நீ ஆசை ஆசையாய் வளர்க்கும்
இந்தப் பூச்செடிதான்
எவ்வளவு அறிவானது..
நான் உன்னைத் திட்டினால் அது வாடிப் போகிறது..
கொஞ்சினால் பசுமையாய் சிரிக்கிறது..
உன்னை நான் பிரிய நேர்ந்தால்
இலைகளை உதிர்த்து வெறுமை ஆகிறது..
மீண்டும் சேர்ந்தால் துளிர் விட்டாடுகிறது..
தினம் தினம் உன் வாசத்தை வாங்கியே
வளர்ந்து செழிக்கிறது..
உன் சுவாசத்தை மொட்டாக்கி
பூக்கக் காத்திருக்கிறது…
உன் தொடுதலின் ஸ்பரிசத்தில்
சிலிர்த்து மலர்கிறது..
உன் அசைவுக்கு அது இசைகிறது..
அடியே.. என்னைப் போல்
இந்தப் பூச்செடிக்கும் புரிந்திருக்கிறது
உந்தன் புனிதம் !
இந்தப் பூச்செடிதான்
எவ்வளவு அறிவானது..
நான் உன்னைத் திட்டினால் அது வாடிப் போகிறது..
கொஞ்சினால் பசுமையாய் சிரிக்கிறது..
உன்னை நான் பிரிய நேர்ந்தால்
இலைகளை உதிர்த்து வெறுமை ஆகிறது..
மீண்டும் சேர்ந்தால் துளிர் விட்டாடுகிறது..
தினம் தினம் உன் வாசத்தை வாங்கியே
வளர்ந்து செழிக்கிறது..
உன் சுவாசத்தை மொட்டாக்கி
பூக்கக் காத்திருக்கிறது…
உன் தொடுதலின் ஸ்பரிசத்தில்
சிலிர்த்து மலர்கிறது..
உன் அசைவுக்கு அது இசைகிறது..
அடியே.. என்னைப் போல்
இந்தப் பூச்செடிக்கும் புரிந்திருக்கிறது
உந்தன் புனிதம் !
No comments:
Post a Comment