ஊர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை
சற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்
கனவில்வந்து பெண்மை திருடியவன் பருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .
No comments:
Post a Comment