Wednesday, 9 May 2012

கனிவான நினைவோடு......!

அன்பின் ஆழத்தால்
ஆழ்மனதில் உண்டான
பிரிவின் வலிகளை
சற்றே பழகிட
தயார் செய்த என்
பிஞ்சு இதயத்தை
கவிதை என்ற அம்பை
கடுகதியில் தொடுத்து
உன் நினைவுகளின் பிடிக்குள்
சிக்கவைத்து என்
விழிகளை நனைக்கிறாய்
கவிதைகளின் காயத்தால்
கலங்கிய விழிகளுடன்
கண்மணியே உந்தன்
கனிவான நினைவோடு......!

No comments: