என் வாழ்வின் முழு நிலவு நீ
என் வசந்தத்தின் தென்றல் காற்று நீ
என் இன்பங்களின் புன்னகை ஒலி நீ
என் துன்பங்களின் கண்ணீர் துளி நீ
என் பயணங்களின் பாதச் சுவடு நீ
என் உயிரின் இதயத் துடிப்பு நீ
என் கனவுகளின் நினைவுத்
தொகுப்பு நீ
என் வாழ்வின் எல்லாமே நீதான்
என்றானபின்
இனி நீ என்ன நான் என்ன
நாம் என்று சொல்லலாமே நம் உறவை
No comments:
Post a Comment