Friday, 30 December 2011

விளக்கு:

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை

வறுமைக் கோடு...

எந்த ரப்பரைக் கொண்டும்
அழிக்க மூடியவில்லை
வறுமைக் கோடு...

உன் கண்ணின் கரு விழியில்..


கருவிழியும் கருவறையும் :-
அன்று பத்து மாதம் கரு உற்றிருந்தேன்...
என் தாயின் கரு வறையில்..
இன்று என் எஞ்சிய காலமெல்லாம் கருவுற்றிருக்க
அசையடி உன் கண்ணின் கரு விழியில்.. 

இது உனக்கு புரியவில்லையா...]

உன் வார்த்தைகள் என்னுடன் பேச மறுத்தாலும்
உன் மௌனம் மட்டும்
என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும் உன் அன்பான
அந்த வார்த்தைகளையே மனம் தேடுகிறது
இது உனக்கு புரியவில்லையா...

காதலன் மொழி...


புரிந்துகொள்!
தூக்கம் வரவில்லை என்றால்
உன்னை தாலாட்ட சொல்லுவேன்.
நீயே மௌனமாய் இருந்தால்,
நான் எப்படி தூங்குவது.
மனத்தில் வலி வந்தால்,
உன்னிடம் ஆறுதல் கேட்பேன்.
நீயே வலி தந்தால்,
நான் எங்கே போவது?
ஒரு நாள் புரிந்து கொள்வாய் காதலின் வலி.
அன்று புரிந்து கொள்வாய்
இந்த காதலன் மொழி...

ஆசை-


ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்திருக்க ஆசை
ஓயாது கதை பேசி
உன்னுடன் விழித்திருக்க ஆசை.
செல்லமாக சீண்டி உன்னைச்
சிணுங்க வைக்க ஆசை
நீ சிரிக்கும் அழகினிலே
சித்தம் பறிகொடுக்க ஆசை..
உறங்கும் போது
உன்னைத் தாலாட்ட ஆசை..
ஊரெல்லாம் உன் பேரை
சொல்லி வர ஆசை-
உன் கோபப் பார்வையிலே
குளிர் காய ஆசை.
கொஞ்சும் குரல் இசையில்
தினம் கூத்தாட ஆசை..
உன்னோடு கை கோர்த்து
உலகம் சுற்றி வர ஆசை..
உயிர் பிரியும் போதும்
உன் மடி சாய ஆசை...

என் காதல் வித்தியாசமானது !


நான் காதலிப்பது
உன் உடலை அல்ல
உன் உயிரை
நான் விரும்புவது
உன் அழகை அல்ல
உன் மனதை
உன்னுடன் வாழ நான்
ஆசைப்படவில்லை
நீ வாழும் உலகில் வாழவே
ஆசைப்படுகிறேன் !
உருவமில்லா உன் மனதை கேட்டு
உருவமில்லா என் உயிர்
துடிக்கிறது உயிர்நாடியாய் !
தகப்பன் வீட்டில் நீ இருக்கும் போது
பிறந்த உன் மீதான என் காதல்
நீ கணவன் வீடு சென்றாலும்
உயிர் வாழும்
மனம் கொண்டு மனம் சேர்த்து
என் வாழ்வில் மணம் வீச செய்தவளே !
என் மன அரண்மனையின் மகாராணியே !
நீ வாழும் உலகில் வாழ்வதே
எனக்கு போதும் !
இப்போதாவது புரிந்துகொள்
என் காதல் வித்தியாசமானது !

என் உயிரே!


அன்பே!
ஏன் அப்படி பார்க்கின்றாய்
என்னை..........

கண்ணே!
உன் விழியசைவில் கண்டேன்
என்னை..........

என் இதயமே!
உனைக்கண்டு மற‌ந்தது
என்னை.........

ஆருயிரே!
என் மனம் கேட்டது
என்னை.........

பெண்ணே!
ஏன் இப்படி ஆனேன் அறியவில்லை
என்னை.........

காதல்நாயகியே!
நீ கிடைக்காத வேலை இப்படியாக்கும்
என்னை............

எல்லாம் நீ!
எல்லை மீறாமல் காதலி
என்னை.................

உலகமே!
யோசிக்க மறந்தவனென்றது
என்னை.................

என் உயிரே!
மீண்டும் யாசிக்கின்றேன் நினைவில் வை
என்னை.............

எல்லாம் பொய்!
என்றறிந்த பின் நொந்தென்
என்னை....................

Wednesday, 28 December 2011

காதலுடன் நாமிருந்து!

அன்பே!
நாம் காதலித்த காலம்
என் நெஞ்சோடு உள்ளது
உனக்கும் கூட
உள்ளுக்குள் நினைவிருக்கா?

இனிமையான நேரத்திலும்
குளிர்சாதனப் பெட்டியிருந்து
அப்போது வெளிவந்த
தண்ணீர் போத்தல் போல்
முத்து முத்தாய்
வியர்வைத் துளிகள்
அழகிய வதனமெங்கும்!

என்னோடு நீ இங்கு
மகிழ்ந்திருக்கும் நேரத்தில்
மற்றவர் நம்மை
பெற்றவரிடம் மாட்டி
போர்க்கொடி தூக்கிடுவாரென
படபடக்கும் நம்
காதல் நெஞ்சம்!

நம்மவர் வீட்டிற்கு
நம் காதல் தெரிந்திட
வெடித்திட்ட பூகம்பத்தில்
நாம் பட்ட வேதனைகள்
சொல்லித்தான் தெரியணுமா?

நாம் பசிக்கு உண்ண
காதல் சோகமும்
தாகத்தை போக்கிட
கண்ணீர் அருவியும்
விருந்தான காலமது!

நம் காதலின் சக்தியால்
பெற்றவர் மனதை வென்று
திருமணத்தில் ஒன்றிணைந்து
காதல் செய்யும் வயது வந்த
கட்டிளம் பருவத்து
காளைக்கும் கன்னிக்கும்
பெற்றவர் ஆகியுள்ளோம்!

நாம் காதலித்த காலத்தில்
நம் பெற்றவர் போட்டு வைத்த
காதல் தடைகள் இங்கு
கனவிலும் வேண்டாம் நம்
காதல் மனங்களில்!

நம் செல்வங்கள் விரும்பிய
காதல் வாழ்க்கையை
கனிவாக சேர்த்து வைப்போம்
காதல் ஜோடிகளாய்
காதலுடன் நாமிருந்து!

காதலுடன் நாமிருந்து!!!!!

அன்பே!
நாம் காதலித்த காலம்
என் நெஞ்சோடு உள்ளது
உனக்கும் கூட
உள்ளுக்குள் நினைவிருக்கா?

இனிமையான நேரத்திலும்
குளிர்சாதனப் பெட்டியிருந்து
அப்போது வெளிவந்த
தண்ணீர் போத்தல் போல்
முத்து முத்தாய்
வியர்வைத் துளிகள்
அழகிய வதனமெங்கும்!

என்னோடு நீ இங்கு
மகிழ்ந்திருக்கும் நேரத்தில்
மற்றவர் நம்மை
பெற்றவரிடம் மாட்டி
போர்க்கொடி தூக்கிடுவாரென
படபடக்கும் நம்
காதல் நெஞ்சம்!

நம்மவர் வீட்டிற்கு
நம் காதல் தெரிந்திட
வெடித்திட்ட பூகம்பத்தில்
நாம் பட்ட வேதனைகள்
சொல்லித்தான் தெரியணுமா?

நாம் பசிக்கு உண்ண
காதல் சோகமும்
தாகத்தை போக்கிட
கண்ணீர் அருவியும்
விருந்தான காலமது!

நம் காதலின் சக்தியால்
பெற்றவர் மனதை வென்று
திருமணத்தில் ஒன்றிணைந்து
காதல் செய்யும் வயது வந்த
கட்டிளம் பருவத்து
காளைக்கும் கன்னிக்கும்
பெற்றவர் ஆகியுள்ளோம்!

நாம் காதலித்த காலத்தில்
நம் பெற்றவர் போட்டு வைத்த
காதல் தடைகள் இங்கு
கனவிலும் வேண்டாம் நம்
காதல் மனங்களில்!

நம் செல்வங்கள் விரும்பிய
காதல் வாழ்க்கையை
கனிவாக சேர்த்து வைப்போம்
காதல் ஜோடிகளாய்
காதலுடன் நாமிருந்து!

நிர்க்கதியான வாழ்க்கையில்!

அன்போடு இங்கு
ஆகுதி பண்ணி
அடுத்தவர் மலைத்திட
ஆனந்த வாழ்க்கையில்
ஐக்கியமாய் வாழ்ந்திட்ட
ஓர் தாய் பெற்றெடுத்த
ஓப்பற்ற செல்வங்கள் நாம்!

ஆயிரம் கதை சொல்லி
அற்புதமான கற்பனைகளுடன்
அளவான வருமானத்தில்
அதிஷ்ட லக்சுமிகளாய்
ஆயுளுக்கும் வாழ்ந்திட
ஆசைதனை வளர்த்திட்ட
அழகிய வம்சம் நாம்!

காலத்தின் கோலத்தால்
போர் என்ற கோரத்தால்
பேரிடிகள் பல ஏற்று
பேதலித்து நிலை குலைந்து
சொத்துகள் பல இழந்து
சோகங்கள்தனை சுமந்த
திக்கற்ற உள்ளங்கள் நாம்!

உள்நாட்டு மண்ணிலே
உடுத்த உடையேதுமின்றி
உணவிற்கும் வழியின்றி
உறவுகள் யாருமின்றி
உயிர்ச்சேதம் பல பார்த்து
ஊமையாய் அழுதிட்ட
நாட்களை எண்ணுகிறோம்!

கூட்டுக் குடும்பத்தின்
கூரையை பதம் பார்த்த
குண்டு மழையிலே
குருதியில் நனைந்த எம்
குடும்பத்தின் உறவுகளை
ஒரு கணப் பொழுதினிலே
இழந்திட்ட உறவுகள் நாம்!

பௌர்ணமி நேரத்தில்
பகிர்ந்துண்ட கூட்டாஞ்சோறு
இன்னும் எம் நினைவில்!
நிஜமாய் இருந்த எம்
நிகரற்ற உறவுகளை
நிரந்தரமாய் இழந்த எம்
நிர்க்கதியான வாழ்க்கையில்!

காத்திட மாட்டாயா?

மானிடா!
சற்றே சிந்தித்து பார்
இங்கு நான் சொல்வது
புதிய கதையல்ல
புராதன காலம் முதல்
பூவுலகில் கூறிவரும்
பாரம்பரிய கதையே!

அன்று ஆண்டவனால்
ஆண் உருவாகினான்
பூமியின் சொத்தான
மண்ணில் இருந்து
புதுப் பொலிவுடன்
உயிரும் கொடுக்கப்பட்டான்
அவனே ஆதாம்!

சற்றே சிந்தித்த இறைவன்
ஆடவனே உன்
தனிமையை போக்கிட
உன் விலா என்பெடுத்து
ஆக்கிவைத்தான் பெண்ணவளை
உயிரும் கொடுத்தான்
உணர்வு பூர்வமாய்
அவளே ஏவாள்!

உன் நெஞ்சினிலிருந்து
உருவாகிய பெண்ணை
உன் நெஞ்சுக் கூட்டினுள்
காத்திட மாட்டாயா?
பெண்ணடிமை ஒழித்து
பேதமை போக்கி
பெருவாழ்வு கொடுத்திடு
பெண்ணினம் வாழ்ந்திட!

காதலை நேசிப்போம் ...

கண்ணீர் விட்டு அழுவது
பிடிக்காது உனக்கு
அதனால்தான்
கவிதை எழுதி அழுகிறேன்..
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்

கூட வருவாயா?

அன்பே!
நீ கூண்டுக்குள் அடைந்திருக்கும்
கூண்டுக்கிளியா? - இல்லை
கூண்டை விட்டு வர தயங்கும்
பச்சைக்கிளியா?
பொறுத்தது போதும்
வெளியேற துணை நிக்கிறேன்
கூட வருவாயா?

நட்போடு காத்திரு....

என் நட்புக்கு கிடைத்த
இனிய நட்பே!
நட்பால் நட்பான
நட்பை பற்றி
நான் கூற வார்த்தைகள்
நாட்கணக்காய் தேடினேன்
வார்த்தைகளும் கிடைக்கவில்லை
கவிதையும் கிடைக்கவில்லை
காரணத்தை மட்டுமிங்கு
கவியாக சொல்கிறேன்
உனக்காய் ஓர் கவிதை
உதிக்கையில் எழுதிடுவேன்
நட்போடு காத்திரு
நட்பின் கவிதைக்காய்!

இறுதி மூச்சுவரை...

உறவுகளை தொலைத்து
உள்ளத்தால் வாடுகையில்
உறவுகளாய் இங்கு
பற்பல உள்ளங்கள்
ஒரு நொடி சந்திப்பில்
ஓராயிரம் கதைகளை
ஒவ்வொன்றாய் பகிரும்
உண்மை பாசங்கள்
எனக்கான உறவை வைத்தே
என்னை கொல்லும்
அன்பு வார்த்தைகள்
பாசத்தை பகிர்வதில்
பற்பல பாச சண்டைகள்
இத்தனையும் இப்படியே
வேண்டுமே வாழ்க்கையின்
இறுதி மூச்சுவரை

வேண்டும் உன் பாசம்....!


அமைதியான நேரம் - என்
மனது தேடிய நேசம்
அருகில் இல்லாத சோகம்
பனித்தது கண்களில் வந்து
கன்னங்களை வருடி இங்கு
கேள்விகள் கேட்டது நெஞ்சை
விடைகள் தேட எண்ணி
தோற்றது எந்தன் இதயம்
பாசப்பிரிவுகள் இன்று
பந்தாடுது இன்ப நினைவை
வேச நெஞ்சங்கள் மத்தியில்
வேண்டும் உன் பாசம்....!

நித்தமும் நீ வேண்டும்...

அன்று நம் வானம்
ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது

அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்

கைகோர்த்து கதை பேசி
சிறு சண்டை புரிந்து
சின்னதாய் சீண்டி
சிறு ஊடல் கொண்ட
சினேகமான நினைவுகள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்
நினைவுகளை நிரந்தரமாய்
தந்துவிட்டு செல்லாதே!
நித்தமும் நீ வேண்டும்
சிறு சண்டை நான் போட!

Wednesday, 21 December 2011

காதல்!


கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....
ஊடல்
உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.
நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்
காதல்
நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..
சொல்லாமல் சொல்லினாள் - காதல்!

நாளை நீயும்....9566520975


கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.
புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.
உன் மணத்திற்காய்
இன்று நானும்.
என் மரணத்திற்காய்
நாளை நீயும்.

Tuesday, 20 December 2011

உன்னால் சாகவேண்டும்...


நீ அருகில்
இருக்கும்பொழுது
உன் வாசத்தை மட்டுமே
சுவாசிப்பதால்,
மூச்சுக்காற்றில்
ஆக்சிஜன் அளவுகூட
கொஞ்சம்
குறைந்துதான் போகிறது...

பரவாயில்லை
காதலியே,
உனக்காக சாகவேண்டும்...
இல்லையேல்,
உன்னால் சாகவேண்டும்... 

தனியே விடுவதில்லை ...


என் தனிமையிலும் 
நீ என்னை 
தனியே விடுவதில்லை 
சிந்தைக்குள் வந்து 
சிதைத்துவிட்டுத்தான் 
செல்கிறாய்!!!

என் தோழிக்காக...


பிரிந்து சென்ற உன்னை
பிறகொரு சந்திப்பில்
சந்தித்தபோது ,

விழிகளால் உன்னை
நேருக்கு நேர்
சந்திக்க இயலவில்லை!

அந்த வலிகளையே
இங்கு வார்த்தைகளாய்
சமர்ப்பித்துள்ளேன் !

உன்னைப் பார்க்க
இரவு முழுவதும் உறங்காதிருந்து
காலையில் பார்த்து மகிழ்ந்தது ஓர் காலம்!

இன்று உன்னை
பார்த்த காரணத்தினால்
உறக்கமின்றி துடிப்பது என் சாபம்!

தோழியே விளையாட்டாய்கூட
என்னுடன் நீ
இருந்ததில்லை பேசாமல் !

இன்று என்றாவது நீ பேசுவாய்
என்ற நம்பிக்கை கூட
கரைந்துகொண்டிருக்கின்றன சர்க்கரையாய்!

எத்தனை அறிவுரைகள்
என் வெற்றிக்கு
தோள்கொடுத்த உன் கைகள் !

நம்பிக்கை ஊட்டிய
உன் வலிமை
மொழிகள் !

என்கண்ணீர் வாங்கிய
உன் கருணை
விழிகள் எங்கே தோழி ?

எதுவும் இல்லாத நேரத்தில்
என்னுடன் நீ
இருந்தாய் !

எல்லாம் கிடைத்தபோது
ஏன் அருகில் இருந்தும்
தூரமாகிப் போனாய் ?

உன் அன்பு
மொழிகள்
எங்கே?

உன் நட்பு
விழிகள்
எங்கே?

வாழக்கற்றுக்கொடுதுவிட்டு
என் வாழ்க்கையை
எடுத்துச்சென்றுவிட்டாயே!

உன் கைகோர்த்து
நடந்த
சாலையில்

நான் மட்டும்
நடக்கிறேன்
தனிமையில் .......


என் மௌனம் களைய
பல காமெடிகள்
செய்தாயே!

இன்று என் மகிழ்ச்சி களைய
நீயே காரணமாகி
விட்டாயே தோழியே !

என் காதல் தோல்வியின்போது
கரம் பற்றி ஆறுதல்
சொன்னாய் !

நான் உத்தியோகம் இழந்து
நின்றிட்டபோது
புது உத்வேகம் தந்தாய் !

தவறுகள்
நான்
செய்திட்டபோது

பிரிவுதந்து
என் தவறை
உணர்த்தினாய் !

இன்று உன் உறவின்றி
தவிக்கிறேன் நான்
இதை நான் உனக்கு எப்படி உணர்த்த தோழி !

செய்த தவறுக்காக
மன்னிப்பு
கேட்கிறேன்1

தோழியே அன்பான
உன் நட்பை
யாசிக்கிறேன் !

புரிந்துகொள் தோழி
நம் நட்பை புதுப்பிக்க
மீண்டும் ஒரு வாய்ப்புக்கொடு தோழி !

நூலறுந்த பட்டமாய்
தவிக்கிறது
என் மனது

தோழியே
மீண்டும் உன்
நட்புக்கரம் சேர்ந்திடத் துடிக்கும் ..................

உன் திருமண அழைப்பு...

உனக்கு தெரியாமல் 
ஓராண்டுகள் 
உன் பார்வையால் ஓட்டிவந்த 
என் 
காதலை 
வெட்டி விடுகிறது 
உன் திருமண அழைப்பு

இமை மூடி தூங்கினேன் ...


உயிரே...

தாகம் எடுக்கிறது தண்ணீர்
குடிகமுடியவில்லை ....

விழித்திருந்தால் உன் நினைவு
வருமென்று ....

இமை மூடி தூங்கினேன்
என் கனவிலும் உன் உருவம்
என்னை வாட்டுதடி.....

என் உணர்விலும் உயிரிலும்
கலந்தவளே ....

இன்று என்னை கலங்கவிட்டு
சென்றதேனடி ..... 

காதலியே...

தொட்டு கொள்ள மையாக இருந்தேன், 
அள்ளி கொள்ள ஆசையாய் இருந்தேன், 
வாங்கி கொள்ள மலராய் இருந்தேன், 
நேசித்து கொள்ள அன்பாய் இருந்தேன், 
ஒட்டி கொள்ள உயிராய் இருந்தேன், 
உன்னை கொள்ள மனதாய் இருந்தேன்…. 

காதலியே, 
என்னை கொள்ள 
காதலாய் இருந்தாயே'…. 

அலைகிறேன்.....


உயிரே...

நீ என்னை நேசிதபோது
பௌர்ணமி நிலவா இருந்த ....

என்னை வின்மேகமாய்
மூடிவைத்தாய்.....

விண்ணாக நான் இருந்தாலும்
அதில் விடிவெள்ளியாக
நீ இருப்பாய் என்று சொன்னாய்....

இன்று மழைமேகமாய் நான்
அலைகிறேன்.....

மழைதுளிகளோடு
கண்ணீர் துளிகளையும்
சேர்த்து பூமி எங்கும் தெளிகிறேன் .....


உன் பாதம் பட்ட பாதசுவட்டில்
என் கண்ணீர் துளிகளையவது
தஞ்சமடையட்டுமே என்று...... 

அணைக்க வருவீயா????.........


தேவதை ....

இல்லை ஒரு காதல் என்று
ஏங்கிய எனக்கு.....

தீக்குள் தென்றலாக வந்து
என்னை கட்டியனைதாய்.......

நம் காதல் கைகூடும் என்று
நினைத்தபோது ......

நீ வோரோருகரம் பிடித்தாய்......

தீக்குள் தென்றலாக வந்தவளே.....

என் இதயத்தை மீண்டும் தீக்குள்
எரிகிறது ....


தேவதை ....

இல்லை ஒரு காதல் என்று
ஏங்கிய எனக்கு.....

தீக்குள் தென்றலாக வந்து
என்னை கட்டியனைதாய்.......

நம் காதல் கைகூடும் என்று
நினைத்தபோது ......

நீ வோரோருகரம் பிடித்தாய்......

தீக்குள் தென்றலாக வந்தவளே.....

என் இதயத்தை மீண்டும் தீக்குள்
எரிகிறது ....

அணைக்க வருவீயா????......... 

அவள் ஒரு கவிதை


அவள் ஒருக் கவிதையென‌
என் முன் தோன்றினாள்
காற்றெனக் கருதினேன்
தென்றலென தீன்டியே
என் மனதில் அமர்ந்தாள்............
மலர்கள் மலர்வதை
கண்டவருண்டோ கண்டேன் நான்
புன்னகை பூக்கும் அவளை
கொண்டேன் காதலெனும் பாசம் பீறிட‌
கவலை மறந்து நீரிறைக்கும்
கவளை போலானேன்
காதலுக்கு கண்ணில்லை பாரும்...............
குழலெனும் துளைக் கருவி
இசையெனும் ஓசையெழுப்ப‌
காற்றது உட்புக ஒலிதரும் உதவி
நான் கர்வம் கொள்ள அவள்
என்னுள் புகுந்து ஒளி தந்தாள்
நான் பரவசமாகவே.................................
காதலிக்க அவளின் சம்மதம் தேவை
கற்பனையெனும் ஒருதலைபட்சம்
மதமாகியோ என் மனமர்ந்ததுவே
பெண்களுக்கு எப்போதும் தாமதம் தான்
வாழ்க்கையில் அவசரபுத்தி கொள்வார்
ஆண்களன்றோ..........................
மின்னலென அவள் மறைய‌
இடியென என் மனம் குமுற‌
மழையென கண்ணீர் பெய்ய‌
காதலெனும் துயரம் கண்டேன்
வாழ்வென்பது அவளுடன் என்று...............
கவிதைக்கு தோல்வியல்ல காரணம்
காதலுக்கு அடித்தளம் காமமில்லை
அழகெனும் அர்ப்பமும் அதுவல்ல‌
மனமென்னும் முல்லைக்கு வாசம் தர‌
அவள் எனும் பெண்பாலே அவசியம்
ஆண்பால் உணரும் எதிர்மறை ஈர்க்க.........................

என்னை காதலிக்க ....

பெண்ணே....

நீ என்னை காதலிக்க

என் கண்களை கட்டிவிட்டு
ஓவியம் தீட்ட சொன்னாய்.....

என் விரல்களை வெட்டிவிட்டு
காவியம் படைக்க சொன்னாய்.....

என் இதழ்களை பிரித்துவிட்டு
உன்னை வர்ணிக்க சொல்கிறாய்.....

இன்றோ என் காதல்
மதில் சுவர்களை உடைத்துவிட்டு......


உன் திருமணத்திற்கு என்னை
அழைக்கிறாய்.....

வாழ்க நீ பல்லாண்டு....

ஆசை!...


கபடமில்லா உன்
சிரிப்பை காண ஆசை!
கோபத்தில் சிவக்கும் உன்
கன்னங்கள் காண ஆசை!
உதட்டோரம் சிந்தும் உன்
புன்னகை காண ஆசை!
பிடித்த சுவையை ருசிக்கும் உன்
முகபாவனை காண ஆசை!
ஒவ்வாத சுவையை உணரும் உன்
முகபாவனை காண ஆசை!
ஊஞ்சலில் ஆடும் உன்
உருவம் காண ஆசை!
ஆடுகையில் உள்ளப்பூரிப்பில் உன்
செயல் காண ஆசை!
கீழே விழ நேரும்போது உன்
பயம் காண ஆசை!
பயத்தில் உன்
சிரிப்பை காண ஆசை!
திட்டும் போது சுளிக்கும் உன்
முகம் காண ஆசை!
வாய்விட்டு அழமுடியாமல்
கண்ணீர் சிந்துவதை காண ஆசை!
அழுது முடித்து களைத்த உன்
முகம் காண ஆசை!
என்னோடு கோபம் கொண்டும்
திருப்பும் உன் முகம் காண ஆசை!
இத்தனை ஆசைகள்
எனக்கிருந்தும்
இவற்றுள் ஏதேனுமொன்று
உனக்கும் உளதா என
தெரிந்து கொள்ள ஆசை!...

