Wednesday, 28 December 2011

நித்தமும் நீ வேண்டும்...

அன்று நம் வானம்
ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது

அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்

கைகோர்த்து கதை பேசி
சிறு சண்டை புரிந்து
சின்னதாய் சீண்டி
சிறு ஊடல் கொண்ட
சினேகமான நினைவுகள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்
நினைவுகளை நிரந்தரமாய்
தந்துவிட்டு செல்லாதே!
நித்தமும் நீ வேண்டும்
சிறு சண்டை நான் போட!

No comments: