மானிடா!
சற்றே சிந்தித்து பார்
இங்கு நான் சொல்வது
புதிய கதையல்ல
புராதன காலம் முதல்
பூவுலகில் கூறிவரும்
பாரம்பரிய கதையே!
அன்று ஆண்டவனால்
ஆண் உருவாகினான்
ஆண் உருவாகினான்
பூமியின் சொத்தான
மண்ணில் இருந்து
புதுப் பொலிவுடன்
உயிரும் கொடுக்கப்பட்டான்
அவனே ஆதாம்!
சற்றே சிந்தித்த இறைவன்
ஆடவனே உன்
தனிமையை போக்கிட
உன் விலா என்பெடுத்து
ஆக்கிவைத்தான் பெண்ணவளை
உயிரும் கொடுத்தான்
உணர்வு பூர்வமாய்
அவளே ஏவாள்!
உன் நெஞ்சினிலிருந்து
உருவாகிய பெண்ணை
உன் நெஞ்சுக் கூட்டினுள்
காத்திட மாட்டாயா?
பெண்ணடிமை ஒழித்து
பேதமை போக்கி
பெருவாழ்வு கொடுத்திடு
பெண்ணினம் வாழ்ந்திட!
No comments:
Post a Comment