Friday, 29 April 2011

காலை மழை…

 
முதல்முறை கருத்தரித்த பெண்ணுக்கிருக்கும்  
கூடுதல் கவனத்தோடும் நிதானத்தோடும்  
நின்று மெதுவாய் அழகாய்
தூறிக் கொண்டிருக்கிறது இந்த காலை மழை.. 
 
மழையையும் நனைதலையும் 
ரசிக்க விடாமல் செய்யும்  
இந்த வேலைக் கால அவசரங்களை  
இன்றேனும் திரும்பா நாடு கடத்த இயலுமோ..
.

No comments: