Saturday, 30 April 2011

புரியாத இனம்…


சொந்த மண்ணில் சொந்த மொழி பேச
கூசுகிற இனம்
உலகின் எந்த மூலையிலும் இல்லை
தமிழினத்தைத் தவிர..
தமிழில் பேசினால் தரக்குறைவெனக் கருதி
ஆயாவிடம் கூட ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறோம்..
தமிழில் பேசினால் தண்டனை விதிக்கிற
பள்ளிகள்மேல்தான் மோகம் நமக்கு..
ஆங்கிலம் தவறில்லை..
அயல்மொழி தவறில்லை..
அவசியப்படும் இடங்களில் மட்டும்..
actually-களில் தொடங்கி so-க்கள் கலந்து
ok-க்கள் கொட்டி thankyou-க்களில் முடிக்கும்
நமக்கு புரிவதில்லை..
தாய்மொழியை அசிங்கப்படுத்துவதும்
தாயை விபச்சாரப் படுத்துவதும்
ஒன்று என்பது..
.
செம்மொழித் தமிழ் மாநாடு துளியாவது மாற்றங்களை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையோடு..
பிரியமுடன்…
பிரியன்…

No comments: