Wednesday, 28 December 2011

இறுதி மூச்சுவரை...

உறவுகளை தொலைத்து
உள்ளத்தால் வாடுகையில்
உறவுகளாய் இங்கு
பற்பல உள்ளங்கள்
ஒரு நொடி சந்திப்பில்
ஓராயிரம் கதைகளை
ஒவ்வொன்றாய் பகிரும்
உண்மை பாசங்கள்
எனக்கான உறவை வைத்தே
என்னை கொல்லும்
அன்பு வார்த்தைகள்
பாசத்தை பகிர்வதில்
பற்பல பாச சண்டைகள்
இத்தனையும் இப்படியே
வேண்டுமே வாழ்க்கையின்
இறுதி மூச்சுவரை

No comments: