Wednesday, 28 December 2011

நட்போடு காத்திரு....

என் நட்புக்கு கிடைத்த
இனிய நட்பே!
நட்பால் நட்பான
நட்பை பற்றி
நான் கூற வார்த்தைகள்
நாட்கணக்காய் தேடினேன்
வார்த்தைகளும் கிடைக்கவில்லை
கவிதையும் கிடைக்கவில்லை
காரணத்தை மட்டுமிங்கு
கவியாக சொல்கிறேன்
உனக்காய் ஓர் கவிதை
உதிக்கையில் எழுதிடுவேன்
நட்போடு காத்திரு
நட்பின் கவிதைக்காய்!

No comments: