Sunday, 27 October 2013

கண்ணீர் சிந்தும் நேரங்களில...

விளையாடும் குழந்தை
அடிபட்டதும் அம்மாவை
அழைப்பது போல்
கண்ணீர் சிந்தும் நேரங்களில்
அனிச்சையாய் உன்னையே
தேடுகிறேன் நான்...

Friday, 25 October 2013

உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !

இனி இழப்பதற்க்கு ஒன்றும்
இல்லை என்னை இழந்தேன்
இதோ இன்று உன்னையும் இழந்துவிட்டேன்.
...!!
வாழ் நாள் முழுதும் வருத்தப்பட உன்
அன்பு இருக்கிறது போதும் இது போதும்
எனக்கு.....!!
நீ விலகிப் போகிறாய் உன் கரம் பற்றி நான்
கதரிடவே நினைக்கிறேன்... .!!
உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !
எல்லாம்
கடந்து போகுமென்கிறார்க ள்...?? கடந்து போக
நீ என்ன
ஆற்று நீரா.. ???
என் உயிரின் துடிப்பு..... நீ கடந்து போனால்
நான் வாழ்வது எப்படி?......
நீ மடிந்து போ என்றாலும் நான் மனதார
போகிறேன்....
*என்னை இல்லை என் அன்பை உண்மையென
ஏற்றுக் கொள்..... *

கண்ணீருக்கு காரணம்...

உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது

Wednesday, 23 October 2013

புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று!!

புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!

Unmai....

Sunday, 20 October 2013

நீ விலகிச் செல்வதால் !

ஒரு முறை நேரில் பார்த்த
உன்னை காலமெல்லாம்
என்னருகில் பார்க்க ஆசை !
நிறைவேறாது என்ற ஒன்றை
நிறைவேற்ற துடிக்குது மனம் !
துடிக்கும் மனம் ஏனோ இன்று
துடிப்பிழக்கிறது என்னை விட்டு
நீ விலகிச் செல்வதால் !

நேற்றே நான் இறந்து விட்டேன்...

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க
முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன்
கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல்
யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும்,
உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல்
சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும்
எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல
முடிகிறதா?
என் முன்னாலே நீ உன்
புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில்
நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான்
சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த
உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள
மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த
சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக்
கொண்டே
இருக்க வேண்டும் என நான்
பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக
மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய்
இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என
நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில்
நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க
இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக்
கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட
அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய்
இருக்கவில்லை.
என் காதல்
நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ
வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க
தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS
சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்...
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS
இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும்
சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என்
மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய
அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற
ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன்
அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள்
சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க
நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான்
கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும்
பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள்
எழுதலாம்
என புதிய அனுபவத்தையும்
எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ
அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய்
உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்...

பேசாத நொடிகள் ...

நீ
பேசாமல்
தாமதித்த
ஒவ்வொரு
நிமிடமும்..
பொக்கிஷமாக்கியது
நீ பேசிய நொடிகளை

Saturday, 19 October 2013

காதலிக்க ஆசை...

காதலிக்க ஆசை தான் இறந்து போன
என் இறந்த காலத்திற்கும்
தொலைந்து போன என்
சந்தோசங்களுக்கும்
துடித்து கொண்டிருக்கும் என்
நிகழ் காலத்திற்கும்
சேர்த்து என்னை போல்
என்னை நேசிக்க ஒருவர் கிடைத்தால்
காதலிக்க ஆசைதான் எதிர்
காலத்தை...

Wednesday, 16 October 2013

En uyire...


நான் திருடியது உன் வார்த்தையை
நீ
திருடியது எனது இதயத்தை எனது இத
வார்த்தை இன்றி கூட வாழலாம்
நீ வைத்திருக்கும் என் இதயம் இன்றி நான்
எப்படி வாழ
இதயமின்றி துடிக்கிறேன்
உனக்காக.......

Monday, 14 October 2013

Naam sirithaal deepawali...

அடடா.. இந்த
தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !
துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும்
மக்களும் !
காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல
பண்டிகைக்கும்தான் !
எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..
தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..
எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..
இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !
அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன்
புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம்
செய்து ருசித்து..
எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன
புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !
பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..
சேலை கட்டத் தெரியாமல்
கட்டி நிற்கும்
சுடிதார்
சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !
அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !
பின்.. இருக்கும் வெடிகள்
வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள்
பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய்
சேருவோம்..
மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..
வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !
அன்று முழுக்க
பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் !

My love is pain...

