Friday, 11 October 2013

Unmai...

நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை ...
விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த ...
அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய் ...
தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய் ...
மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும் ...
காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும் ...
திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...
கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன ...

No comments: