தனிமைகள் துணையாகும்
துணிச்சல்கள் வலுவிழக்கும்
விருப்பங்கள் நிறைவேறும்
குழப்பங்கள் தொட மறுக்கும்
சுடும் தீயில் விழுந்தாலும்
ஒரு முறை தான் இறந்துடுவேன்
பெரும் நோயில் விழுந்துதான்
தினம் தினம் நான் சாகிறேன்
உயிர் போகும் வலிகள் எல்லாம்
உணர்ந்தது இல்லை
இதுவரை நான் .....
உன்னை பிரியும் நாள் பார்த்தால் தான்
கண்ணில் உயிர் வலி கசிகிறது .......
என்னில் நிலவரம் கலவரம்
எனக்கு நீ கிடைத்த ஒரு வரம்
வரங்களை வழியில் நான்
விட்டு செல்கிறேன்
எனக்கு நீ இருகிறாய்
உனக்கு என் ஞாபகம்
No comments:
Post a Comment