காதலன் மொழி...


புரிந்துகொள்!
தூக்கம் வரவில்லை என்றால்
உன்னை தாலாட்ட சொல்லுவேன்.
நீயே மௌனமாய் இருந்தால்,
நான் எப்படி தூங்குவது.
மனத்தில் வலி வந்தால்,
உன்னிடம் ஆறுதல் கேட்பேன்.
நீயே வலி தந்தால்,
நான் எங்கே போவது?
ஒரு நாள் புரிந்து கொள்வாய் காதலின் வலி.
அன்று புரிந்து கொள்வாய்
இந்த காதலன் மொழி...

அழகூட மனமில்லை......


பெண்ணே...

என் கண்களுக்கு நீ
இமையாக இருந்து நீ என்
கண்களை காத்தாய்......

இன்று என்னைவிட்டு நீ
பிரிந்தபோதும் .....

எனக்கு அழகூட மனமில்லை......

இமையாக இருந்து
என் கண்களை காத்த இமைகள் .....

நனைந்துவிடுமோ என்றுதான்....

உனக்கு புரியவில்லையா...

உன் வார்த்தைகள் என்னுடன் பேச மறுத்தாலும்
உன் மௌனம் மட்டும்
என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும் உன் அன்பான
அந்த வார்த்தைகளையே மனம் தேடுகிறது
இது உனக்கு புரியவில்லையா...

காதலிக்கிறேன்.....


உயிரே....

நான் உன்னை நேசிக்க
தொடங்கிய நாள்முதல்....

என் விழிகள் உறங்க மறந்தது......

உன் மீது எனக்கு வந்த காதல் .....

என் மீது உனக்கும் சொல்லாமலே.....

உன்னை என் கையில் ஏந்த
வந்தபோது ....

என் இதயம் காயம்பட்டது .....

கண்கள் ஈராமானது.....

இப்போதும் நான் சொல்கிறேன்.....

நான் உன்னை காதலிக்கிறேன்.....

நீ.....

Friday, 16 December 2011

காதல் என தெரிந்தும்...

காதல் என தெரிந்தும்
அதைச் சொல்ல மனம் வரவில்லை
கண்ணில் நீர் குவிந்தும்
அவன் கண் காண மறுக்கவில்லை
என்றும் ஈரமுல்ல நெஞ்சம்
இன்று கண்ணீரால் பாரமாகிப்
போனது ஏன்?
காயமெனத் தெரிந்தும் அவன்
மாய விழிகளை ஏன் தேடுகிறேன்?
பூக்க விரும்புகிறேன்
நாளை வாடப் போகிறேன்
எனத் தெரிந்தும்.
என் வாழ்க்கையில் புள்ளிகளை
மட்டும் வைத்துச் சென்றுவிட்டான்
கோலம் போட மறந்து.
நான் பருகும் நீரில் நீ
தேனிலும் நீ.
என் உயிரிலும் நீ
உடலிலும் நீ
வென்பனியிலும் நீ
என் பணியிலும் நீ
உன் மீது ஏற்பட்ட
காதல் பிணிக்கு
மருந்தாய் வா.
காதலனே! மருந்தாய் வா.
என் கவிதையின் ஒவ்வொரு
வரிகளும் உனக்கு சொந்தம்
கள்வா.!
கவிதையை மட்டும் சொந்தமாக்கிக்
கொண்டாயே என்னை மறந்து
உனை நினைத்து எழுதும் வேலை
தூரத்தில் பாடும் குயில் சத்தம்
சந்தம் மிக்க சத்தம் அது
நீயே எனை அழைப்பது போல
உணர்ந்தேன்...
கடவுளை நம்பாத நான்
இன்று உனக்காக கடவுளை
வேண்டி நிற்கிறேன்
இல்லாத இம்சைகள் தருகிறென்
இறைவனுக்கு.
உன் பொல்லாத பாசத்தை வேண்டி
சகலமும் தெரிந்த சந்திரனுக்கே
சவால் விடுகிறேன்
உனை தினம் தினம் நான்
வருணித்து கவிதை
கூறுவது போல
என்னவனும் என்னை வருணிக்கும்
நாள் வருமென....
எல்லா பெண்களுக்கும் உள்ள
சுகம் தானே.......
என்னவனே நீ தான் என் உலகம்
என்று ஒருபோதும் சொல்லேன்
உன் உலகத்தின் புல்லாக மாட்டேனா?
அனுமதி தருவாயா?
என்றுதான் கேட்கிறேன்...
நீ சோர்வாய் இருந்தால்
தலை சாய்த்துக் கொள்ளவும்
மகிழ்வாய் இருந்தால்
என் மடி சாய்ந்துக்கொள்ளவும்
மழை விழும் தருணத்தில்
உன் நுனிவிரலால் .
புல்லின் பசுமையை.
இயற்கையை
தொடும் வேலை ஏற்படும்
கூச்சத்திற்கு
பெண்மையின் நாணமே சாட்சி...
அத்தகைய புல்லாக
நான் வாழவேண்டும்!
உன் அருகில் வாழும்
அனுமதி கொடு!
நம் அன்பெனும் கூட்டுக்குள்
என் காதலை யாரும்
பறிக்காமல்
அடைகாத்துக்கொள்கிறேன்!!

Wednesday, 14 December 2011

sugapiriyan kavithaigal: காதலிப்பதைத் தவிர?

sugapiriyan kavithaigal: காதலிப்பதைத் தவிர?

கவிதை சித்திரவதை...


உன்னை காதலித்தது தவறுதான்
அதற்காக என் வாழ்நாள் முழுவதும்
உன் இதயத்தில் சிறைத்தண்டனைய
தினமும் கவிதை சித்திரவதை 

நன்றிகள் ஆயிரம்....

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் பிரியனின் பிரியமான வணக்கங்கள்...நீண்ட நாட்களுக்கு பின் அதிக கவிதைகள் எழுதிய திருப்தி தற்போது தோன்றி உள்ளது...நீங்கள் அளித்த ஆதரவே இதற்கு காரணம் ....உங்கள் அன்பிற்கு நன்றிகள்....நிச்சயம் உங்கள் அனைவரின் எண்ணங்களையும் என் கவிதை மூலம் நிச்சயம் வெளிபடுதுவேன்.....நன்றிகள் ஆயிரம்....

காதல் தோல்வி....


உன் இதயம் இரும்பென்று
தெறியாமல் மோதியதில்
என் இதய கண்ணாடியில்
சேதம்..........
காதல் தோல்வி.

கெட்டப்பழக்கம்

ஒற்றை ரோஜா சூடிய நீ 
முதன்முதலில் என்னை கடந்து சென்று 
குடைக்குள்ளிருந்து 
மெல்ல திரும்பிப் பார்த்தபோது... 
ஆம்! 
அப்போதிருந்துதானடி தொற்றி கொண்டதெனக்கு 
இந்த கவிதை எழுதும் கெட்டப்பழக்கம். 
ஏன்..?
நீ பேசி வைத்த பின்னும்
என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார்...?
துரத்தும் உன் ஞாபக
தூறலோ..?
*************************************************
கைபேசி திரையில்
உன்
எண் ஒளிர்ந்ததும்....
இளையராஜாவின்
இன்னிசை ஒலிக்கிறது
இந்த உயிருக்குள்...?!
***************************************************
உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புவது
குறைந்துபோன காரணம் இதுதான்...
உனக்கு அனுப்பும்
குறுஞ்செய்திகள் அதிகரிக்க அதிகரிக்க...
என் உயிர் இளைத்துகொண்டே வருகிறது...?!
******************************************************
உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு
மாற்றி பதிவு செய்து வைத்தாலும்...
கண்டு பிடித்து விடுகிறாள்
என் குறும்புக்கார தங்கை...?!
***************************************************
இரவில் போர்வைக்குள் இருந்து
நீ அனுப்பும்
குறுஞ்செய்திகளின் பிரிய நிறத்தை..
பகலில் படிப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது...?!
******************************************************
தொடர்ந்து அழைப்பு விட்டும்
எடுக்காத நேரங்களில்...
"பூ கட்டி கொண்டு இருப்பேன்" என்றாய்..?!
தொடர்ந்து ஒரு வார அழைப்பு விட்டும்
எடுக்காமல்...
கடைசியில் யாருடனோ
தாலி கட்டிக்கொண்டு வந்தது ஏன்..?