Tuesday, 20 December 2011

அவள் ஒரு கவிதை


அவள் ஒருக் கவிதையென‌
என் முன் தோன்றினாள்
காற்றெனக் கருதினேன்
தென்றலென தீன்டியே
என் மனதில் அமர்ந்தாள்............
மலர்கள் மலர்வதை
கண்டவருண்டோ கண்டேன் நான்
புன்னகை பூக்கும் அவளை
கொண்டேன் காதலெனும் பாசம் பீறிட‌
கவலை மறந்து நீரிறைக்கும்
கவளை போலானேன்
காதலுக்கு கண்ணில்லை பாரும்...............
குழலெனும் துளைக் கருவி
இசையெனும் ஓசையெழுப்ப‌
காற்றது உட்புக ஒலிதரும் உதவி
நான் கர்வம் கொள்ள அவள்
என்னுள் புகுந்து ஒளி தந்தாள்
நான் பரவசமாகவே.................................
காதலிக்க அவளின் சம்மதம் தேவை
கற்பனையெனும் ஒருதலைபட்சம்
மதமாகியோ என் மனமர்ந்ததுவே
பெண்களுக்கு எப்போதும் தாமதம் தான்
வாழ்க்கையில் அவசரபுத்தி கொள்வார்
ஆண்களன்றோ..........................
மின்னலென அவள் மறைய‌
இடியென என் மனம் குமுற‌
மழையென கண்ணீர் பெய்ய‌
காதலெனும் துயரம் கண்டேன்
வாழ்வென்பது அவளுடன் என்று...............
கவிதைக்கு தோல்வியல்ல காரணம்
காதலுக்கு அடித்தளம் காமமில்லை
அழகெனும் அர்ப்பமும் அதுவல்ல‌
மனமென்னும் முல்லைக்கு வாசம் தர‌
அவள் எனும் பெண்பாலே அவசியம்
ஆண்பால் உணரும் எதிர்மறை ஈர்க்க.........................

No comments: