Friday, 29 April 2011

தேவையில்லை வார்த்தைகள்…

உதடுகள் உச்சரிக்கத் தவிர்க்கின்ற
உன் உள்ளத்து ஆசைகளையும்
உள்வாங்கி உடனே
நிறைவேற்றிவிடத் துடிக்கும் எனதாசைகள்..
மனதில் நினைத்தது
சொல்லாமலே நிறைவேறிவிட்ட
உனது முக மகிழ்ச்சிக்காகத்தான் அதுவும்..
உண்மைதான்..
சில நேரங்களில் சில விசயங்களுக்கு
வார்த்தைகள் தேவைப்படுவதில்லை..

No comments: