அதிகாலைப் பனியில்
அழகாய்க் குளித்த
ரோஜா மலர் போல
என் முன்னே நீ வந்தாய்...
அந்தியில் வரும் மயக்கம்
எனக்கு அதி காலையில் வந்து விட...
அலுவலக பரபரப்பு
எனை அடித்துத் தள்ள...
உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...
உனைப் பிரிய மனமில்லாமல்
அரை குறை மனதோடு
கிளம்பிச் செல்கிறேன்
அலுவலகத்திற்கு...
No comments:
Post a Comment