காற்றின் மொழியும்
காதலின் வலியும்
கடைசிவரை புரிவதில்லை
அதை அனுபவித்து உணரும்வரை...!!

Sunday, 13 October 2013

En vethanai...

மன்னிக்க கற்றுக்கொடுத்த
உன்னால் எப்படி மறக்க
கற்றுத்தர முடியவில்லை...
விளைவு!!!!!!!!!
விரும்பாத உன்னால்
விதையாகி விழுந்து
மரமாக என் சோகங்கள்...
விருப்பமில்லை என்றால்
விட்டிருப்பேன் எந்தன்
வேதனையில் குளிர்காய
விட்டிருக்கமாட்டேன்.
தானாக வந்து
தனிமையை தந்துவிட்டு
முக்கோண காதலால்
முதுகெலும்பை
உடைத்துவிட்டு
உண்ர்வில்லா உருவமாய்
ஆக்கிச்சென்றாய்...
மன்னித்துவிட்டேன்
ஆனாலும் மறக்க முடியவில்லை.......

Saturday, 12 October 2013

Kanneer...

என் கண்ணீரின்
பக்கங்களை
புரட்டிப்பார்
உன் முகவரியிடப்பட்ட
காதல் கடிதங்கள்
கரைந்து கிடக்கும்

Friday, 11 October 2013

Unmai...

நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை ...
விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த ...
அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய் ...
தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய் ...
மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும் ...
காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும் ...
திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...
கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன ...

Octobet18

Varukira oct 18 en piranthathinam...valaithala nanbargalin vaalthukkalai ethir paarthu piriyamudan piriyan...
Con:+919566520975

Thursday, 10 October 2013

En swasam...

காதல் சொல்ல போகையில்
அவள் கண்களை பார்க்கும்
அந்த ஒரு நொடியில்
சொல்லபோன வார்த்தைகள்
எல்லாம் முடமாகி என்
மனதோடு மூடப்பட்டுவிடுகிறது...

Anbe vaa...

நீ இல்லாத ஒவ்வொரு
நொடியிலும் நான் உணர்கிறேன்
என் இதயம் இறந்து கிடக்கும் உணர்வுகளை
என்னவளே மனம் விரும்பி
ஒரு வார்த்தை சொல்லிவிடு
என்னவள் நீதான் என்று...

Tuesday, 8 October 2013

Kopam...

குடை இன்றி நடந்திடும்
போதெல்லாம் என் காதலியின்
துப்பட்டா எனக்கு குடையானது
அவள் அறியாது நான் பல
முறை அழுதிருக்கிறேன்
அவள் எனக்காக நனைகிறாள் என்று

Mutham...

தினம் தினம் பூக்கும்
என் இதழ்கள்
உன் முத்தத்தில்,
தீர்ந்த பாடில்லை...
இதழ் வாடாமல் இருக்க
நீ காட்டும் அக்கறையில்
ஓயாத உன் முத்தங்கள்...!!!

Ithal thiravaayo...9566520975

என்னை முழுதாய் கொள்ளையடித்த
வினாடிகள் எதுவாய்
இருக்குமென
கடிகாரத்தை பார்த்து கேட்கிறேன்
.....
உன்னை பார்த்தவுடன்
வியர்வை சுரப்பிகளுக்கேல்லாம்
ஏனோ
வெட்கம் போயி விடுகிறது....
என்னுளே இவ்வளவு வெட்கமா என
நானே ஆச்சர்யம் கொள்ள
வைக்கிறாய்....
என்னுயிர் எங்கே இருக்கிறது
என பல நாட்கள் தேடி இருக்கிறேன்...
அதை கண்டு பிடித்து தந்தவள் நீ.......
உன்னை பார்த்த பிறகு எனக்கு மிக
மிக பிடித்தவை எல்லாம்
இரண்டாம் இடத்தில்....
மனதில் ஒன்று வைத்து உதட்டில்
ஒன்று பேசுவது கேள்வி பட்டிரு
க்கிறேன்....
அதை நிஜத்தில் காட்டினாய் நீ.....
சிந்தித்து சிந்தித்து உன்னை செ
லவளித்தாலும் விஸ்வரூபம்
எடுத்து
கொண்டே இருக்கிறாய் என்
நெஞ்சில்....
கண்ணாடிக்கு முன்னே இரு நிமிட
ங்கள்
அதிகமாய் நிற்க வைக்கிறாய் நீ....
நீ அருகில் இருந்தால்
யுகன்களோ நிமிடங்களாக....
நீ பிரிந்தால்
நிமிடங்களோ யுகங்களாக....
நீ வருவதற்கு முன்னும் வந்த
பின்னும் நான் அதிகம்
பேசுவதென்னவோ
என் கடிகாரத்திடம் தான்...ஆயினும்
ஏனோ என் மன ஓட்டதி
புரிந்து கொள்வதே இல்லை...
தன ஓட்டத்திலேயே போகிறது....
எல்லோரும் சிரித்தால் நானும்
சிரிக்கிறேன்...
எல்லோரும் மௌனமானாள்
நானும் மௌனமானாள்
நானும் மௌனமாகிறேன்...
என்னிடத்தில் நான் இல்லாத
வினாடிகள் அவை வேறென்ன
செய்ய....?
எல்லாவற்றையும் ரசிக்க
வைக்கிறாய்....
நான் உண்ணும் உணவை தவிர...
தலைகீழாய் புத்தகம்
வைத்து கொண்டு படித்து
முடிக்கிற திறமையை தந்தவள் நீ....
t .v
பார்த்து கொண்டிருக்கிறேன்...என்
னாவ்டுகிறது என்பது புரியாமல்
உன் நினைவில் நான்
இருந்து கொண்டு....
உன்னை யோசித்து கொண்டே இல்லாத
நகத்தை கடிக்கிறேன்...
தானாய் சிக்கும பொது மற்றவர்
நெற்றியை சுரிக்கினால் என்
உதடை மடித்து சமாளிக்கிறேன்...
பல சமயம் நான்
யாரென்று கில்லி பார்த்து பின்
தான் உணர வேண்டி உள்ளது...
கண்மூடி யோசித்து யோசித்து
உன் முகம் கொண்டு வர
பார்கிறேன்....
நெஞ்சதிளிருக்கும் உன் முகம்
கண்ணிற்குள் வர மறுக்கிறது...
என் தனிமையை சேகரித்து வாய்த்த
உன்
நினைவுகளை கொண்டே இனிமையா
க்குகிறாய்,,,,
உன்னை எப்படி கூப்பிடுவது எனய
ோசிது யோசித்து
யோசித்து கொண்டே என்
பெயரை மறக்கடிக்கிறாய்...
உன்னை பார்த்திருக்கும்
நொடிகளில் நெஞ்சில் பூ பூக்க
வைக்கிறாய்....
பட்டாம் பூசிகளை பறக்க
விடுகிறாய் என் நெஞ்சில் ....
நீ பேசும் பொது என்
தாய் மொழியை மறக்க
வைக்கிறாய்....
தமிழில் இல்லாதம்
வார்த்தைகளை தேடி
ஓட வைக்கிறாய்....
தூக்கத்தில்
உன்னை உளறி விடுவேனோ என
இப்போதெல்லாம் நான்
உறங்குவதே இல்லை...
யாராவது உன்
பெயரை உச்சரித்தாலே
என் இடத்தைய
துடிப்பு இரு மடங்காகிறது...
உன்னை மறக்க வலி என்ன 24
மணி நேரமும்
யோசிக்கிறேன்....
அந்த 24 மணி நேரமும்
உன்னையே நினைக்கிறேன்
என்பதை மறந்து விட்டு...
என் பேனா முனைகூட உன்
பெயருக்கு வலிக்க கூடாதென
காற்றில் தான்
உன்பெயரை எழுதி பார்கிறேன்....
நீ சின்ன சின்ன குறிப்பால் உன்
மனதை உணர்த்திய வினாடிகள் தாம்
எனக்கு பெரிய பெரிய
பாதிப்பை தந்திருக்கிறது...
யுகங்கள் பல கழிந்து பாதிக்க பட்ட
எனக்கே இப்படியெனில்
பாதிப்பை ஏற்படுத்திய உனக்கு....
ஆனாலும் பாவம் நீ
நான் கேட்டேனா இவற்றையெல்லாம்
உன்னிடம்....
இப்படி அவஸ்தைகளை தருவாய் என்றும்
எனை உயிரோடு கொள்வாய் என்றும்
தெரிந்திருந்தால்
உன்னுடனான
சந்திப்புகளை தவிர்த்திருப்பேன்..
..யோசிக்கிறேன்
தவிர்க்க
முடியுமாவென்று என்னுள்ளே
ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம்
முடியாதென்று சத்தியம்
செய்கிறது
உள்ளே இருக்கும் என் மனம் ...
இறுதியாய்
ஒரு உண்மையை சொல்கிறேன்
இந்த அவஸ்தைகளும்
எனக்கு பிடித்து தான்
இருக்கிறது...
ஓர் உயருக்குள் இன்னோர்
உயிரை அடைத்து வைத்திருக்கும்
சுகமான அவஸ்தை...
இந்த அவச்தைஎல்லாம் உனக்கும என நான்
இதயத்தால் கேட்டால் நீ கண்களால் ஆம்
என்கிறாய்...
உன் மௌனம் எனக்கு மிக பிடிக்கும்
என்பதால் உன்
மௌனத்தாலேயே எனை கொல்லாதே.
...
இதை திறந்து பதில் சொல்....
காத்திருக்கிறேன் அந்த
மூன்று வார்த்தைக்காக.....
பிரியமுடன் பிரியன் ...

Nee...nee...9566520975

நீ...நீ....நீ.....
கவிதை உற்பத்தி தளம் நீ...
பாதிப்பு இல்லாத புயல் நீ...
பனிமலை தந்த குளிர் நீ...
கண்டதும் கவரும் காந்தம் நீ....
என்றும் அழியாத காதல் நீ....
தினமும் கூடும் அழகு நீ...
என்னுள் புதைந்திருந்த
காதலை தோண்டி வெளியே போட்டவ
ள் நீ....
கண்கள் கொண்டு பார்வை பின்னி
வலையை விரிப்பவள் நீ.....
சிரிப்பால்
ஊசி வழியின்றி எனை மயங்க செய்தவள்
நீ...
கருப்பு மின்னல் கூந்தல் கொண்டு
தூண்டில் இட்டவள் நீ.....
பூஜை செய்யாத கடவுள் நீ...
கட்டணமில்லாத கனவு நீ...
சண்டை போடாத காதலி நீ....
நாளும் கேட்கும் பாடல் நீ....
என்னை மட்டும் மீட்டும் வீணை நீ...
நான் மட்டும் தீட்டும் ஓவியம் நீ...
என்னை கொள்ள மங்கள் வடிவில் வந்த
கயவன் நீ....
உள்ளம்
திருடி தலை குனிந்து செல்லு
ம்
உலக திருடி நீ...
எந்த பிறவி எடுக்கும் போதும்
எனக்காய் வாழ துடிப்பவள் நீ...
கம்பன் மறந்த வார்த்தை நீ...
பாரதி துறந்த வெள்ளை ஆடை நீ..
இயேசு சுமக்காத சிலுவை நீ...
மாசு இல்லாத காற்று   நீ....
நான் எழுந்தது விழிக்கும் உருவம்
நீ...
அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ..
என்னை அணுஅணுவாய் ரசிக்கும்
ரசிகை நீ...
நேரம் காலம் ஏதும் இல்லாமல்
இமைததும் என் கண்முன் வருபவள் நீ....
ராசி கோள்கள்
ஏதுமின்றி பார்த்ததும்
ஆசை வைத்தவள் நீ....
வானில் மாறும் நிறம் நீ...
மண்ணில் கலந்த உரம் நீ...
கரும்பின் இனிய சுவை நீ...
உறங்கும் வேலை இருள் நீ....
விடியலின் ஒளி நீ...
என் நெஞ்சம் கவிழ்த்த சதி நீ...
சப்த கூண்டில் வாழ்ந்த என்னை மௌன
தனிமையில் அழைத்தவள் நீ...
மாப்பிள்ளை என உன் வீட்டி அறிமுகம்
செய்ய துடிப்பவள் நீ...
எப்படி கவிதை எழுதுவதோ என்று
அறியாத கலையை தந்தவள் நீ...
சொற்படி கேளாத நதி என்னை
அணையை கட்டி தடுத்தவள் நீ...
மென்மையுள்ள பெண்மை நீ...
காணும் காட்சி யாவும் நீ...
அண்மையில் வந்த பெருமை நீ...
பயிரிட தகுந்த விலை நிலம் நீ...
கையெழுத்து போட சொன்னால்
என்பெயர் எழுதி சிரிப்பவள் நீ...
பச்சை சமவெளி புல்வெளி நீ..
எச்சில் படாத செவ்விதழ் நீ...
என் மூச்சு oxigen நீ...
நஞ்சு இல்லாத வார்த்தை நீ...
நான் கெஞ்சி கேட்கும் முத்தம் நீ..
மஞ்சள் தரும் வாசம் நீ...
கைகோர்த்து ரேகை மாற்றி காதல்
வரைபடம் வரைபவள் நீ...
பழமை ஆகாத அதிசயம் நீ...
அல்ல அல்ல குறையாத ஆனந்தம் நீ..
முடிவுரை இல்லாத
முன்னுரை நீ...
அர்த்தம் உள்ள வாழ்க்கை நீ...
அன்பின் பள்ளி பாடம் நீ...
என் அன்னை தரும் பாசமும் நீ...
எங்கும் நீ...எதிலும் நீ...
என்னுள்ளேயும் நீ மட்டுமே ....
என் உயிரே....
பிரியமுடன் பிரியன்....