பிரிந்து சென்ற உன்னை
பிறகொரு சந்திப்பில்
சந்தித்தபோது ,
விழிகளால் உன்னை
நேருக்கு நேர்
சந்திக்க இயலவில்லை!
அந்த வலிகளையே
இங்கு வார்த்தைகளாய்
சமர்ப்பித்துள்ளேன் !
உன்னைப் பார்க்க
இரவு முழுவதும் உறங்காதிருந்து
காலையில் பார்த்து மகிழ்ந்தது ஓர் காலம்!
இன்று உன்னை
பார்த்த காரணத்தினால்
உறக்கமின்றி துடிப்பது என் சாபம்!
தோழியே விளையாட்டாய்கூட
என்னுடன் நீ
இருந்ததில்லை பேசாமல் !
இன்று என்றாவது நீ பேசுவாய்
என்ற நம்பிக்கை கூட
கரைந்துகொண்டிருக்கின்றன சர்க்கரையாய்!
எத்தனை அறிவுரைகள்
என் வெற்றிக்கு
தோள்கொடுத்த உன் கைகள் !
நம்பிக்கை ஊட்டிய
உன் வலிமை
மொழிகள் !
என்கண்ணீர் வாங்கிய
உன் கருணை
விழிகள் எங்கே தோழி ?
எதுவும் இல்லாத நேரத்தில்
என்னுடன் நீ
இருந்தாய் !
எல்லாம் கிடைத்தபோது
ஏன் அருகில் இருந்தும்
தூரமாகிப் போனாய் ?
உன் அன்பு
மொழிகள்
எங்கே?
உன் நட்பு
விழிகள்
எங்கே?
வாழக்கற்றுக்கொடுதுவிட்டு
என் வாழ்க்கையை
எடுத்துச்சென்றுவிட்டாயே!
உன் கைகோர்த்து
நடந்த
சாலையில்
நான் மட்டும்
நடக்கிறேன்
தனிமையில் .......
என் மௌனம் களைய
பல காமெடிகள்
செய்தாயே!
இன்று என் மகிழ்ச்சி களைய
நீயே காரணமாகி
விட்டாயே தோழியே !
என் காதல் தோல்வியின்போது
கரம் பற்றி ஆறுதல்
சொன்னாய் !
நான் உத்தியோகம் இழந்து
நின்றிட்டபோது
புது உத்வேகம் தந்தாய் !
தவறுகள்
நான்
செய்திட்டபோது
பிரிவுதந்து
என் தவறை
உணர்த்தினாய் !
இன்று உன் உறவின்றி
தவிக்கிறேன் நான்
இதை நான் உனக்கு எப்படி உணர்த்த தோழி !
செய்த தவறுக்காக
மன்னிப்பு
கேட்கிறேன்1
தோழியே அன்பான
உன் நட்பை
யாசிக்கிறேன் !
புரிந்துகொள் தோழி
நம் நட்பை புதுப்பிக்க
மீண்டும் ஒரு வாய்ப்புக்கொடு தோழி !
நூலறுந்த பட்டமாய்
தவிக்கிறது
என் மனது
தோழியே
மீண்டும் உன்
நட்புக்கரம் சேர்ந்திடத் துடிக்கும் ..................
No comments:
Post a Comment