Friday, 3 June 2011

குழந்தை ...

திர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
டந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்

No comments: