Wednesday, 14 December 2011

ஏன்..?
நீ பேசி வைத்த பின்னும்
என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார்...?
துரத்தும் உன் ஞாபக
தூறலோ..?
*************************************************
கைபேசி திரையில்
உன்
எண் ஒளிர்ந்ததும்....
இளையராஜாவின்
இன்னிசை ஒலிக்கிறது
இந்த உயிருக்குள்...?!
***************************************************
உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புவது
குறைந்துபோன காரணம் இதுதான்...
உனக்கு அனுப்பும்
குறுஞ்செய்திகள் அதிகரிக்க அதிகரிக்க...
என் உயிர் இளைத்துகொண்டே வருகிறது...?!
******************************************************
உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு
மாற்றி பதிவு செய்து வைத்தாலும்...
கண்டு பிடித்து விடுகிறாள்
என் குறும்புக்கார தங்கை...?!
***************************************************
இரவில் போர்வைக்குள் இருந்து
நீ அனுப்பும்
குறுஞ்செய்திகளின் பிரிய நிறத்தை..
பகலில் படிப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது...?!
******************************************************
தொடர்ந்து அழைப்பு விட்டும்
எடுக்காத நேரங்களில்...
"பூ கட்டி கொண்டு இருப்பேன்" என்றாய்..?!
தொடர்ந்து ஒரு வார அழைப்பு விட்டும்
எடுக்காமல்...
கடைசியில் யாருடனோ
தாலி கட்டிக்கொண்டு வந்தது ஏன்..?

No comments: