள் தீர்ந்து போனபின்
மொத்தத்தையும் தேடி
பயணிக்க வேண்டியிருக்கிறது..

அடைந்துவிட்டேன் நரகத்தை!!


நீ தான் ரோஜாவோ?
உன் காதல் எனும் முள்
என் கண்களைக் குத்தி
காயப்படுத்துகிறது!
உன் காதல் எனக்கு வேண்டாம்.
மனம் சொல்ல...
எனினும் உன் மணம்
எனை ஈர்க்கிறது...
நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும்
என் மீது திணித்தாய்
ஏற்றுக்கொண்டேன்.
வானம் தாண்டி வா..
எனைக் காண என்றாய்..
உனக்காக நான்
கடல் தாண்டி
கரை தாண்டி
மலை ஏறி
பூமி கடந்து
மேகத்தின் குளிரைக் கடந்தேன்
பிறகோ.. சூரியன்
அதன் வெப்பத்தில்
ஒரு பகலைக் கழித்தேன்
உனக்காக பெண்ணே!
ஒளி மங்கியது.
கண் மயக்கும் இருள் படர்ந்து
நான் வெண்ணிலவில்
கால் பதிக்கும் நேரமும் வந்தது
நிலவில் நான் நிற்க
மதியின் பாதி உன் முகம்
நிலவின் ஒரு பாதி நான்
மறுபாதி நீயென
எழில் மிகு இரவில்
நம் அன்பின் ஆழத்தைக்கண்டு
நட்சத்திரங்களெல்லாம்
கைத்தட்டும் கண்கொள்ளா காட்சியை
எங்ஙனம் வருணிக்க!
நம் மயக்கமெனும் பூட்டை
திறக்கும் வண்ணம்
விடியல் ...
நீ மறையத் தொடங்கினாய்
ஏஙகினேன் உன் வருகைக்காக
நெடுதூரம் பயணித்தேன்
சொர்க்கப்பாதையைத் தொட்டேன்..
காதல் செய்பவர்களுககான
முதல் அடி போல.....
முதலடியே சொர்க்கமா?
ஒருகணம் பிரம்மித்துப்போனேன்
சுவரெல்லாம் உன் வரைபடம்
உன் சித்திரத்தின் மையாகக்
கூடாதா என்ற தாகம்
உன்னைத் தேடினேன்...
சொர்க்கத்தின் தங்கமாக ஜொலித்தாய்!
உனை கட்டித் தழுவி
அழ துடித்தேன்..
நீயோ,செல் என்று கூறி மறைந்தாய்
நடுங்கினேன்...
உடலெல்லாம் ஊசி குற்றியது.
எனை எங்கோ இழுத்துச்சென்றது
போகும் இடமெல்லாம்
நீ பேசிய வார்த்தைகள்
சிதறிக்க்டந்தன...
என் குருதியும்..அதோடு கலந்தது
பூமியில் விடியல்
விண்ணில் நான் அடைந்த இடம் இருள்
அருளற்ற இருள்!
யாதென புரியவில்லை
என்னைப் போல்
அங்கு பலர்
சொர்க்கம் கடந்துவந்தவர்களாம்!
இருக்கும் இடத்துக்கு வைத்தபெயர் நரகம்
காதலின் பொழுது தேனைச்சுவைத்தவர்களாம்
காதலித்தேன் ....காதலித்தேன்
காதலைத்தேன்... காதலைத்தேன்
........ என்றவர்கள்..
ஆம் காதல் தேன் தான்
ஆனால் வற்றிவிடுவது..
அமுதசுரபி இல்லையே?
இன்று என் காதலும் வற்றிவிட்டது
அடைந்துவிட்டேன் நரகத்தை!!

என்னை போல....


எத்தனையோ முறை
எழுதுகோலை திற‌ந்து
மூடி வைத்தேன்
ஒருமுறை கூட
ஒன்றும் எழுதவில்லை
அந்த வெள்ளை தாளை
கற்பழிக்கும் முயற்சி
இதுவரை என்னால்
இயலவில்லை
இதில் கூட தோற்றுகொண்டிருக்கிறேன்
இரக்கமில்லாத அவளின்
இதயத்தை களவாடும்
முயற்சியை போல‌
எதாவது சாபம் கொடுத்திருப்பாளோ...?!?
மையை மயங்கி போவென...;
கையை அசையாதேயென..;
புத்தியை புலம்புயென;
இப்போது கூட பாருங்கள்
எழுதுகோல் தலைகுனிந்து
ஒழுகுகிறது...?
அவள் முன் நிற்கும்
என்னை போல....

அனுமதி கொடு...


காதல் என தெரிந்தும்
அதைச் சொல்ல மனம் வரவில்லை
கண்ணில் நீர் குவிந்தும்
அவன் கண் காண மறுக்கவில்லை
என்றும் ஈரமுல்ல நெஞ்சம்
இன்று கண்ணீரால் பாரமாகிப்
போனது ஏன்?
காயமெனத் தெரிந்தும் அவன்
மாய விழிகளை ஏன் தேடுகிறேன்?
பூக்க விரும்புகிறேன்
நாளை வாடப் போகிறேன்
எனத் தெரிந்தும்.
என் வாழ்க்கையில் புள்ளிகளை
மட்டும் வைத்துச் சென்றுவிட்டான்
கோலம் போட மறந்து.
நான் பருகும் நீரில் நீ
தேனிலும் நீ.
என் உயிரிலும் நீ
உடலிலும் நீ
வென்பனியிலும் நீ
என் பணியிலும் நீ
உன் மீது ஏற்பட்ட
காதல் பிணிக்கு
மருந்தாய் வா.
காதலனே! மருந்தாய் வா.
என் கவிதையின் ஒவ்வொரு
வரிகளும் உனக்கு சொந்தம்
கள்வா.!
கவிதையை மட்டும் சொந்தமாக்கிக்
கொண்டாயே என்னை மறந்து
உனை நினைத்து எழுதும் வேலை
தூரத்தில் பாடும் குயில் சத்தம்
சந்தம் மிக்க சத்தம் அது
நீயே எனை அழைப்பது போல
உணர்ந்தேன்...
கடவுளை நம்பாத நான்
இன்று உனக்காக கடவுளை
வேண்டி நிற்கிறேன்
இல்லாத இம்சைகள் தருகிறென்
இறைவனுக்கு.
உன் பொல்லாத பாசத்தை வேண்டி
சகலமும் தெரிந்த சந்திரனுக்கே
சவால் விடுகிறேன்
உனை தினம் தினம் நான்
வருணித்து கவிதை
கூறுவது போல
என்னவனும் என்னை வருணிக்கும்
நாள் வருமென....
எல்லா பெண்களுக்கும் உள்ள
சுகம் தானே.......
என்னவனே நீ தான் என் உலகம்
என்று ஒருபோதும் சொல்லேன்
உன் உலகத்தின் புல்லாக மாட்டேனா?
அனுமதி தருவாயா?
என்றுதான் கேட்கிறேன்...
நீ சோர்வாய் இருந்தால்
தலை சாய்த்துக் கொள்ளவும்
மகிழ்வாய் இருந்தால்
என் மடி சாய்ந்துக்கொள்ளவும்
மழை விழும் தருணத்தில்
உன் நுனிவிரலால் .
புல்லின் பசுமையை.
இயற்கையை
தொடும் வேலை ஏற்படும்
கூச்சத்திற்கு
பெண்மையின் நாணமே சாட்சி...
அத்தகைய புல்லாக
நான் வாழவேண்டும்!
உன் அருகில் வாழும்
அனுமதி கொடு!
நம் அன்பெனும் கூட்டுக்குள்
என் காதலை யாரும்
பறிக்காமல்
அடைகாத்துக்கொள்கிறேன்!!

Sunday, 6 November 2011

சாவை அடையாமலே,,,,,!

காற்றை எதிர்க்கும்
வலிமை உண்மைக்கே...
ஏனென்றால்
காற்றோடு பறப்பது
பொய்யல்லவா!
கேட்போர் காதருகே
போய்ச் சேரும்
பொய்கள் பெறுமதி இழக்க...
உலகத்தையே
தன் பக்கம் இழுப்பது
உண்மையே!
பொய்கள்
கேட்போரை நாடும்
கேட்போரையே நாட வைப்பது
உண்மையே!
ஈழ மக்கள்
கேட்ட, பரப்பிய பொய்கள்
உலகின் காதுக்கெட்டாமலே
ஈழ மக்களின்
சாவுகள், துயரங்கள் மட்டுமே
உலகின் கண்ணுக்கு
புலப்பட வைத்தது எதுவென்றால்
உண்மையே!
உரக்கச் சொல்லி, உறைக்க எழுதி
பரப்பிய பொய்கள் யாவும்
சாவடைந்து மறைந்து போக
ஊமையாய் உறங்கிக் கிடக்கும்
உண்மை மட்டும்
சாவை அடையாமலே
வாழ்ந்து காட்டும்!

கருணையில் உதிரும் தர்மங்கள் ...


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய் 
கட்டில் படுக்கையில் தந்தை 

அன்னம் உண்ணா தாய் 
பால் வற்றிய மார்பு 
பசியில் அழும் தம்பி 

அம்மா பிச்சை போடுங்கள் 
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி 
பசியில்  துவளும் சிறுவன் 

உயிர்போர்த்திய நான்கு  ஜீவன்கள் 
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு 

இது வறுமைக் காகிதத்தில் 
இறைவனின் கைவண்ணத்தில்  
எழுதப்பட்ட  துக்கக் கவிதை 

விழிகளால் வாசித்த மனிதர்கள் 
 அகம்   இளகி  விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை 

ஆலயம் கோவில் மசூதி 
காணாத தெய்வ சன்னதிகளில் 
நிரம்பி வழிகிறது காணிக்கைகள் 

சிறு கருணையை எதிர்நோக்கி 
வறுமைக் கோட்டின் கீழ் 
எத்தனை எத்தனை மனிதர்கள் 

உண்டியல் நிறைய காணிக்கைகள் 
உண்ண உணவின்றி பக்தகோடிகள் 
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள் 

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை 
கருணையில் உதிரும் தர்மங்கள் 
எளியவர்களின் உயிர் காக்குகிறது 

நாளை சமூகம்


ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது
அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்
வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்
ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்
நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்
குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்
புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்
வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்
ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்
இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்
குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்
உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது
நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ
பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு
காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

இது போதும் படத்தின் வெற்றிக்கு...


தமிழ்த் திரைப்படம் என்றில்லை
எல்லா மொழிப் படமும்தான்
பாடல் காட்சியில்
நடிகை துகிலுரிக்கப்படுகிறாள்
ஆண்களின் கண்கள்
விரிகின்றன
சண்டைக் காட்சிகளில்
தேவைப்படாதபோதும்
நடிகன் சட்டையை
கழட்டியெறிகிறான்
பெண்களின் கண்கள்
விரிகின்றன
இது போதும்
படத்தின் வெற்றிக்கு
- இயக்குநர்
கருத்து ஒன்றும்
தேவையில்லை
எல்லா கருத்துகளும்
எங்களுக்குத் தெரியும்
- ரசிகர்கள்

புரியவேண்டும்..!


தனிமை வேண்டும் - அதில் 
இனிமை வேண்டும் 

ஆற்றல் வேண்டும் - யாருமதை 
போற்றல் வேண்டும் 

நேர்மை வேண்டும் - எப்போதும் 
உண்மை பேசவேண்டும் 

கனிவு வேண்டும் - என்றும் 
பரிவு யாரிடத்திலும் வேண்டும் 

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை 
எப்போதும் காத்தல் வேண்டும் 

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும் 
பொய்க்காது நடவவேண்டும் 

மனையாளொருத்தி வேண்டும் - என்றும் 
அவளிடமே காமம்வேண்டும் 

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல் 
நம்பிக்கை எப்போதும் வேண்டும் 

பகைவன் வேண்டும் - அவன் 
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும் 

இறைவனை புரிய வேண்டும் - அவன் 
ஒருவனே என்றுலகறிய வேண்டும் 

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம் 
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும் 

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில் 
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும் 

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால் 
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும் 

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும் 
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!


புதிய சந்தியாலாவது...


கண்மூடி வாய்பொத்தி காதடைத்து
கணிய‌மாய் வாழ கற்று தந்தாராம்
மகாத்மா காந்தி
காந்தியின் நாட்டில்
அவர் கொள்கைகள் இருப்பது
கல்வியேட்டில்................!?
இந்த இழிநிலையை எண்ணிபார்த்தால்
உள்ளத்தில் உதிரம் சொட்டும்
களவு கற்பழிப்பு கயமைதனமெல்லாம்
காந்தியின் நாட்டில்
வாந்தியெடுப்பது ஏனோ......?!?
ஆனாலும்
காந்தியின் குரங்குகள்
கண்மூடி வாய்பொத்தி
காதடைத்து காக்கின்றன‌
கொள்கைகளை...,
கந்தி மறந்துவிட்டர் போலும்
குரங்குகளின் மனதை கட்டிபோட‌
அக்கரை அதிகமுள்ள
சமுக ஆர்வளர்
யாரேனும் இருந்தால்
அந்த குரங்குகளின்
கண்வாய் காதை திறந்துவிட்டு
மனதை கட்டுங்கள்
அவைகளின் புதிய சந்தியாலாவது
பூரிக்கட்டும் பூமாதிவி.....

என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உன்னை காண்பதற்காக தவிக்கிறேன்
ஆனால் அதனை தவிர்க்கிறேன்
உன் வருகைக்காக பூக்களை விரிக்கிறேன்
விரித்த பூக்களை நானே எரிக்கிறேன்
என் காதலை சொல்ல நினைக்கிறேன்
பின்னர் அதனை சொல்ல மறுக்கிறேன்
எனக்குள் என்றும் சிரிக்கிறேன்
என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உன்னை காண்பதற்காக தவிக்கிறேன்
ஆனால் அதனை தவிர்க்கிறேன்
உன் வருகைக்காக பூக்களை விரிக்கிறேன்
விரித்த பூக்களை நானே எரிக்கிறேன்
என் காதலை சொல்ல நினைக்கிறேன்
பின்னர் அதனை சொல்ல மறுக்கிறேன்
எனக்குள் என்றும் சிரிக்கிறேன்
என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

உண்மையான காதல்!

காணும் பெண்களில் எலாம்
அவளை காண்பதல்ல காதல்!
எந்த பெண்ணிலும் அவளை
காணமல் இருப்பதே உண்மையான காதல்!

என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".


"தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்"
"குருடனின் பார்வை
விழும் சில்லரையின் சத்தம்,
மறக்க சொல்லும் உன் பார்வை
என் கல்லறையின் மேல் தான் விழவேண்டும்",
"புறஊதா கதிர்கள் பட்டாலும் புண்ணாகாத என்இதயம்,
உன் விழிகதிர்கள் படாததாலே உண்ணாமல் விரதம் இருக்கிறது",
"சுடுவோம் என்றறியாமல் சூடுபடும் விட்டில்பூச்சி,
உடைந்துபோகுமே என் உள்ளம்
தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்",
"முதலாய் நிலவில் மனிதன் கால் வைத்த சந்தோஷம், நீ என் தெருவில் கால் வைத்த‌ போது",
"காத்திருப்பின் வேதனை கனசந்திப்பில் கரைந்து போகும்,அப்படிதான் உன் அலட்சிய பார்வையில்கூட என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".

மழையோடு உறவாடிக் கொண்டு...


நித்தம் நீரைத் தேடித் துழாவி 
களைத்துப் போய் 
மண்ணை உழும் வேர்கள்... 

மழைத் துளிகள் நனைக்கும் போது 
போதும் போதும் என்ற நிறைவுடன் 
விருந்தை உண்டு மயக்கத்தில்... 

பச்சையில் பலவிதமாய் காணும் 
மரங்கள் வர்ணஜாலமாய் 
மழையோடு உறவாடிக் கொண்டு... 

Monday, 17 October 2011

vaalthirku nanri.....


அமைதியான
உனது
அன்பினால்
அனைவரையும்
கவர்ந்தாய் !!
நட்புக்கு
அழகான
இலக்கணம்
உன்னையன்றி
யார் இருக்க முடியும்??
எளிய
வரிகளில்
எண்ணற்ற
கவிதைகளை
சத்தமின்றி
சமர்பித்தாய் !!
பல நூறு
கவிதைகளை
படைத்த
உனது
சாதனைகள்
சாதாரணமானவைகளல்ல !!
இன்று
பிறந்த நாள்
ஆசரிக்கும்
உனக்கு
எங்களது
பாராட்டுகளும்
பரிசுகளும்
பெரிதல்ல
எங்களது
பாசத்தைவிட . . . . .
நீ
பல்லாண்டு
மகிழ்வுடன்
இனிதே
வாழ்ந்திருக்க
இதயத்தின்
ஆழத்திலிருந்து
வாழ்த்துகிறேன் !!!
உனது
வாழ்க்கை பயணம்
என்றும் இல்லாத
புது ஆண்டாய்
இந்த ஆண்டு
தொடரட்டும்……,
என்றும்
இறைவனின்
நல்லாசி
உன்னோடு !!
என்றும் அன்புடன்…..
– - – - – - நிது

Saturday, 15 October 2011

என் கல்லறையில்


கல்லறையில்கூட நாடகம் 

அவள் கண்களை 
பார்த்து மயங்கினேன் 
எனகாக கண்ணீர் சிந்துவாள் என்று 
சிந்தினால் 
என் கல்லறையில் 
அதுவும் நாடகத்திறிக்கு 
ஒத்திகையம் 

சோம்பலின் விளைவு


சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது இதயத்தின் இசை!
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்!
விளையாட நேரம் ஒதுக்குங்கள்
அது இளமையின் ரகசியம்!
படிக்க நேரம் ஒதுக்குங்கள்
அது அறிவின் ஊற்று!
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சிக்கு வழி!
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்
அது வெற்றியின் விைல!
நண்பரை கூட்டல் வேண்டும்
பகைவரை கழித்தல் வேண்டும்
இன்பங்களை பெருக்கல் வேண்டும்
துன்பங்களை வகுத்தல் வேண்டும்
மெதுவாய்ப் பேசு, மெய்யே பேசு!
இனிமையாய்ப் பேசு, இணக்கமாய்ப் பேசு!
அன்பாய்ப் பேசு, அடக்கமாய்ப் பேசு!
சிந்தித்துப் பேசு, சுருக்கமாகப் பேசு!
உண்மை உயர்வை அளிக்கும்
பொய்மை உயர்வை அழிக்கும்
அன்பு துன்பத்தை குறைக்கும்
செல்வம் துன்பத்தை பெருக்கும்
சோம்பலின் விளைவு தரித்திரம்
முயற்சியின் விளைவு முன்னேற்றம்

உன்னை போல் ஒருத்தி


உன்னை போல் ஒருத்தி 

உயிர் தந்து தாயானாள்.. 

உடன் பிறந்து உறவானாள்.. 

மனம் தந்து நட்பானாள்.. 

உலகம் தந்து மனைவியானாள்.. 

பெண் இன்றி இயங்க முடியாது 

எந்த ஆணும்...!. 

காதலை கடைச்சரக்காய்.. 

காயப்படுத்திய உன்னை மட்டும் 

பெண்ணென்று ஏற்க முடியாது 

எந்நாளும் ....!


தேடித் தேடி


உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை
*
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்

என் காதலை போல்


கற்களோ ,முற்களோ இல்லை 
ஆனால் காயங்களுக்கு பஞ்சமில்லை 
அவ்வளவு ஆழமில்லை 
என் காதலை போல் 
ஆனால் வலி அதிகம் தான் 
உன் வார்த்தைகளினால் 
உண்டாகும் காயங்களில்

குப்பைத்தொட்டி....

''அலுவலகத்தில்
குப்பைத்தொட்டி.
குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கோ
அதுதான் அலுவலகம்''

உன்னை இழந்த நாள் முதல்


என்னை பிடிக்கவில்லை என்றால் ஒரே வார்த்தையில் 
பிடிக்கவில்லை என்று விலகிவிடு ........ 

என்றாவது சந்தோசம் தருகிறாய் அதை அனுபவிக்க 
முதலே வார்த்தையால் கொல்கிறாய்........ 

நான் சிரிப்பது பிடிக்கவில்லை என்றால் என்னை வெறுத்து 
விடு வாழ்க்கை முழுவதும் சிரிக்கவே மாட்டேன் ...... 

என்னை வருத்துவதாய் எண்ணி வெறுப்பாய் பேசி பேசி 
என் உயிர் போன பின் உன் சிரிப்பை இழந்து விடாதே .... 

இறுதியாய் ஒன்று சொல்கிறேன் உன்னை இழந்த நாள் 
முதல் நான் உயிரில்லா ஜடம் தானடி ,,,,,

உருவான கிறுக்கல்கள்...


இதயத்தில் வாழும் 
நினைவுகளுக்கு முடிசூட்டுவிழா... 
உதறி சென்ற மனசுக்கு 
மன மேடையில் 
பாராட்டு விழா... 
ஏமாற்றம் தந்த உயிருக்கு நன்றியுரை... 
ஆசையை அடக்க கற்று தந்தாய்.. 
மனக்கல்லில் சிற்பம் செதுக்கினாய்.... 
இதுவும் நீ உரைத்த 
நினைவுகளால் 
உருவான கிறுக்கல்கள்... 


Wednesday, 5 October 2011

நீங்காமல் இருப்பேன் ....

என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்
அறிவாய் உயிர் காதலின்
உன்னதம் ...ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன் ....

உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்....


தொலை பேசியில் அன்பை
தந்தாய்.....உருவம்
இன்றி உணர்வுகளுடன்
வாழ்ந்தேன் ....
...கணணியிலே உந்தன்
நிஜத்தை பார்த்தேன் ..
உணர்வுகளுக்கு உருவம்
கிடைத்தது ......
உணர்வுகளை பிரிந்த
போதே உள்ளம் தீயில்
வெந்த வேதனையை
உணர்ந்ததே ....உந்தன்
உருவத்தை எப்பிடி
நான் பிரிவேன் ...
உன்னோடு வாழாத
போதும் உன் உருவத்துடன்
வாழ்ந்துவிடுகிறேன்
கற்பனையில் ஆவது ...