காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்
காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்
வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்
காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை
எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு
காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்
காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்
காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்
தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்
காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்
No comments:
Post a Comment