Tuesday, 1 May 2012

நீ...நீ....நீ.....

என் இரண்டாம் காதல் கடிதம்.....உங்கள் பார்வைக்கு....
நீ...நீ....நீ.....
கவிதை உற்பத்தி தளம் நீ...
பாதிப்பு இல்லாத புயல் நீ...
பனிமலை தந்த குளிர் நீ...
கண்டதும் கவரும் காந்தம் நீ....
என்றும் அழியாத காதல் நீ....
தினமும் கூடும் அழகு நீ...
என்னுள் புதைந்திருந்த காதலை தோண்டி வெளியே போட்டவள் நீ....
கண்கள் கொண்டு பார்வை பின்னி 
வலையை விரிப்பவள் நீ.....
சிரிப்பால் ஊசி வழியின்றி எனை மயங்க செய்தவள் நீ...
கருப்பு மின்னல் கூந்தல் கொண்டு 
தூண்டில் இட்டவள் நீ.....
பூஜை செய்யாத கடவுள் நீ...
கட்டணமில்லாத கனவு நீ...
சண்டை போடாத காதலி நீ....
நாளும் கேட்கும் பாடல் நீ....
என்னை மட்டும் மீட்டும் வீணை நீ...
நான் மட்டும் தீட்டும் ஓவியம் நீ...
என்னை கொள்ள மங்கள் வடிவில் வந்த கயவன் நீ....
உள்ளம் திருடி தலை குனிந்து செல்லும்
உலக திருடி நீ...
எந்த பிறவி எடுக்கும் போதும்
எனக்காய் வாழ துடிப்பவள் நீ...
கம்பன் மறந்த வார்த்தை நீ...
பாரதி துறந்த வெள்ளை ஆடை நீ..
இயேசு சுமக்காத சிலுவை நீ...
மாசு இல்லாத காற்று   நீ....
நான் எழுந்தது விழிக்கும் உருவம் நீ...
அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ..
என்னை அணுஅணுவாய் ரசிக்கும் ரசிகை நீ...
நேரம் காலம் ஏதும் இல்லாமல் இமைததும் என் கண்முன் வருபவள் நீ....
ராசி கோள்கள் ஏதுமின்றி பார்த்ததும் 
ஆசை வைத்தவள் நீ....
வானில் மாறும் நிறம் நீ...
மண்ணில் கலந்த உரம் நீ...
கரும்பின் இனிய சுவை நீ...
உறங்கும் வேலை இருள் நீ....
விடியலின் ஒளி நீ...
என் நெஞ்சம் கவிழ்த்த சதி நீ...
சப்த கூண்டில் வாழ்ந்த என்னை மௌன தனிமையில் அழைத்தவள் நீ...
மாப்பிள்ளை என உன் வீட்டி அறிமுகம் செய்ய துடிப்பவள் நீ...
எப்படி கவிதை எழுதுவதோ என்று அறியாத கலையை தந்தவள் நீ...
சொற்படி கேளாத நதி என்னை 
அணையை கட்டி தடுத்தவள் நீ...
மென்மையுள்ள  பெண்மை நீ...
காணும் காட்சி யாவும் நீ...
அண்மையில் வந்த பெருமை நீ...
பயிரிட தகுந்த விலை நிலம் நீ...
கையெழுத்து போட  சொன்னால் என்பெயர் எழுதி சிரிப்பவள் நீ...
பச்சை சமவெளி புல்வெளி நீ..
எச்சில் படாத செவ்விதழ் நீ...
என் மூச்சு oxigen நீ...
நஞ்சு இல்லாத வார்த்தை நீ...
நான் கெஞ்சி கேட்கும் முத்தம் நீ..
மஞ்சள் தரும் வாசம் நீ...
கைகோர்த்து ரேகை மாற்றி காதல் வரைபடம் வரைபவள் நீ...
பழமை ஆகாத அதிசயம் நீ...
அல்ல அல்ல குறையாத ஆனந்தம் நீ..
முடிவுரை இல்லாத முன்னுரை நீ...
அர்த்தம் உள்ள வாழ்க்கை நீ...
அன்பின் பள்ளி பாடம் நீ...
என் அன்னை தரும் பாசமும் நீ...
எங்கும் நீ...எதிலும் நீ...
என்னுள்ளேயும் நீ மட்டுமே ....
என் உயிரே....
பிரியமுடன் பிரியன்....

No comments: