Tuesday, 1 May 2012

வேலை இல்லாதவனின் பகல்....

வேலை இல்லாதவனின் பகல்....
பரண் மீது படுத்துறங்கும்
புத்தக மூட்டைகள் என்னை 
கேலி செய்கிறது...
பெற்றவர்களும் பதறுகிறார்கள்....
பிறகென்ன....
இன்னும் எதனை வருடம் தான் சுமப்பார்கள் என்னையும்....
வேலைக்காக நடந்ததில் 
இருந்த ஒரு செருப்பும் அறுந்து போனது...
தபால்காரனும் நான் கேட்காமலேயே சொல்லி விடுகிறான்
லெட்டர் ஏதும் வரவில்லை என்று...
காத்திருப்பில் குறைந்தது நம்பிக்கை...
கூடியது வயது...
எதிர்படுபவர்களின் விசாரணை அம்புகளில் தினம் சிதைகிறது 
என் நம்பிக்கை...
விடியும்போதே விரக்தியும் விளித்து கொள்கிறது  ...
வீட்டில் அடைந்து கிடக்கும் 
பகல் பொழுதுகள்
பகையாகவே தோன்றுகிறது....
அத்தியாவசிய தேவைகளில் இனி 
உணவு,உடை,இருப்பிடம்,
இவற்றோடு வேலையையும் சேர்த்து கொள்ளுங்கள்....
பிரியமுடன் பிரியன்...

No comments: