அரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி
என் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை
தளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்
மனம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி
பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது
ஏளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்
பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள
பருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு
தளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை
No comments:
Post a Comment